2,500 பேருக்கு மட்டும்தான் இந்த மஹிந்திரா கார் கெடைக்கும்! அதுக்கப்புறம் அம்பானியாவே இருந்தாலும் தர மாட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). இதன் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பிளாஸ் எடிசன் (Blaze Edition) என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின், AX7L வேரியண்ட் (Variant) அடிப்படையில், பிளாஸ் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. இது 7 சீட்டர் மாடல் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் பிளாஸ் எடிசன் மாடலில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. இதில் பெட்ரோல் இன்ஜினானது, அதிகபட்சமாக 195 பிஹெச்பி பவர் மற்றும் 380 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் இன்ஜினானது, அதிகபட்சமாக 182 பிஹெச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இதில், பெட்ரோல் இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி700 பிளாஸ் எடிசன் மாடலின் ஆரம்ப விலை 24.24 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது டீசல்/மேனுவல் மாடலின் விலை ஆகும். அதே நேரத்தில் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடலின் விலை 25.54 லட்ச ரூபாய் ஆகவும், டீசல்/ஆட்டோமேட்டிக் மாடலின் விலை 26.04 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது குறிப்பிடத்தக்கது.

இது விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை. இதில், 10.25 இன்ச் அளவுடைய 2 திரைகள் மிகவும் முக்கியமானது ஆகும். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய சோனி சவுண்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். அத்துடன் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தையும் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. இது ஸ்பெஷல் எடிசன் மாடல் என்பதால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படவுள்ளது. அதாவது 2,500 பிளாஸ் எடிசன் மாடல்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ளது. எனவே 2,500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் பிளாஸ் எடிசன் மாடல் கிடைக்கும்.
இந்த சூழலில், இந்தியா முழுவதும் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் டீலர்ஷிப்களுக்கு, எக்ஸ்யூவி700 காரின் பிளாஸ் எடிசன் மாடல் தற்போது வர தொடங்கியுள்ளது. எனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் பிளாஸ் எடிசனின் டெலிவரி பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சாலைகளில் ஏராளமான மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் ஓடி கொண்டுள்ளன. இதில் இருந்து வித்தியாசமாக, சற்று தனித்தன்மையுடன் தெரிய வேண்டும் என விரும்ப கூடிய வாடிக்கையாளர்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் பிளாஸ் எடிசனை தேர்வு செய்யலாம். ஏனெனில் மொத்தம் 2,500 பேருக்கு மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








