உலகமே இந்தியாவை வியந்து பாக்குது, மாருதியின் இந்த சாதனையை யாருமே ஈடு செய்ய முடியாது!
மாருதி நிறுவனம் ஹரியானா மாநிலம் மானசேர் பகுதியில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து வரும் நிலையில் அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு கோடியாவது வாகனம் தற்போது முழுமையாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வந்துள்ளது. இந்த ஆளை இதன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டி உள்ளது. சுமார் 18 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய ஆலையாக இது மாறி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு எண்ணிக்கை நிகராக மாற்ற எந்த நிறுவனமும் வர முடியாத அளவுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரித்து வருகிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் விற்பனையாகும் பாதிக்கும் அதிகமான கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்களாகவே இருந்தன.

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் 42 முதல் 43 சதவீதமான கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்களாக உள்ளன. மாருதி நிறுவனம் பல்வேறு இடங்களில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதற்கு அதில் ஹரியானா மாநிலத்தில் உள்ள மானசேர் பகுதியில் உள்ள ஆலையும் மிக முக்கியமான ஆலையாக இருக்கிறது.
மாருதி நிறுவனத்துடன் இணைந்த சுஸூகி நிறுவனம் உலகில் பல்வேறு இடங்களில் ஆலையை அமைத்து வாகனங்களை தயாரித்து வருகிறது. இதில் மிக விரைவாக ஒரு கோடி கார்களை தயாரித்த ஆலையாக தற்போது மானசேர் பகுதியில் உள்ள ஆலை தான் இருக்கிறது. இந்த ஆலை 18 ஆண்டுகளில் ஒரு கோடி கார்களை தயாரித்துள்ளது.

இந்நிறுவனம் தற்போது தயாரித்துள்ள பிரெஸ்ஸா கார் தான் அந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு கோடியாவது காராக இருக்கிறது. இந்த ஆலை மொத்தம் 600 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் இந்த ஆலை முதன்முதலாக பயன்பாட்டிற்கு வந்தது. அப்பொழுது முதல் ஏகப்பட்ட கார்களை இங்கு மாருதி நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் கார்களில் பிரெஸ்ஸா, எர்டிகா, எக்ஸ்எல் ,சியாஸ், டிசையர், வேகன் ஆர், எஸ்-பிரெஸ்ஸா, செலிரியோ ஆகிய கார்கள் எல்லாம் இந்த ஆலையில் வைத்து தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த கார்கள் எல்லாம் இந்தியாவில் விற்பனையாகும் முக்கியமான கார்களில் ஒன்றாக இருக்கிறது. அதனால் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தயாரிக்கப்படுகிறது.

மேலும் இது ஆலையில் தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாவது மட்டுமல்லாமல் லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. தற்போது இந்த ஆலையில் ஆண்டுக்கு ரூ 23.5 லட்சம் கார்களை தயாரிக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கிறது.
மானசேர் ஆலையில் ஒரு கோடி கார்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், இது குறித்து நிறுவனத்தின் சிஇஓ கூறியுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது " மாருதி நிறுவனம் முக்கியமான மைல்களை எட்டி உள்ளது. இந்த தருணத்தில் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக நாங்கள் நினைக்கிறோம். எங்களது ஊழியர்கள், எங்களுடன் தொழில் செய்யும் பார்ட்னர்கள், மற்றும் இந்திய அரசிற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆலையில் ஒரு கோடி வாகனங்கள் தயாரிக்கப்பட்டது இந்தியாவின் தயாரிப்பு திறனை வெளி உலகத்திற்கு காட்டும் வகையில் இருக்கிறது. மேலும் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இது உறுதுணையாக அமைந்துள்ளது" என்று கூறினார். மாருதி நிறுவனத்தில் இந்த மிகப்பெரும் சாதனை நிச்சயம் வரலாற்றில் இடம் பெறக்கூடிய அளவுக்கு பெரிய சாதனையாக பரக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக செயல்பட்டு வரும் நிலையில், இந்நிறுவனத்தின் இந்த சாதனை மைல்கல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான். உலகில் வெகு சில நிறுவனங்கள் தான் இதை சாதித்துள்ள நிலையில் தற்போது மாருதி நிறுவனமும் சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









