வெறும் 2500 பேர் மட்டுமே இந்த காரை வாங்கலாம்! இப்பவே ஷோரூம் வாசல்ல லைன்ல நின்னா தான் இந்த கார் கிடைக்கும்!

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 எஸ்யூவி காரில் பிளேஸ் எடிஷன் என்ற ஸ்பெஷல் எடிசன் எஸ்யூவி காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது தனித்துவமான மேட் சிவப்பு நிற பெயிண்ட் ஆப்ஷன் உடன் ஆங்காங்கே கருப்பு நிற அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை மற்றும் மற்ற விபரங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருக்கிறது. குறிப்பாக எக்ஸ்யூவி 700 கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த எஸ்யூவி 700 காரில் ஸ்பெஷல் மற்றும் லிமிடெட் எடிஷனாக பிளேஸ் எடிஷன் என்ற காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

mahindra xuv 700 blaze edition

இந்த கார் தனித்துவமான மேட் சிவப்பு நிற பெயிண்ட் ஸ்கீமில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆங்காங்கே கருப்பு நிற அம்சங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கலர் ஸ்கீமில் இதுவரை இந்த எக்ஸ்யூவி 700 கார் தயாரிக்கப்படவில்லை. இது ஒரு தனித்துவமாக தயாரிக்கப்பட்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக இந்த காரில் உள்ள ரூஃப் பகுதி, மிரர் பகுதி, கிரில், அலாய் வீல், ஏ பி சி பில்லர்கள் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் முன்பக்க ஃபென்டர் பகுதியிலும் டெயில்கேட் பகுதியில் பிளேஸ் எடிசன் கார் என்பதை குறிக்கும் வகையில் பேட்ஜ்கள் இடம் பெற்று இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை அனைத்தும் கருப்பு நிறங்களில் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு கான்ட்ராஸ்ட்டாக சிவப்பு நிற தையல் கொண்டு இதன் அப்ஹோல்சரிகள் தயார் செய்யப்பட்டிருக்கும் எனவும் ஏசி வென்ட் சென்ட்ரல் கண்ட்ரோல் பகுதியிலும் சிவப்பு நிற ஆக்சென்ட்கள் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 700 பிளேஸ் எடிசன் காரை பொறுத்தவரை ஏஎக்ஸ் 7 எல் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டு அதில் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரு வேரியண்டில் மட்டுமே இந்த கார் தயாரிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் இதற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதன்படி மஹிந்திரா எக்ஸ்யூவி 700 பிளேஸ் எடிஷன் கார் 7 சீட்டர் ஆப்ஷன் உடன் பெட்ரோல் இன்ஜின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜினை பொறுத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் இன்ஜினின் பவரை பொருத்தவரை 200 எச்பி பவரும், 380 வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது 185 எச்பி பவரும் 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸில் 450 என்எம் டார்க் திறனனுடன் வெளிப்படுத்தும் கொண்டதாக இது வடிவமைக்கப்படுகிறது.

இந்த பிளேஸ் எடிசன் கார் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வந்தாலும் இதில் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்காது என்ற எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜினில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனும் டீசல் இன்ஜினியரிங் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு விதமான கியர் ஆப்ஷனும் கொண்டதாக இந்த கார் விற்பனைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இது ஒரு லிமிடெட் எடிஷன் கார் என்பதால் இந்த காரை 2500 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் இந்த காரின் தயாரிப்பு இல்லை. இந்த காரின் விலை குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் நமக்கு கிடைத்த தகவலின் படி ரூ24.24 லட்சம் என்ற நிலையில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக ரூ26.04 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. இந்த காருக்கு அதிகமான காத்திருப்பு காலம் இருந்தாலும் மக்கள் காத்திருந்து இந்த காரை வாங்க தயாராக இருக்கிறார்கள். இதனால் இதன் லிமிடெட் எடிஷன் கார் வரும்போது இதை வாங்க போட்டி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 4, 2024, 7:20 [IST]
English summary
Mahindra xuv700 blaze edition launched matte red paint
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+