சாலைகளில் சுற்றி திரிந்த விசித்திரமான கார்... மஹிந்திரா எல்லாத்துக்கும் ரெடி - அறிமுகம் எப்போது?
மஹிந்திரா (Mahindra), இந்தியாவில் அதிக பேரால் விரும்பி தேர்வு செய்யப்படும் கார் பிராண்ட்களுள் ஒன்று. இந்த நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 (XUV700) ஆகும். முதன்முதலாக 2021ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் இதற்கு இடைப்பட்ட காலத்தில் சிலமுறை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரை விரைவில் அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருகிறது. இந்த நிலையில், முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று பெங்களூரில் சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. எக்ஸ்யூவி700 காரில் புதியதாக எம்.எக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஆதாரத்துடன் செய்தி ஒன்றை சமீபத்தில் நமது டிரைவ்ஸ்பார்க் தளத்தில் பார்த்திருந்தோம். இந்த நிலையில், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் பெங்களூரில் இருந்து கிடைத்துள்ளன.

பெங்களூர் சாலையில், முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த காரை ஆரம்பத்தில் கண்டவுடன் நாங்கள் இது எக்ஸ்யூவி700 எலக்ட்ரிக் காராக இருக்கலாம் என நினைத்தோம். ஏனெனில், இன்னும் சில வருடங்களில் எக்ஸ்யூவி700 எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தவும் மஹிந்திரா தயாராகி வருகிறது. ஆனால், இது எக்ஸ்யூவி700 காரின் எலக்ட்ரிக் வெர்சன் கிடையாது, மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் கார் ஆகும்.
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், எக்ஸ்யூவி700 காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் சில மாற்றங்களை கொண்டுவரும். குறிப்பாக, புத்துணர்ச்சியானதாக காட்டும் விதமாக காரின் முன் மற்றும் பின்பக்கம் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படும். தற்போது நமக்கு கிடைத்துள்ள படத்தில் காரின் முன்பக்கத்தை பார்க்க முடியவில்லை. பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.
காரின் பின்பக்கத்தையும் மறைப்புகளால் மூடியுள்ளனர் என்பதால், என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை அறிய முடியவில்லை. காரின் டெயில்லைட்களின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இந்த டெயில்லைட்கள் தற்காலிகமாக சோதனை ஓட்டத்திற்காக பொருத்தப்பட்டதாக இருக்கலாம். எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய டிசைனில் முன்பக்க கிரில், அப்டேட்டான ஹெட்லைட்கள் மற்றும் டிசைன் மாற்றப்பட்ட டெயில்லைட் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை புதிய எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படலாம்.
அதேபோல், காரின் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்களின் வடிவமும் மாற்றப்படலாம். காரின் அலாய் சக்கரங்களின் டிசைன் கூட மாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது. புதிய எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காரின் உட்பக்கத்தில் அப்டேட்டான ஸ்டேரிங் சக்கரத்தை வழங்க மஹிந்திரா முயற்சிக்கும். ஏசி கண்ட்ரோல்களும் புதியதாக கொடுக்கப்படலாம்.
புதிய எக்ஸ்யூவி700 காரின் உட்பக்கம் முழுவதுமாக கருப்பு நிறத்தில் கொடுக்கப்படும் என நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், காருக்குள் சுத்தம் செய்வது எளியதாக இருக்கும். மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரில் ஏற்கனவே லெவல்-2 அடாஸ், பனோராமிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் இருக்கைகள், கனெக்ட்டட் கார் தொழிற்நுட்பம் மற்றும் மற்ற அட்வான்ஸான வசதிகள் வழங்கப்படுகின்றன.
இத்தனை வசதிகள் இருப்பினும், காருக்குள் 2வது வரிசையில் கேப்டன் இருக்கைகளில் வெண்டிலேட்டட் வசதிகள் மற்றும் கூடுதலான கனெக்டட் கார் தொழிற்நுட்ப வசதிகளையும் புதிய எக்ஸ்யூவி700 காரில் எதிர்பார்க்கிறோம். மேலும், கூடுதல் பாதுகாப்பு அம்சத்திற்காக காரை சுற்றிலும் சில சென்சார்களும் புதியதாக கொடுக்கப்படலாம். மற்றப்படி, காரின் என்ஜின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் சிறப்பாகவே உள்ளது. இருப்பினும், ஸ்கார்பியோ கார்கள் அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆதலால், எக்ஸ்யூவி700 காரை மஹிந்திரா அப்டேட் செய்வதற்கு இது சரியான நேரமே. புதியதாக, எம்.எக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறினோம் அல்லவா... அது புதிய எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் காருடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








