சன்ரூஃப்-இல் இருந்து எல்லாமே கிடைக்கும்!! புது மஹிந்திரா காரின் விலை இதுதான்... மிடில்-கிளாஸ் மக்களுக்கான கார்

மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரில் புதியதாக ஏ.எக்ஸ்5 செலக்ட் (AX5 Select) வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.16.89 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எக்ஸ்யூவி700 காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஸ்கார்பியோவுக்கு அடுத்து, மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் காராக 2வது இடத்தில் எக்ஸ்யூவி700 உள்ளது. முதன்முதலாக 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் எக்ஸ்யூவி700 அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காரின் நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் மாடலாக எக்ஸ்யூவி700 உருவாக்கப்பட்டது.

mahindra xuv700 ax5 select introduced

5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் என 2 விதமான வெர்சன்களில் எக்ஸ்யூவி700 கார் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. அதேபோல், எம்.எக்ஸ், ஏ.எக்ஸ்3, ஏ.எக்ஸ்5, ஏ.எக்ஸ்7 என 4 விதமான வேரியண்ட்களில் இந்த மஹிந்திரா கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், எக்ஸ்யூவி700 காரில் புதிய வேரியண்ட் 'ஏ.எக்ஸ்5 செலக்ட்' என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்5 செலக்ட் வேரியண்ட்டை 7-சீட்டர் வெர்சனில் மட்டுமே வாங்க முடியும். அதாவது, 7 இருக்கைகள் உடன் மட்டுமே இந்த கார் கிடைக்கும். பெட்ரோல் என்ஜின் உடன் புதிய ஏ.எக்ஸ்5 செலக்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.89 லட்சமாகவும், டீசல் என்ஜின் உடன் ரூ.17.49 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

mahindra xuv700 ax5 select introduced

புதிய ஏ.எக்ஸ்5 செலக்ட் வேரியண்ட்டின் அறிமுகத்துடன், மற்ற வேரியண்ட்களின் (ஏ.எக்ஸ்7 வேரியண்ட்டை தவிர்த்து) விலைகளும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் எம்.எக்ஸ் வேரியண்ட்டில் இருந்து ஏ.எக்ஸ்5 வேரியண்ட் வரையில் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.99 லட்சத்தில் இருந்து ரூ.18.79 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

புதிய எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்5 செலக்ட் வேரியண்ட்டில் சன்ரூஃப், 26.03 செ.மீ-இல் இரட்டை எச்டி சூப்பர்திரைகள் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி உள்ளிட்டவற்றை பெறலாம். இதில் சூப்பர் திரைகளின் வாயிலாக வரைப்படத்துடன் நேவிகேஷன் மற்றும் 75க்கும் அதிகமான கனெக்டட் வசதிகளுடன் அட்ரெனாக்ஸ் போன்ற அம்சங்களை பெற முடியும்.

mahindra xuv700 ax5 select introduced

அமேசான் அலெக்ஸா இந்த புதிய காரில் பில்டு-இன் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே கனெக்ட்டிவிட்டி, 6 ஸ்பீக்கர்கள், 3வது வரிசை இருக்கை பயணிகளுக்கும் ஏசி, 2வது வரிசை இருக்கைகளில் ஆர்ம்ரெஸ்ட் & கப் ஹோல்டர், மடக்கி அட்ஜெஸ் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், காரின் வேகத்தை உணர்ந்து லாக் ஆகும் கதவுகள், அட்ஜெஸ் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் உள்ளிட்டவையும் புதிய எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்5 வேரியண்ட்டில் இடம்பெற்றுள்ளன.

2வது இருக்கை வரிசையை தேவையென்றால் ஒன் டச் மூலம் 60:40 என்கிற விகிதத்தில் மடக்கிக் கொள்ளலாம். பின்பக்கத்தை காட்டும் வெளிப்பக்க கண்ணாடிகளை எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்துக் கொள்ளலாம். காரின் சக்கரங்களுக்கு முழு அளவில் கவர்கள் கிடைக்கும். அட்ரெனாக்ஸ் கனெக்ட் செயலி 1 வருட இலவச சந்தா திட்டத்துடன் கிடைக்கும்.

mahindra xuv700 ax5 select introduced

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனையை அதிகரிக்க எக்ஸ்யூவி700 காரில் அவ்வப்போது மஹிந்திரா நிறுவனம் புதிய வேரியண்ட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வகையில் சமீபத்தில், எக்ஸ்யூவி700 காரின் எம்.எக்ஸ் வேரியண்ட்டில் 7-சீட்டர் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல், இந்த காரின் ஏ.எக்ஸ்7 எல் வேரியண்ட்டில் புதியதாக பிளேஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது. அவற்றை தொடர்ந்து தற்போது புதிய ஏ.எக்ஸ்5 செலக்ட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 22, 2024, 20:24 [IST]
English summary
Mahindra xuv700 ax5 select introduced at 16 89 lakh check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X