ஆட்டோமெட்டிக் கார் ஓட்டுறதுக்கு ஈஸின்னு நினைக்காதீங்க இதுல என்னலாம் பிரச்சனை இருக்குது தெரியுமா?

இந்தியாவில் இன்றும் மேனுவல் கார்களை அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. என்னதான் ஆட்டோமேட்டிக் கியர்கள் கொண்ட கார் அறிமுகமாகிவிட்டாலும், அதில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், மக்கள் மத்தியில் ஆட்டோமேட்டிக் கியர் காரை விட மேனுவல் கியர் கார்களுக்கு தான் அதிக வரவேற்பு இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை விரிவாக காண்போம் வாருங்கள்.

கொரோனாவிற்கு பிறகு மக்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு கார் வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. கொரோனா காலத்தில் பைக் வைத்திருந்தவர்கள் பலர் போக்குவரத்து வசதி சரியாக கிடைக்காமல் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாமல் தவித்தார்கள். பொது போக்குவரத்து வசதியும் சரிவரவில்லை. இந்நிலையில் பலர் கார் வழங்க வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டார்கள்.

Manual vs Automatic Transmission

அவர்கள் மெல்ல மெல்ல பணம் சேர்த்து தற்போது கார் வாங்கும் கனவை நிறைவேற்றி வருகிறார்கள். இதில் சில வாடிக்கையாளர்கள் ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட கார்களை தேர்வு செய்கிறார்கள். மார்க்கெட்டில் ஆட்டோமேட்டிக் மேனுவல் என இரண்டு கார்கள் இருந்தாலும் ஆட்டோமேட்டிக் கியர் கார்களுக்கு என சில ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கடும் போக்குவரத்து நெருக்கடியில் ஆட்டோமேட்டிக் கியர் கார்களால் தான் சுலபமாக பயணம் செய்ய முடியும். டிரைவருக்கு எந்தவிதமான தொந்தரவும் எரிச்சலும் ஏற்படாமல் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள இந்த ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட கார்கள் உதவுகின்றன. இதனால் மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல இது பிரபலமாகி கொண்டே வருகிறது. அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய தேவை இந்த காரில் கிடையாது.

Manual vs Automatic Transmission

என்னதான் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட கார்கள் மிக வேகமாக பிரபலமாகவில்லை. இன்றளவும் மேனுவல் கியர் கொண்ட கார்கள்தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. பயணிகள் வாகனத்தில் மேனுவல் கியர் கார்கள் தான் தற்போது பிரபலமான கியர் ஆப்ஷனாக இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் காரில் பல்வேறு நன்மைகள் இருந்தும் மக்கள் ஏன் மேனுவல் கியர் காரை தேர்வு செய்கிறார்கள்?

இந்தியாவைப் பொறுத்தவரை புதிதாக கார் வாங்கும்போது விலை என்பது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை கார் வாங்குவதில் முதலீடு செய்வதால் முடிந்த அளவு விலை குறைந்த கார்களை வாங்க நினைக்கிறார்கள். ஆட்டோமேட்டிக் கியர் கார்களை பொறுத்தவரை மேனுவல் கியர் கார்களை விட அதிக விலையில் விற்பனையாகி வருகிறது.

Manual vs Automatic Transmission

என்ட்ரி லெவல் கார்களில் ஆட்டோமேட்டிக் ஏஎம்டி வெர்ஷன் கொண்ட கார்கள் மேனுவல் கியர் கார்களைவிட ரூ80 ஆயிரம் வரை அதிகமாக இருக்கிறது. இவ்வளவு அதிகமான பணத்தை ஆட்டோமேட்டிக் கியருக்காக செலவு செய்ய மக்களுக்கு மனது வரவில்லை. அதனால் மேனுவல் கியர் கார்களை தேர்வு செய்யவே மக்கள் விரும்புகின்றனர்.

காரின் விலை அதிகமாகும் போது தானாக காருக்கான இன்சூரன்ஸ் விலையும் அதிகமாகிறது. ஒன்றைத் தொற்று ஒன்று அதிகமான விலையில் இருப்பதால் ஆட்டோமேட்டிக் கார்களை தவிர்த்து மேனுவல் கார்களை தேர்வு செய்ய மக்கள் விரும்புகின்றனர். மேனுவல் கியர் கார்களை வாங்குவதன் மூலம் காரின் விலை, இன்சூரன்ஸ், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கணக்கிடும் போது லட்சக்கணக்கில் பணம் மிச்சம் ஆகிறது.

இது மட்டுமல்ல ஆட்டோமேட்டிக் கியர் கார்கள் மேனுவல் கியர் கார்களை காட்டிலும் அதிக பராமரிப்பு கொண்டதாக இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் கார்கள், மேனுவல் கியரை விட அதிக குழப்பமான வடிவமைப்பை கொண்டதாக இருக்கிறது. இதனால் அதன் பராமரிப்பு செலவு அதிகமாகின்றது. இதனால் அந்த காரை வாங்குவதன் மூலம் ஒருவருக்கு ஆகும் செலவும் அதிகமாகிறது. இதுவும் மக்கள் ஆட்டோமேட்டிக் கியர் கார்களை தவிர்ப்பதற்கான ஒரு காரணமாக இருக்கிறது.

மேனுவல் கியர் கார்கள் நீண்ட ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் கார்கள் சமீபமாக தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதனால் மேனுவல் கியர் காரில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கான மெக்கானிக்கை தொடர்புகொண்டு பிரச்சினையை சரி செய்வது சுலபம், ஆனால் ஆட்டோமேட்டிக் கார்களின் தொழில்நுட்பங்கள் அறிந்த மெக்கானிக் கிடைப்பது கடினம்.

இது மட்டும் அல்ல ஆட்டோமேட்டிக் கியர் கார்களில் அதிகமாக சூடாவது, ஜர்க்கான ரைடுகளை தருவது என்பது பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. குறிப்பாக கடும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளே கார் பயணிக்கும் போது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் அதிகமாக சூடாகிறது. இதனால் அடிக்கடி டிரைவர் காரை நிறுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேனுவல் கியர் கார்களில் இப்படியான அம்சங்கள் எதுவும் இல்லை.

டிரைவ்ஸ்பாட்டு கருத்து: இதையெல்லாம் மனதில் வைத்து தான் புதிதாக கார் வாங்குபவர்கள் ஆட்டோமேட்டிக் கியர் காரை விட மேனுவல் கியர் காரை தான் அதிகம் தேர்வு செய்கிறார்கள். மேனுவல் கியர் கார் தான் டிரைவருக்கு அதிகமான கண்ட்ரோலை வழங்குவதாக நினைக்கிறார்கள். ஆனால் அதிக விலை கொண்ட கார்களில் மேனுவல் ஆப்ஷனை விட ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் தான் அதிகபட்ச தேர்வாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, March 11, 2024, 14:53 [IST]
English summary
Manual vs automatic transmission why indians prefer manual gear
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X