100க்கு 74 பேர் இந்த மாடல் காரை தான் வாங்குறாங்களா? அட இது என்னடா புது தகவலா இருக்குது?
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் இந்திய மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இதற்காக ஏகப்பட்ட பேர் இந்த காரை புக் செய்து வருட கணக்கில் டெலிவரிக்காக காத்திருக்கிறார்கள். இந்த கார் குறித்த சில சுவாரசியமான தகவல்கள் தான் நமக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி விற்பனைக்காக அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகி மூன்று ஆண்டுகளாக சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இன்றும் இந்த காருக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவு வரவேற்பிருக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளில் இந்த காரின் விற்பனை பல்வேறு விதமான சாதனைகளை படைத்துள்ளது. சமீபத்தில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய மைல் கல்லை எட்டிப் பிடித்தது.

கடந்த ஜூலை மாதம் வரை மொத்தம் 1,96,971 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 24,839 வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 13.99 லட்சம் முதல் ரூபாய் 25.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. சில சுவாரசியமான தகவல்களை தற்போது மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரைப் பொறுத்தவரை அதிகமாக டீசல் வேரியண்ட் காருக்கு தான் டிமாண்ட் இருப்பதாக நிரூபணம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஏப்ரல்-ஜூலை மாதம் விற்பனையான 24,839 வாகனங்களில் 18,031 வாகனங்கள் டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்களாக விற்பனையாகியுள்ளது. அதாவது 74சதவீதமான வாகனங்கள் இந்த இன்ஜின் ஆப்ஷனல்தான் விற்பனையாகிறது. வெறும் 6408 வாகனங்கள் மட்டுமே பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் விற்பனையாகி உள்ளது, இது 26சதவீதமாகும்.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனை எண்ணிக்கை பார்க்கும்போது அப்பொழுது 70.7 சதவீதமான வாகனங்கள் டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்களாக விற்பனையாகி இருந்தது. 29.3 சதவீதமான வாகனங்கள் மட்டுமே பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட வாகனங்களாக விற்பனையாகி இருந்தன. தற்போது டீசல் இன்ஜின் ஆப்ஷனின் விற்பனை சதவீதம் 74 சதவீதமாக மாறி உள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பொறுத்தவரை கடந்த நிதியாண்டில் மொத்தம் 79,398 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது அதற்கு முந்தைய நிதியாண்டு விற்பனையை ஒப்பிடும்போது 19சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் விற்பனையான எக்ஸிக்யூட்டிவ் மிட்சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் இந்த கார் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த செக்மெண்டில் தற்போது மொத்தம் 11கார்கள் விற்பனையாகி வருகின்றன. முதலிடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இருக்கிறது. மொத்தம் ரூ1,41,462 கார்கள் விற்பனையாகி இருந்தது.

மஹிந்திரா நிறுவனம் கடந்த நிதியாண்டில் விற்பனை செய்த ஒட்டுமொத்த கார்கள் விற்பனையில் எக்ஸ்யூவி 700 கார் மட்டும் 27% விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே இந்த நிதியாண்டு விற்பனையை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த கார் 4வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 24,839 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
மொத்தம் 53,068 ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்கள் சேர்ந்து விற்பனையாகியுள்ளன. அடுத்ததாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஒ காரை பொருத்தவரை 3251 கார்கள் விற்பனையாகி உள்ளன. பொலிரோ காரை பொருத்தவரை 3158 கார்கள் விற்பனையாகி உள்ளன. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் மார்க்கெட்டில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷனில் வருகிறது. இதில் மொத்தம் 44 விதமான வேரியண்ட்கள் உள்ளன. 19 வேரியண்ட்கள் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடனும் 25 வேரியண்ட்கள் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடம் விற்பனையாகி வருகிறது. இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இதுவும் இந்த கார் விற்பனைக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் காருக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த காரை வாங்க ஏகப்பட்ட நபர்கள் புக்கிங் செய்து காத்திருக்கிறார்கள். வருட கணக்கில் கூட காத்திருந்து இந்த காரை வாங்குகிறார்கள் என்றால் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எவ்வளவு இருக்கிறது என பார்த்துக் கொள்ளுங்கள். இதன் காரணமாகவே இதன் விற்பனை சிறப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









