2 லட்சமா! உலகையே திரும்பி பாக்க வைத்த இந்திய தயாரிப்பு! இனி ஒருத்தரும் வெளிநாட்டு சொகுசு கார் வாங்க மாட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). இந்த கார் பிரம்மாண்டமான மைல்கல் (Milestone) ஒன்றை தற்போது கடந்துள்ளது. 2 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். மஹிந்திரா நிறுவனம் வெறும் 33 மாதங்களில், 2 லட்சம் எக்ஸ்யூவி700 கார்களை உற்பத்தி செய்துள்ளது. 1 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை கடக்க மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் 21 மாதங்களை எடுத்து கொண்டது. ஆனால் அடுத்த 1 லட்சம் கார்கள் வெறும் 12 மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டு விட்டன.
ஆக மொத்தத்தில், 33 மாதங்களில் 2 லட்சம் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்த சாதனையை கொண்டாடும் வகையில், மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரில், 2 புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது. அவை டீப் ஃபாரஸ்ட் மற்றும் பர்ண்ட் சியன்னா ஆகியவை ஆகும்.

இதில் டீப் ஃபாரஸ்ட் கலர் ஆப்ஷனானது, மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற கார்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பர்ண்ட் சியன்னா அப்படிப்பட்டது அல்ல. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்காக இந்த கலர் ஆப்ஷன் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கலர் ஆப்ஷன்கள், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விற்பனையை அதிகரிக்க உதவி செய்யும் என நம்பலாம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்கள் ஆகும். இதில், பெட்ரோல் இன்ஜினானது அதிகபட்சமாக 197 பிஹெச்பி பவர் மற்றும் 380 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் டீசல் இன்ஜினானது அதிகபட்சமாக 182 பிஹெச்பி பவர் மற்றும் 450 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
இந்த காரின் டாப் டீசல் வேரியண்ட்களில், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரானது மொத்தம் 7 வேரியண்ட்களில் கிடைக்கும். அவை MX, AX3, AX5, AX5 செலக்ட், AX7, AX7 லக்ஸரி மற்றும் AX7 லக்ஸரி பிளாஸ் எடிசன் ஆகியவை ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 13.99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கிடைக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 26.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரானது, 5 சீட்டர், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அத்துடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்படுகின்றன.
இவை எல்லாம் தவிர, அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 7 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிநவீன மற்றும் சொகுசு வசதிகள் நிரம்பிய ஒரு எஸ்யூவி ரக காரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அடாஸ் போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் வழங்கப்படுவது இந்த காரின் பலம்!


Click it and Unblock the Notifications








