மாருதி கோட்டையை அடியோடு சரிக்க போகும் காரின் விலை இவ்ளோதானா! இதுக்கு முன்னாடி சொகுசு கார்களே ஒன்னும் இல்ல!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300). இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிசைன், புதிய வசதிகள் ஆகியவற்றுடன், இந்த புதிய மாடலானது, புதிய பெயருடனும் வந்துள்ளது. ஆம், மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய மாடலின் மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி மஹிந்திரா நிறுவனம் கடந்த மே மாதம் 10 ஆயிரம் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் வெறும் 5,125 மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை தற்போது 10 ஆயிரமாக உயர்ந்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

Mahindra XUV 3XO

இது 95 சதவீத வளர்ச்சி ஆகும். இத்தனைக்கும் கடந்த மே மாதம்தான் விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காருக்கு முதல் மாதம் ஆகும். கடந்த மே 26ம் தேதிதான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் டெலிவரி பணிகளே தொடங்கப்பட்டன. வெறும் ஆறே நாட்களில், 10 ஆயிரம் பேருக்கு இந்த கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது!

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில், 10.25 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை முக்கியமானவை ஆகும். இவை தவிர வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Mahindra XUV 3XO Display

மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனரோமிக் சன்ரூஃப், 7 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், புத்தம் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பை பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் DI பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை வெறும் 7.49 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இந்த புத்தம் புதிய காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மிகச்சிறந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. எனவேதான் முதல் மாதத்திலேயே மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களுக்கு வரும் மாதங்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ வடிவில் மிகப்பெரிய போட்டி காத்து கொண்டுள்ளது என்பதே எங்கள் கருத்து!

More from DriveSpark

Article Published On: Monday, June 10, 2024, 23:56 [IST]
English summary
Mahindra xuv 3xo sales report may 2024 95 per cent growth
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+