ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காருக்கு இந்த ஏப்ரல் மாதம் ரூபாய் 1.50 லட்சம் வரையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. மேலும் இந்த காருக்கான காத்திருப்பு காலமும் தற்போது குறைந்துள்ளது. இதனால் இந்த காரை புக் செய்த ஆறு மாதத்திற்குள் டெலிவரி கிடைத்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் பாருங்கள்.

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் அந்நிறுவனத்தின் பிளக்ஷிப் காராக பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் பிரபலமான எஸ்யூவி கார்களில் ஒன்றாக இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த காருக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருந்தது. இந்த காரை புக் செய்தால் 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலைகள் எல்லாம் இருந்தது.

mahindra xuv700 april offer

இந்நிலையில் இந்த காருக்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை உணர்ந்த மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் தயாரிப்பை அதிகப்படுத்தியது. இதனால் தற்போது இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சமான ஆறு மாதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் பலர் இந்த காரை புக் செய்து வாங்கி வருகிறார்கள். காத்திருந்த பலருக்கு இந்த காரின் டெலிவரி என்பதும் கிடைத்துவிட்டது.

இந்நிலையில் இந்த ஏப்ரல் மாதம் இந்த காரை வாங்க விரும்புபவர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் ரூபாய் 1.50 லட்சம் வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. கடந்த 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு போகாத கார்களுக்காக இந்த தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட் ஆகிய இரண்டு கார்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தள்ளுபடிகள் குறித்த விரிவான விபரங்களை காண்போம்.

mahindra xuv700 april offer

இதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் ஏஎக்ஸ் 7 ஆல்வீல் டிரைவ் 7 சீட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கார், ஏஎக்ஸ்7எல் ஆல்வீல் டிரைவ் 7 சீட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், ஏஎக்ஸ் 3 5சீட்டர் மற்றும் 7சீட்டர், ஏஎக்ஸ்5 5சீட்டர் மற்றும் 7சீட்டர், எம்எக்ஸ் 5சீட்டர் ஆகிய டீசல் வேரியன்ட் கார்களுக்கு ரூ1.5 லட்சம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுபடி என்பது 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

அடுத்ததாக ஏஎக்ஸ்3 5சீட்டர், ஏஎக்ஸ்5 5சீட்டர், ஏஎக்ஸ்7 7சீட்டர்,எம்எக்ஸ் 5 சீட்டர் ஆகிய பெட்ரோல் வேரியண்ட் கார்களுக்கும் ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த கார்களும் கடந்த 2023-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு இந்த தள்ளுபடிகள் கிடையாது.

mahindra xuv700 april offer

இதுபோக ஏஎக்ஸ் 7எல் 7சீட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக், ஏஎக்ஸ்3 5சீட்டர் டீசல் மேனுவல் ஆகிய கார்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடியும், ஏஎக்ஸ்5 7சீட்டர் டீசல், ஏஎக்ஸ்5 7சீட்டர் பெட்ரோல் மேனுவல் ஆகிய கார்களுக்கு ரூபாய் 1.30 லட்சம் தள்ளுபடியும், ஏஎக்ஸ்3 7சீட்டர் டீசல் மேனுவல் காருக்கு ரூபாய் 1.1 லட்சம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரின் இன்ஜினை பொறுத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது 200 எச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இன்ஜின் ஆப்ஷனாக 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது.

mahindra xuv700 april offer

இது 155 எச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனுடன் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரில் உள்ள அம்சங்களை பற்றி பார்க்கும் போது பின்பக்கம் பார்க்கிங் சென்சார், காரின் உள்ளே டிரைவர் சீட் உயர்த்தை அட்ஜஸ்ட் செய்யும் ஆப்ஷன், பின்பக்கம் ஸ்பாய்லர் மற்றும் ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட் ஆப்ஷன், பின்பக்க வைப்பர் மற்றும் டிஃபாக்கர், எல்இடி டர்ன் இன்டிகேட்டர் அம்சங்கள் உள்ளன. முக்கியமாக இந்த காரில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் பங்க்ஷன்கள் டாப் வேரியன்டில் உள்ளன.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் பைலட் அசிஸ்ட், டிராபிக் சைன் ரெககனேசன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும் பாதுகாப்பிற்காக 7 ஏர் பேக்குகள், டிராக்ஷன் கண்ட்ரோல், பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், 360 டிகிரி கேமரா, உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை வாங்க ஏகப்பட்ட மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். பலர் காரை புக் செய்துவிட்டு டெலிவரிக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த காருக்காக தள்ளுபடிகள் வழங்குவது எல்லாம் அபூர்வமான விஷயமாக இருக்கும். மக்கள் மத்தியில் அதிக டிமாண்ட் இருக்கும் காருக்கு பெரும்பாலும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி வழங்காது. இந்த தள்ளுபடி நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் ரூபாய் 1.5 லட்சம் மிச்சம் செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 18, 2024, 10:57 [IST]
English summary
Mahindra xuv700 april offer discounts benefits and deals
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X