33 கி.மீ மைலேஜ் தரும் கார்களை நிறுத்த மாருதி திட்டமா? அடி மடியிலேயே கை வைக்க போறாங்களா?
மாருதி நிறுவனம் இந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்று சிஎன்ஜி கார்களின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்த கார்களை நீங்கள் வாங்க போவதாக திட்டம் போட்டுக் கொண்டிருந்தால் உடனடியாக இந்த காரை வாங்குதல் விரைவில் இந்த கார்கள் எல்லாம் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் இந்தியாவின் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துவரும் நம்பர் 1 நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான கார்கள் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் மாருதி கார்களின் சிறப்பே அதிக மைலேஜ் தான். தற்போது மாருதி நிறுவனம் பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்கிறது. டீசல் கார்களை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. இந்நிலையில் அதிக மைலேஜ்காக சிஎன்ஜி ரக கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மார்க்கெட்டில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் மாருதி நிறுவனம் சில சிஎன்ஜி கார்களின் தயாரிப்பை இந்த மாதத்துடன் நிறுத்த போவதாக வி3 கார் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே10, செலிரியோ மற்றும் எஸ்பிரெஸ்ஸோ ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை இந்த மாதத்துடன் நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த கார்கள் எல்லாம் விரைவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்படும் எனவும் வேகன்ஆர் காரின் மட்டுமே சிஎன்ஜி வெர்ஷன் தயாராகி விற்பனைக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி நிறுவனம் 1.0 லிட்டர் இன்ஜினில் சிஎன்ஜி ஆப்ஷன் உடன் இனி வேகன்ஆர் காரை மட்டுமே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் திடீரென இந்த சிஎன்ஜி கார்களை நிறுத்தப் போவதற்கான காரணம் குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதுவரை மாருதி நிறுவனமும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இது குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே சமூக வலைதளங்களிலும் மற்ற இடங்களிலும் அதிகமாக இருந்து வருகிறது.
தற்போது வரை இந்த சிஎன்ஜி கார்கள் எல்லாம் மார்க்கெட்டில் நல்ல விற்பனையில் தான் இருந்து வருகின்றன. இதனால் மாருதி நிறுவனம் இந்த மார்ச் மாதம் இது தயாரிப்பை நிறுத்தி இருக்கும் கார்களை எல்லாம் விற்பனை செய்துவிட்டு பின்னர் இது நிறுத்தப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது டீலர்களிடம் இருக்கும் கார்களுக்கு மட்டுமே புக்கிங் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இனி இந்த சிஎன்ஜி கார்களை கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஸ்டாக் இருக்கும் கார்களை ஒருங்கிணைத்து அதை கிளியர் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்நிறுவனம் இந்த குறிப்பிட்ட மூன்று கார்களுக்கு அதிகமாக தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. இதன் மூலமே இந்த கார்களில் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என நமக்கு தெரிய வருகிறது. இந்த மார்ச் மாதம் இந்த மூன்று கார்களுக்கும் ரூபாய் 40 ஆயிரம் வரை மாருதி நிறுவனம் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
அதிகமாக தள்ளுபடி அறிவிக்கப்பட்டால் காரின் டிமாண்ட் அதிகமாக இல்லை என்பது நமக்கு தெரிந்த விஷயமாக இருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் இந்த கார்களின் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு இந்நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு டிமாண்ட் இல்லை என்பதால் இந்த காரை நிறுத்தலாம் என அந்நிறுவனம் முடிவு செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்த சிஎன்ஜி கார்களின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், இது குறித்த தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் மாருதி ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications









