புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் சீக்கிரமே அதன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி (XUV 3XO SUV) காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கான நாள் வருகின்ற 29ஆம் தேதி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தநிலையிலேயே இந்த புதிய காரின் பக்கம் இந்தியர்களைக் கவரும் விதமாக மஹிந்திரா நிறுவனம் அந்த கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.
அந்தவகையில், புதிய தகவலாக இந்த காரின் மைலேஜ் திறன் பற்றிய விபரங்களும், அதீத திறன் வெளிப்பாடு பற்றிய விபரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி வழங்கப்பட இருக்கின்றது.

முன்னதாக டீசல் மோட்டாருடன் வழங்கப்பட்டு வந்த ஏஎம்டி-க்கு பதிலாகவே இந்த புதிய கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன் சேர்த்து புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 20.1 கிமீ வரை மைலேஜ் தரும் என்கிற தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆனால், இந்த மைலேஜை புதிய கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்ட டீசல் மோட்டார்தான் தரும் என்பது பற்றிய எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த மைலேஜ் பற்றிய தகவலுடன் சேர்த்தே அந்த காரின் அதீத திறன் வெளிப்பற்றிய தகவலும் வெளியாகி இருக்கின்றது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை வெறும் 4.5 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் என கூறப்படுகின்றது.
எனவே வரவிருக்கும் புதிய மஹிந்திரா கார் அதிக மைலேஜை மட்டுமல்ல அதீத திறனை வெளியேற்றும் தயாரிப்பாக இருக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், ஜிப் (Zip), ஜேப் (Zap) மற்றும் ஜூம் (Zoom) ஆகிய ரைடிங் மோட்களும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.
இப்போது வரை என்னென்ன எஞ்சின் தேர்வுகள் வரவிருக்கும் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவியில் வழங்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இத்துடன், 6 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் புதிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா நிறுவனம் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி காரில் பலதரப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை வழங்கி இருப்பதை ஏற்கனவே வெளியாகி இருக்கும் டீசர் படங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
அந்தவகையில், இந்த காரின் டேஷ்போர்டு முற்றிலும் புதியதாக காட்சியளிக்கின்றது. அதில், இரண்டு 10.25 அங்குல திரைகள் இடம் பெற இருக்கின்றன. அதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமகாவும் மற்றொன்று டிரைவருக்கான திரையாகவும் செயல்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் க்ளைமேட் கன்ட்ரோல் பேனலும் அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதுமட்டுமின்றி, ஏற்கனவே வெளியாகிய டீசர் படங்களால் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ புதிய பனோரமிக் சன்ரூஃப், ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்வதற்கான புஷ் பட்டன், டூயல் ஜோன் ஏசி, பின் பக்கத்திற்கான தனி ஏசி துவாரங்கள், க்ரூஸ் கன்ட்ரோல், காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் ஒயர்லெஸ் செல்போன் சார்ஜிங் கருவி உள்ளிட்டவை இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
இதேபோல் பாதுகாப்பை வழங்குவதிலும் இந்த கார் மிக சிறந்ததாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் அடாஸ் போன்ற அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி 300 மாடலின் அப்டேட்டட் வெர்ஷன் ஆகும். அப்டேட்டின் வாயிலாக புதிய அவதாரத்தை அந்த கார் எடுக்க இருப்பதால் அதற்கு புதிய பெயர் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த காரின் வருகைக்கு இந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








