இவ்ளோ கம்மி விலையில் சொகுசு காரா! உலகை மிரள விட்ட இந்திய தயாரிப்பு! ஆடி, பென்ஸ்லாம் ஓரமா போய் விளையாடுங்கப்பா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி மஹிந்திரா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 9,007 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 6,512 மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இது 38 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10, 7 சீட்டர் கார்களின் பட்டியலில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், 4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

Mahindra XUV700

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரானது, 5 சீட்டர், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என மொத்தம் 3 வகையான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனவே சிறிய குடும்பங்கள் முதல் பெரிய குடும்பங்கள் வரை பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் ஏற்றதாக திகழ்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரானது, அதிநவீன சொகுசு வசதிகளுக்கு (Features) புகழ் பெற்றது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் வசதிகளை பற்றி மட்டுமே தனியாக நிறைய செய்திகளை எழுத முடியும். அந்த அளவிற்கு இந்த காரில் ஏகப்பட்ட வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதில், முக்கியமானவற்றை மட்டும் இந்த செய்தியில் தெரிவிக்கிறோம்.

Mahindra XUV700 Interior

10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பெரிய பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் ஆகியவை எல்லாம், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் மிக முக்கியமான வசதிகள் ஆகும்.

இவை எல்லாம் தவிர, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 12 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், அலெக்ஸா கனெக்டிவிட்டி மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் கூட, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில், 70 அம்சங்கள் உள்ளன. இதில், நிகழ் நேரத்தில் கார் எங்கே உள்ளது? என்பதை தெரிந்து கொள்வது, ரிமோட் முறையில் காரை லாக்/அன்லாக் செய்வது மற்றும் ரிமோட் முறையில் ஏசி-யை கட்டுப்படுத்துவது போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் போதாதென்று, அதிநவீன வசதிகளில் ஒன்றான அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொழில்நுட்ப அம்சமும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பிற்கு (Safety), 7 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகளும், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் இருக்கின்றன.

இது குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) வாங்கியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. செயல்திறனை பொறுத்தவரையில், மிகவும் சக்தி வாய்ந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இது போன்ற காரணங்களால், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை 13.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 25.14 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா சஃபாரி (Tata Safari), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) ஆகிய கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கருதப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார், இந்திய சந்தையில் மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா (Australia) போன்ற உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை போல், சர்வதேச சந்தைகளிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதாக, அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 21, 2024, 23:44 [IST]
English summary
Mahindra xuv700 sales report august 2024 38 per cent growth
மேலும்... #mahindra #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+