மஹிந்திராவோட இந்த காரு கேமிரா கண்கள்ல சிக்கியிருக்கா! எங்க வச்சு படம் பிடிச்சாங்க தெரியுமா?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் எக்ஸ்யூவி 300 (XUV300)-ம் ஒன்றாகும். இது ஓர் ஓஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்தியர்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனே தற்போது கேமிராவின் கண்களில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நம்முடைய வாசகர் ஒருவரின் கேமிராவின் கண்களிலேயே அது சிக்கியிருக்கின்றது. நிறுவனம் எக்ஸ்யூவி300 காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

Mahindra xuv300 facelift spotted

இதன் அடிப்படையிலேயே அதனை தற்போது தீவிர சாதனை பலபரீட்சையில் மஹிந்திரா உட்படுத்தி வருகின்றது. அவ்வாறு கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வைத்து அந்த கார் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. அப்போதே அது நம் வாசகரால் ஸ்பை செய்யப்பட்டு இருக்கின்றது. இந்திய சந்தையில் எஸ்யூவி கார் மாடலுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, சப்4 மீட்டர் பிரிவில் உள்ள எஸ்யூவி கார்களுக்கு வரவேற்பு மிக அமோகம். இந்த பிரிவை மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் உள்ளிட்ட கார் மாடல்களே மிகப் பெரிய அளவில் ஆளுகைச் செய்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் போட்டியாளனாகவே எக்ஸ்யூவி300 இருந்து வருகின்றது.

Mahindra xuv300 facelift spotted while testing

இந்த போட்டியை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே நிறுவனம் தற்போது மேம்படுத்தலுக்கு இந்த காரை ஆளாக்கி இருக்கின்றது. அதாவது, புதுப்பித்தலின்கீழ் இன்னும் சிறந்த கார் மாடலாக எக்ஸ்யூவி300-ஐ மஹிந்திரா மாற்றி இருக்கின்றது. இதன் படங்களையே நாம் இந்த பதிவில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மறைப்புகளால் இந்த கார் மறைக்கப்பட்டு இருந்தாலும் நிறுவனம் செய்திருக்கும் சில மாற்றங்களை நம்மால் அறிய முடிகின்றது.

அந்தவகையில், எல் வடிவ பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி லைட் இந்த புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. எக்ஸ்யூவி 400 இவி எலெக்ட்ரிக் காரிலும் இதே மாதிரியான லைட்-செட்டப்பே பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், எக்ஸ்யூவி 400 இவியிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்கால லேசாக இந்த காரில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

Mahindra xuv300 facelift spotted while testing in bengaluru

இத்துடன், ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்யூவி 300 எஸ்யூவி காரில் புதிய அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது. இதுபோன்ற சில மாற்றங்களை மட்டுமே இந்த காரில் மஹிந்திரா செய்திருக்கின்றது. வேறு என்னென்ன மாற்றங்களை நிறுவனம் செய்திருக்கின்றது என்பது பற்றி அறிய முடியவில்லை.

கார் முழுமையாக மறைக்கப்பட்டு இருந்ததாலும், சாலையில் சிட்டென பறந்ததாலும் அதை பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும், காரின் வெளிப்புறம் மற்றும் உள்பக்கத்திலும் இதுபோன்று இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விண்ட்ஷீல்டில் வைப்பர் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், பிரேக் லைட் மேலே தெளிவாக தெரியும் வகையில் ஸ்பாய்லரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. எனவே மஹிந்திரா இந்த காரின் பின்புறத்தையும் அழகாகக் காட்டும் வகையில் மாற்றங்களைச் செய்திருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. குறிப்பாக, காரின் உட்பக்கம் மேலும் அதிகப்படியான கவர்ச்சிக்கு உட்படுத்துட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் இதன் எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி 300 கார் மாடலில் வழங்கப்படும் அதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆப்ஷனே எதிர்பார்க்கப்படுகின்றது. கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மஹிந்திரா தார் மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார் மாடல்களுக்கே மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், தார் காருக்கு ஆண்டு கணக்கில் காத்திருப்பு காலம் நிலவும் அளவிற்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 31, 2024, 6:00 [IST]
English summary
Mahindra xuv300 facelift spotted while testing in bengaluru
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X