புதுசா விற்பனைக்கு வந்த மஹிந்திரா கார் இவ்ளோ மைலேஜை தருமா!! டாடா நெக்ஸானை சம்பவம் பண்ண இதவிட வேற என்ன வேணும்!!
இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ நேற்றைய (ஏப்ரல் 29) தினம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நம்ப முடியாத விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த கார் நம்ப முடியாத மைலேஜை வழங்கும் திறனையும் இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.
இந்த பதிவில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ-வின் எந்த வேரியண்ட் எவ்வளவு மைலேஜ் தரும் என்கிற தகவலையே பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம். மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. நேற்றைய தினமே இந்த கார் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகமாக இந்த காருக்கு ரூ. 7.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 15.49 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் எக்ஸ்யூவி 300 எஸ்யூவி-யும் ஒன்றாகும்.
இதன் அப்டேட்டட் வெர்ஷனே புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். இதனை பல நிலைகளில் மஹிந்திரா நிறுவனம் தற்போது அப்டேட் செய்திருக்கின்றது. குறிப்பாக, முன் மற்றும் பின் பக்கத்தை மிகவும் உயரமான ஸ்பீடு பிரேக்கர்களை சமாளிக்கும் விதமாகவும், டிரைவருக்கு மிக சிறப்பான பார்வை திறனை வழங்கும் வகையில் இந்த காரை மேம்படுத்தி இருக்கின்றது.
அத்துடன், இந்த காரின் பாதுகாப்பு திறனை மேலும் பலமடங்கு பலப்படுத்தி இருக்கின்றது. ஆகையால், பாதுகாப்பு விஷயத்தில் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மிக சிறந்த கார் மாடல் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மைலேஜ் தருவதிலும் இந்த கார் மாடல் மிக சிறந்த ஒன்று என்பது தெரிய வந்திருக்கின்றது.
இந்த காரில் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் இரண்டு டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, பெட்ரோலில் இரண்டு விதமான மோட்டார் தேர்வும், ஒற்றை டீசல் மோட்டார் தேர்வும் வழங்கப்படுகின்றது. இதில் அதிகம் மைலேஜை வழங்கக் கூடியதாக டீசல் ஏஎம்டி-யே உள்ளது.
அது ஒரு லிட்டருக்கு 21.20 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று வழங்கி இருக்கின்றது. இது 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகும். இதே மோட்டாரின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் 20.60 கிமீட்டரை ஒரு லிட்டருக்கு மைலேஜை வழங்கும் என்றும் அது தெரிவித்து இருக்கின்றது.
இதற்கு அடுத்தபடியாக அதிகம் மைலேஜ் தரும் இடத்தில் 1.2 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் மோட்டார் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு உள்ளது. இது ஒரு லிட்டருக்கு 20.10 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும். இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இருக்கின்றது.
இது ஒரு லிட்டருக்கு 18.89 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும். இதேபோல், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ 1.2 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் லிட்டருக்கு 18.20 கிமீ மைலேஜையும், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 17.96 கிமீ மைலேஜையும் வழங்கும்.
அனைத்தும் அராய் வழங்கிய சான்றின்படி வெளியாகிய மைலேஜ் விபரங்கள் ஆகும். இந்த காருக்கு இன்னும் புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கவில்லை. வருகின்ற 15 மே-வில் இருந்து இந்த பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதைத்தொடர்ந்து அதே மாதம் 26 ஆம் தேதி முதல் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ டெலிவரி பணிகளும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காரின் வருகை டாடா நெக்ஸானுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடல்களில் ஒன்றே எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ. இந்த காரை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகவும் மஹிந்திரா உருவாக்கி இருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. எனவே இந்த காரின் விற்பனை மிகப் பெரிய அளவில் வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








