தமிழ்நாட்டுல இருக்குற பாதி மக்கள் தொகைக்கு சமமா கார் வித்திருக்காங்க! இது மாதிரி யாராலயும் பண்ண முடியாது!

மாருதி நிறுவனம் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது மூன்று கோடி கார்களை தயாரித்து புதிய சாதனை மைல் கல்லை எட்டியுள்ளது. இது அந்நிறுவனத்தின் மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் கடந்த 1983-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக மாருதி எம்800 என்ற காரை தயாரித்து இந்தியாவில் பிரதான வாகன தயாரிப்பு நிறுவனமாக உருவாகியது. இந்நிறுவனம் துவங்கியது முதல் இன்று வரை சிறப்பான வாகன தயாரிப்புகளை செய்து, மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இன்றும் விளங்கி வருகிறது.

maruti 3 crore milestone

இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்தியாவில் தனது காலடித்தடத்தை பதித்து 40 ஆண்டுகள் நான்கு மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது அந்நிறுவனம் 3 கோடி வாகனங்களை தயாரித்து புதிய சாதனை மேல் கல்லை எட்டியுள்ளது. இது இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனத்தை தவிர இந்தியாவில் எந்த நிறுவனமும் இந்த சாதனையை இதுவரை செய்யவில்லை.

டாடா நிறுவனம் சமீபத்தில் தான் குஜராத் மாநிலத்தில் உள்ள தனது ஆலையில் 10 லட்சமாவது காரை தயாரித்து புதிய சாதனை மேல் கல்லை எட்டியது. அதற்குள் மாருதி நிறுவனம் மூன்று கோடி கார்களை தயாரித்து மிகப்பெரிய மைல்களை எட்டி உள்ளது. மாருதி நிறுவனம் இந்தியாவில் 3 இடங்களில் ஆலைகளை அமைத்து வாகனங்களை தயாரித்து வருகின்றன. அதன்படி உபி மாநிலம் கூர்கான் பகுதியிலும் ஹாியானா மாநிலம் மான்வர் பகுதியிலும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

maruti 3 crore milestone

இதுபோக கூடுதலாக குஜராத் மாநிலம் ஹன்சால்பூர் பகுதியில் ஆலையை அமைக்கப்பட்டு வாகனம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கூர்கான் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் உள்ள ஆலைகளிலிருந்து இதுவரை 2.68 கோடி கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையிலிருந்து இதுவரை 32 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் 1983 துவங்கிய நிலையில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு 1994-ம் ஆண்டு தான் இந்நிறுவனம் 10 லட்சம் கார்களை தயாரித்து முதல் மைல் கல்லை எட்டிப் பிடித்தது. அதன் பிறகு கடந்த 2005-ம் ஆண்டு 50லட்சம் கார்களை தயாரித்து அடுத்த மைல்களை எட்டிப் பிடித்தது. 2011-ம் ஆண்டு இந்நிறுவனம் ஒரு கோடி கார்களை தயாரித்து மிகப்பெரிய மைல்களை எட்டிப் பிடித்தது. 2018-ம் ஆண்டு 2 கோடி கார்களை தயாரித்திருந்தது.

maruti 3 crore milestone

அதன் பின்பு 6 ஆண்டுகளான நிலையில் தற்போது மூன்று கோடி கார்களை தயாரித்து மிகப்பெரிய மைல் கல்லை எட்டிப் பிடித்துள்ளது. தற்போது மாருதி நிறுவனத்திடம் ஆல்டோ 800, ஆல்டோ கே10, ஸ்விஃப்ட், வேகன் ஆர், டிசையர், ஆம்னி, பலேனோ, ஈக்கோ, பிரெஸ்ஸா, எர்டிகா ஆகிய மாடல் கார்கள் அதிக அளவில் விற்பனையாகி இந்த மைல் கல்லை எட்டிப் பிடிப்பதற்கு உதவியுள்ளன.

மாருதி நிறுவனம் தற்போது இரண்டு விதமான பிராண்டுகளில் தனது வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. நெக்ஸா ஷோரூம் வழியாக பிரிமியம் ரக கார்களையும் அரேனா ஷோரூம் வழியாக மற்ற அனைத்து கார்களையும் விற்பனை செய்து வருகிறது. மொத்தம் விற்பனை செய்யப்பட்ட மூன்று கோடி கார்களில் அதிகபட்சமாக ஆல்டோ கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன.

இதுவரை ஆல்டோ கார் அறிமுகமானது முதல் தற்போது வரை 50.59 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அடுத்த இடத்தில் ஸ்விஃப்ட் கார் 31.93 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வேகன்ஆர் கார் 31.84 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிறுவனம் முதன் முதலில் அறிமுகப்படுத்திய எம்800 என்ற கார் 29.17 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இது போக டிசையர் என்ற செடான் கார் 28.61 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆம்னி வேனை பொருத்தவரை 20.22 லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பிரெஸ்ஸா காரை பொருத்தவரை 11.66 லட்சம் கார்களும்,எர்டிகா காரை பொருத்தவரை 11.04 லட்சம் கார்களும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களில் 40% மாதிரி நிறுவனத்தின் வாகனங்களாகவே உள்ளன. அந்த அளவிற்கு வெளிநாட்டு ஏற்றுமதியிலும் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் தற்போது மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் இன்னும் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதற்காக பல்வேறு யுக்திகளை பின்பற்றி வருகிறது. அதில் முக்கியமாக 2030-31 நிதியாண்டில் இந்நிறுவனம் 28 வகையான கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு இந்தியர்கள் மிக முக்கியமான காரணமாக இருக்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2024, 22:37 [IST]
English summary
Maruti 3 crore milestone achieved production starts in december 83
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X