திடீரென இந்த காரின் விலையை அதிகரித்த மஹிந்திரா! இதை யாருமே எதிர்பார்க்கலயே!

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் மஹிந்திராவின் மிக முக்கியமான காராக இருக்கிறது. முக்கியமாக மிட்-சைஸ் செக்மெண்டில் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த காரில் உள்ள பல்வேறு அம்சங்கள் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் சிறப்பாக இருப்பதால் இந்த கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்த காருக்கான விலை உயர்வு குறித்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பண்டிகை காலம் முடிந்த பிறகு மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யூவி 700 காருக்கான விலையை ரூபாய் 50,000 வரை உயர்த்தி உள்ளது. குறிப்பிட்ட சில வேரியன்ட்களுக்கு மட்டுமே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இரண்டு புதிய வேரியன்ட்களும் தற்போது இணைக்கப்பட்ட இணைக்கப்பட்டுள்ளன. டீசல் இன்ஜின் ஆப்ஷனில் ஏஎக்ஸ் 3 வேரியண்டில் கூடுதலாக இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 6 சீட் வேரியண்ட்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

mahindra xuv 700 price hike

மஹிந்திரா தனது எக்ஸ்யூவி 700 காரின் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி தனது ax7 மேனுவல் 7 சீட்டர் வேரியண்ட் பெட்ரோல் இன்ஜின் காருக்கு ரூபாய் 15,000 விலை வரை விலை உயர்த்தி உள்ளது. தற்போது இந்த கார் ரூபாய் 19.49 லட்சம் முதல் ரூபாய் 19.64 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இருப்பதிலேயே அதிகபட்ச விலை உயர்வாக ரூபாய் 50000 விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது எம்எக்ஸ் எம்டி 5 சீட்டர் மற்றும் எம்எக்ஸ் எம்டி 7 சீட்டர், ax3 எம்டி 5 சீட்டர் ஆகிய வேரியண்ட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் இன்ஜின் கொண்ட வேரியன்ட்களாக இருக்கின்றன. இந்த விலை உயர்வுக்கு முன்னர் ரூபாய் 13.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்த இந்த கார் தற்போது 14.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

mahindra xuv 700 price hike

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இஎஸ்பி தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வேரியன்டான எம்எக்ஸ் எம்டி 5 சீட்டர், எம்எக்ஸ் எம்டி, ax3 எம்டி 5 சிட்டர் ஆகிய கார்களின் விலை எந்த உயர்வும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இஎஸ்பி இல்லாத வேரியன்டை விட இஎஸ்பி இருக்கும் வேரியன்டை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டீசல் வேரியன்டை பொறுத்த வரை மஹிந்திரா நிறுவனம் இதில் எந்த விதமான விலை உயர்வையும் அறிவிக்கவில்லை. அனைத்து டீசல் வேரியண்ட் கார்களும் இதற்கு முன்னர் விற்பனையாகி வந்த அதே விலையில் தான் விற்பனையாகி வருகிறது. ஆனால் இரண்டு புதிய டீசல் வேரியண்ட்களை தற்போது சேர்த்துள்ளது.

mahindra xuv 700 price hike

அதன்படி பார்த்தால் தற்போது ஏஎக்ஸ் 3 வேரியண்டில், ஏஎஸ்3 எம்டி 7 சீட்டர் என்ற வேரியன்ட் ரூபாய் 17.99 லட்சம் என்ற விலையிலும், ஏஎஸ்3 எம்டி 7 சீட்டர் இஎஸ்பி வேரியண்ட் ரூ 18.49 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. தற்போது விற்பனையில் இருந்து நீக்கி உள்ளது. இதில் பின்வரிசை சீட்டுகளும் பிரீமியம் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த காரின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 காரின் விற்பனையை பொறுத்தவரை மார்க்கெட்டில் உள்ள டாடா சஃபாரி மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த கார்களில் எல்லாம் 6 சீட்டர் வேரியன்ட்கள் விற்பனையாகி வரும் நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆப்ஷனை தற்போது நீக்கி உள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கும் நிலையில், தற்போது இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், பெரிய அளவில் விளைவு உயர்வு இல்லை என்பதால் விற்பனையில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது வாகனங்களின் விலையை அதிகரிப்பது வாடிக்கையான ஒரு விஷயம் தான். இதில் குறிப்பிட்ட சில வேரியன்ட்களுக்கு மட்டும் விலையை அதிகரித்துள்ளது. அந்த வேரியண்ட்களின் விற்பனையை குறித்து மற்ற வேரியன்ட்களின் விற்பனை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 21, 2024, 11:50 [IST]
English summary
Mahindra xuv700 price hike nov 2024 new variants 6 seat removal
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X