நாடே வாங்க காத்து கிடந்த புது மஹிந்திரா கார் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு? வீடியோவை பார்த்துவிட்டு புக் பண்ணுங்க
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ எஸ்யூவி காரை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்யூவி300 காரின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடலாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.49 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மக்கள் பலர் வாங்கும் எஸ்யூவி ரக கார்களுள் ஒன்றாக விளங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனாக களமிறக்கப்பட்டுள்ளதால், புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த காரை ஓட்டி பார்த்ததில், எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை ரிவியூ வீடியோவாக தொகுத்து வழங்கி உள்ளோம். அந்த வீடியோவை கீழே காணலாம்.
தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ முற்றிலும் புதிய காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காரின் முகப்பு பகுதியில் நிறைய வேலைப்பாடுகளை மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் முன்பகுதி நமக்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை ஞாபகப்படுத்துகிறது. அதேபோல், காரின் பின்பகுதியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மஹிந்திரா கொண்டுவந்துள்ளது.

காருக்குள் கேபின் முழுவதுமாக வெள்ளை - கருப்பு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. முக்கியமான தொழிற்நுட்ப அம்சமாக லெவல்-2 அடாஸ் இந்த புதிய காரில் கொடுக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








