திடீரென இந்த காரின் விலையை ஏற்றிய மஹிந்திரா! சேல்ஸ் ஆகலேன்னாலும் பராவாயில்லைன்னு ஏத்திட்டாங்க!

மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற காருக்கான விலையை தற்போது அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கார் அறிமுகமான ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது இந்தியா முழுவதும் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் இந்த காலகட்டத்தில் வாகன விற்பனை அதிகமாக இருக்கும் இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களில் எல்லாம் இந்த காலகட்டத்தில் தங்கள் விற்பனை அதிகரிப்பதற்காக தங்கள் வாகன விலையில் பல்வேறு தள்ளுபடிகளையும் ஆஃபர்களையும் வழங்கி வருகிறார்கள். இதனால் வழக்கமாக கார் வாங்கும் விலையை விட தற்போது கார் வாங்கினால் விலை குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Mahindra XUV 3XO prices hike

மார்க்கெட் ஒரு பக்கம் இப்படி சென்று கொண்டிருக்க மஹிந்திரா நிறுவனமோ இதற்கு நேர் எதிர் மாறாக இந்த நேரத்தில் தனது வாகனங்களுக்கான விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை அந்நிறுவனம் உடனடியாகவும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது பலரை அதிர்ச்சி அடைய வைத்திருந்தாலும், இந்நிறுவனம் தொடர்ந்து விற்பனையில் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், இந்த விலை உயர்வு எல்லாம் விற்பனையை எந்த விதத்திலும் பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி மஹிந்திரா நிறுவனம் தனது சப்-காம்பேக்ட் எஸ்யூவி காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற காருக்கான விலையை ரூபாய் 30,000 வரை அதிகரித்துள்ளது. இந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் தான் முதல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 என்ற பெயரில் விற்பனையாகி வந்த காரை அப்டேட் செய்து இந்நிறுவனம் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற பெயரில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

Mahindra XUV 3XO prices hike

இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானது பிறகு முதல் முறையாக தற்போது தான் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த காருக்கான சில வேரியன்ட்களுக்கு மட்டுமே விலை உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் இந்த விலை உயர்வு பல்வேறு விதமான வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விரிவான விபரங்களை பார்ப்போம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் எம்எக்ஸ் 1 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல், ஏஎஸ் 5 1.2லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக், எம்எக்ஸ்2 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் 1.2லிட்டர் மேனுவல் ஆகிய வேரியன்ட்களுக்கு ரூபாய் 30,000 வரை விலை விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

Mahindra XUV 3XO prices hike

அடுத்ததாக எம்எக்ஸ் 3 1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக், ஏஎக்ஸ் 5 எல் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல், 1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக், எம்எக்ஸ் 2 ப்ரோ 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல், எம்எக்ஸ் 3 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல், எம்எக்ஸ் 2 ப்ரோ 1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ஆகிய வேரியன்ட்களுக்கு ரூபாய் 25000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக எம்எக்ஸ்2 ப்ரோ 1.5 லிட்டர் டீசல் மேனுவல், எம்எக்ஸ் 3 1.5 லிட்டர் டீசல் மேனுவல், எம்எஸ் 3 1.5 லிட்டர் டீசல், ஏஎக்ஸ்5 1.5 லிட்டர் டீசல் மேனுவல், ஏஎக்ஸ் 1.5 லிட்டர் டீசல் ஏஎம்டி ஆகிய வேரியண்ட்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள வேரியண்ட்களை தவிர மற்ற வேரியன்ட்களுக்கு விலையில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை.

இந்த விலை ஏற்றம் எல்லாம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து ஏற்றப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் தற்போது இந்த மஹிந்திராவின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மார்க்கெட்டில் ரூபாய் 7.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதிகபட்சமாக ரூ 15.49 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது. இதனால் இந்த காருக்கு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த விலை உயர்வை மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு பெரிய அளவில் இல்லை என்பதால் இதனால் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2024, 12:50 [IST]
English summary
Mahindra xuv 3xo prices hike variant costs increase
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X