இந்த மஹிந்திரா காரில் சென்றால் எல்லார் கண்ணும் உங்க மேல தான்...எப்படியெல்லாம் யோசிக்குறாங்க!!
மஹிந்திரா (Mahindra), மக்கள் மத்தியில் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று. மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 (XUV700) ஆகும். 2021ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 காரை பல்வேறு விதமான நிறங்களில் பார்த்துள்ளோம். ஆனால், இப்படிப்பட்ட பெயிண்ட்டில் பார்த்ததில்லை என சொல்லும் அளவிற்கு இங்கு ஒரு மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் விசித்திரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த எக்ஸ்யூவி700 கார் குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், காரின் நிறத்தை எவரொருவரும் தங்களது விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். ஆனால், காருக்கு நீங்கள் கொடுக்கும் பெயிண்ட்டின் நிறம் எவரொருவரையும் அல்லது எந்தவொரு சமூகத்தினரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

ஆனால், இங்கு ஒரு எக்ஸ்யூவி700 கார் உரிமையாளர் தனது காருக்கு கண்ணாடி போன்றதான நிறத்தை வெளிப்பக்கத்தில் கொடுத்துள்ளார். இதனை, ஹோலோகிராபிக் வ்ராப் (Holographic Wrap) என அழைக்கின்றனர். வெளிச்சம் எதிரொலிப்பதன் மூலமாக, இது வெவ்வேறு விதமான நிறங்களை ஒரே நிறத்தில் வெளிப்படுத்தக்கூடிய உள்ளது. இதனால், காரை தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு விதமான நிறங்களும், அருகாமையில் இருந்து பார்த்தால் வேறு விதமான நிறங்களும் தெரியும்.
இத்தகைய வ்ராப்-ஐ கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் தொடர்பான வீடியோ கார்பாபா என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்யூவி700 கார் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோவில், சூரிய வெளிச்சம் பட்டு காரின் மேற்பரப்பில் ஒரே நேரத்தில் வெவ்வேறு விதமான நிறங்கள் எதிரொலிப்பதை காணலாம். இந்த வ்ராப்-களை தவிர்த்து, இந்த எக்ஸ்யூவி700 காரில் வேறெந்த மாடிஃபிகேஷனும் இல்லை.

காரின் நிறத்தை மாற்ற வ்ராப்-ஐ ஒட்டுவது புத்திச்சாலித்தனமான மற்றும் செலவு குறைந்த முடிவாகும். ஏனெனில், ஒட்டப்பட்ட வ்ராப் பிடிக்கவில்லை காரின் பழைய நிறத்திற்கு மாற போகிறீர்கள் என்றால், எளிதாக வ்ராப்-ஐ அகற்றிவிட்டாலே போதுமானது. காரில் வ்ராப் ஒட்டுவதற்கான செலவு அதிகம் கிடையாது என்பதால், உங்களுக்கு பெரியளவில் பொருட் செலவும் இருக்காது.
காரில் வ்ராப் ஒட்டுவதால், காரின் ஆயுட்காலம் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வெயில், மழை மற்றும் பனியில் இருந்து உங்களது காரை வ்ராப் பாதுகாக்கும். அதுமட்டுமின்றி, கீறல்களையும் வ்ராப் தடுக்கும். காருக்கு புதியதாக பெயிண்ட் கொடுப்பதற்கு பதிலாக, இவ்வாறு வ்ராப் ஒட்டுவது செலவை பாதியாக குறைக்கும். ஏனெனில், வ்ராப் ஒட்டுவது எளிதான காரியம் ஆகும்.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே கூறியதுபோல், எப்போது வேண்டுமென்றாலும் வ்ராப்-ஐ எளிதாக அகற்றிக் கொள்ளலாம். காரின் ஒரிஜினல் பெயிண்ட் உடன் வ்ராப் எந்தவொரு வேதியியல் மாற்றத்திற்கும் உள்ளாகுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால், காரின் பெயிண்ட்டிற்கு படலம் போல வ்ராப் இருக்கும். காரை விற்கும்போது, வ்ராப்-ஐ அகற்றிவிட்டால், உள்ளே இருக்கும் பெயிண்ட் புதியதாக இருக்கும் என்பதால், உங்களது காருக்கு சிறந்த மதிப்பு கிடைக்கும்.
கார் முழுவதுமாக வ்ராப் ஒட்ட வேண்டும் என்று கூட அவசியமில்லை. தேவைப்படும் இடத்தில் மட்டும் ஒட்ட முடியும். இருப்பினும், இந்த பயன்கள் யாவும் சாதாரண வ்ராப்-களுக்கு மட்டுமே ஆகும். இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் உள்ளதை போன்றதான ஹோலோகிராபிக் வ்ராப் ஆனது சட்டத்திற்கு புறம்பானது என்றுகூட சொல்லலாம். ஏனெனில், இத்தகைய வ்ராப்பினால் மற்ற வாகன ஓட்டிகளின் கவனம் சிதற வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, இத்தகைய வ்ராப்கள் ஒளியை பிரதிப்பலிப்பதால் மற்ற வாகன ஓட்டிகளால் சாலையை தெளிவாக காண முடியாமல் போகலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான தோற்றம் கொண்ட கார்கள் சினிமாவில் பார்ப்பதற்கு வேண்டுமாயின் நன்றாக இருக்கலாம். ஆனால், நிஜ உலகில் இவை ஆபத்தானவை ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், காருக்கு வ்ராப் ஒட்டுவதிலும் கூட கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகள் எதற்காக உள்ளன என்பது இந்த எக்ஸ்யூவி700 காரை பார்த்தாலே தெரிகிறது. இந்த காரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









