மஹிந்திராவுக்கு எவ்வளவு பெரிய தாராள மனசு... லட்ச ரூபாய்களில் விலையை குறைப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்ல!!
மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் கார் நிறுவனங்களுள் ஒன்று. மஹிந்திராவில் இருந்து தற்சமயம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களுள் ஒன்று, எக்ஸ்யூவி700 ஆகும். 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், எக்ஸ்யூவி700 கார்களை அவ்வப்போது அப்டேட் செய்ய மஹிந்திரா நிறுவனம் எப்போதும் மறப்பதில்லை. அந்த வரிசையில் தற்போது எக்ஸ்யூவி700 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, எக்ஸ்யூவி700 கார்களை எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஏற்கனவே கூறியதுபோல், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் 2021ஆம் ஆண்டு இறுதியில் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகையில் பார்த்தால், எக்ஸ்யூவி700 அறிமுகம் செய்யப்பட்டு இன்னும் சில மாதங்களில் வெற்றிக்கரமாக 3 வருடங்கள் நிறைவடைய உள்ளன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இன்னும் 4 மாதங்களில் எக்ஸ்யூவி700 3ஆம் ஆண்டு நிறைவை கொண்டாட உள்ளது.

இதனை முன்னிட்டே எக்ஸ்யூவி700 காரின் விலைகளை மஹிந்திரா நிறுவனம் கணிசமாக குறைத்துள்ளது. இதன்படி, எக்ஸ்யூவி700 காரின் அனைத்து வேரியண்ட்களின் விலைகளும் குறைக்கப்படவில்லை. டாப் வேரியண்ட்டான ஏ.எக்ஸ்7-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்7 வேரியண்ட் ஆனது ஸ்டாண்டர்ட் மற்றும் லக்சரி என 2 விதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
அதாவது, லக்சரி ஆப்ஷனில் சில லக்சரியான வசதிகள் கிடைக்கும். இந்த ஆப்ஷனில் கிடைக்கும் வேரியண்ட்டை ஏ.எக்ஸ்7 எல் என அழைக்கின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்7 வேரியண்ட்டை 6-சீட்டர் அல்லது 7-சீட்டர் அல்லது 7-சீட்டர் ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷனில் வாங்கலாம். அதேபோல், இந்த டாப் வேரியண்ட் ஆனது பெட்ரோல் மற்றும் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் இவற்றை வாங்கலாம். இவ்வாறு பல்வேறு விதமான ஆப்ஷன்களில் கிடைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்7 வேரியண்ட்டின் குறைக்கப்பட்ட புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.19.69 லட்சத்தில் இருந்து ரூ.24.99 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், 3ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்ட ஸ்பெஷல் விலைகள் இவை ஆகும்.
அதாவது, எக்ஸ்யூவி700 காரின் 3வது ஆனிவர்சரிக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதுவரையில் மட்டுமே இந்த சலுகை விலைகள் அமலில் இருக்குமாம். கடந்த 3 வருடங்களில் சுமார் 2 லட்சம் எக்ஸ்யூவி700 கார்களை மஹிந்திரா உற்பத்தி செய்துள்ளது. இவ்வாறு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் எக்ஸ்யூவி700 காரின் டாப் ஏ.எக்ஸ்7 வேரியண்ட்டில் லெவல்-2 அடாஸ், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸான வசதிகள் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, பனோராமிக் ஸ்கைரூஃப், ட்யூயல் எச்டி சூப்பர் ஸ்க்ரீன் மற்றும் 12 ஸ்பீக்கர்கள் உடன் சோனியின் 3டி ஆடியோ, லெதரேட்டட் இருக்கைகள் போன்ற சவுகரியமான அம்சங்களும் எக்ஸ்யூவி700 ஏஎக்ஸ்7 காரில் ஏகப்பட்டவை இடம்பெற்றுள்ளன. இத்தகைய வேரியண்ட்டின் விலையை குறைப்பதற்கு முன்னர், எக்ஸ்யூவி700 காரில் புதியதாக டீப் ஃபாரஸ்ட் மற்றும் பர்ண்ட் செய்ன்னா என்கிற பெயிண்ட் ஆப்ஷன்களை மஹிந்திரா அறிமுகப்படுத்தி இருந்தது.
அதுபோன்று, சில மாதங்களுக்கு முன்னர், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் ஏ.எக்ஸ்5 செலக்ட், எம்.எக்ஸ் 7-சீட்டர் மற்றும் பிளேஸ் எடிசன் உள்ளிட்ட புதிய வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன. இவ்வாறு எக்ஸ்யூவி700 காரில் புது, புது அப்டேட்களை அவ்வப்போது மஹிந்திரா கொண்டுவருவதற்கு காரணம், வாடிக்கையாளர்களை கவர்வது என்கிற நோக்கமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் முழுக்க முழுக்க எஸ்யூவி கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டது. அந்த வகையில், மஹிந்திரா சமீப காலத்தில் அறிமுகப்படுத்திய தரமான எஸ்யூவி கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 ஆகும். இத்தகைய எஸ்யூவி காரை தொடர்ந்து 3 வருடங்களாக மஹிந்திரா நிறுவனம் சிறப்பாக விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








