மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO) எனும் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது நிறுவனத்தின் புகழ் பெற்ற கார் மாடல்களில் ஒன்றான எக்ஸ்யூ300 (XUV 300)-இன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

இதில் அப்டேட்டின்கீழ் பலதரப்பட்ட சிறப்பம்சங்களை மஹிந்திரா நிறுவனம் வாரி வழங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் சில டீசர் படங்களை (Teaser Pic) வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், தற்போது நிறுவனம் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.

Mahindra xuv 3xo

இந்த டீசர் படம் வாயிலாக விரைவில் அறிமுகமாக இருக்கும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் மாடல் அட்ரினோ எக்ஸ் ஓஎஸ்-ஐ பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. மேலும், இந்த அம்சத்தின் வாயிலாக காரின் க்ளைமேட் கன்ட்ரோலை ரிமோட் வாயிலாக செய்ய முடியும் என்பதும் டீசர் படம் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் இந்த ஓஎஸ்-ஐ முதன் முதலில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரிலேயே அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடல் 2021 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், அட்ரினோ-எக்ஸ் தொழில்நுட்பம் வேற்று நிறுவனம் ஒன்றுடனான கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தகுந்தது.

போஸ் (Bosch) நிறுவனத்துடனான கூட்டணியின்கீழ் உருவாக்கப்பட்டதே அட்ரினோ-எக்ஸ் ஆகும். இது ஓர் ஏஐ வசதிக் கொண்ட இணைப்பு அம்சம் ஆகும். மிக சிறந்த பயன்பாட்டு அனுபவத்தை இந்த தொழில்நுட்பம் வழங்கும். இதனால்தான் இந்த அம்சம் கொண்ட மஹிந்திரா கார் தேர்வுகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே புதுமுக எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ-வில் அந்த தொழில்நுட்பத்தை மஹிந்திரா வழங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. வாடிக்கையாளர்களை எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ பக்கம் ஈர்க்கும் பொருட்டே இந்த அம்சத்தை அது வழங்கி இருக்கின்றது. இதனை ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் என இரண்டிலும் இணைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்று இன்னும் பல நவீன கால வசதிகளைத் தாங்கியதாகவே இந்த எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, 360 டிகிரி வியூ கேமிரா, 7 ஏர் பேக்குகள், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் லெவல் 2 அடாஸ் ஆகிய அம்சங்களே இந்த காரில் இடம் பெற இருக்கின்றன.

இன்னும் என்னென்ன அம்சங்களை எல்லாம் இந்த கார் தாங்கி இருக்கும் என்பதை மஹிந்திரா நிறுவனம் வருகின்ற 29 ஆம் தேதியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கின்றது. ஆமாங்க, அன்றைய தினமே இந்த காரை அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது.

இதன் வருகை இந்தியாவில் பல கார் மாடல்களுக்கு தலை வலியை ஏற்படுத்தக் கூடியதாக அமைய உள்ளது. அந்தவகையில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கே அது போட்டியாக அமைய இருக்கின்றது. புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மாடலுக்கு ஏற்கனவே இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன.

ரூ. 21 ஆயிரம் முன்தொகையில் இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. மேலும், பழைய எக்ஸ்யூவி 300 காருக்கு புக்கிங்கைக் கொடுத்தவர்களுக்கு புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ-விற்கு தங்களுடைய புக்கிங்கை மாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி300 மாடலைக் காட்டிலும் ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அதிக விலையைக் கொண்டதாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் நவீன கால அம்சங்கள் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்புகளில் அட்வான்ஸ்டு அம்சங்களை வாரி வழங்கத் தொடங்கி இருக்கின்றது. இதற்கு சான்றாக அதன் சமீபத்திய வெளியீடுகளும் மற்றும் புதிய வரவாக இருக்கும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ-வும் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 17, 2024, 16:09 [IST]
English summary
Mahindra xuv 3xo will get remote climate control powered by adrenox technology
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+