மாருதி 800 காரை இப்படி கூட மாற்றிக் கொள்ளலாமா? லம்போர்கினி கார்களுக்கு டஃப் கொடுக்கக்கூடிய ஸ்டைல்!!

இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது ஒருபக்கம் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, விலையுயர்ந்த லம்போர்கினி கார்களை போன்று கத்திரிக்கோல் வடிவில் கதவுகளை தங்களது காரில் அமைத்துக் கொள்ள நிறைய பேர் விரும்புகின்றனர். இதன் காரணமாக, சிஸர் கதவுகள் பொருத்தப்பட்ட கார்களை இதற்குமுன் பலமுறை பார்த்துள்ளோம். அந்த வரிசையில், மாருதி சுஸுகி 800 (Maruti Suzuki 800) கார் ஒன்றில் சிஸர் கதவுகளை பொருத்தி அழகு பார்த்துள்ளனர்.

இந்தியாவில் தற்போதைக்கு கார்கள் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நிறுவனம் மாருதி சுஸுகி ஆகும். இந்த நிறுவனம் இத்தகைய நிலைக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த கார்களுள் ஒன்று '800' ஆகும். ஒரு காலத்தில், மாருதி 800 கார்கள் இல்லாத ஊரே கிடையாது என்கிற அளவிற்கு இந்த கார்கள் நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்பட்டன.

maruti 800 with scissor doors

மிடில்-கிளாஸ் மக்களும் எளிதாக வாங்கக்கூடிய வகையில், மிகவும் குறைவான விலையில் மாருதி 800 கார் விற்பனை செய்யப்பட்டது. அதற்கேற்ப, சிறிய அளவிலான 800சிசி என்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டது. மாருதி 800 கார் தற்சமயம் விற்பனையில் இல்லை. மாருதி 800 காரின் தொடர்ச்சியாகவே மாருதி ஆல்டோ கார் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி 800 கார் தற்சமயம் விற்பனையில் இல்லாவிடினும், இன்னமும் நிறைய பேரிடம் இந்த கார் பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில், இந்தியாவின் ஹிமாலச்சல் பிரதேசத்தில் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வரும் மாருதி 800 கார் ஒன்றில் அதன் உரிமையாளர்கள் கத்திரிக்கோல் வடிவிலான கதவுகளை பொருத்தி அழகு பார்த்துள்ளனர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், புதியதாக எந்த கதவுகளும் இந்த காரில் பொருத்தப்படவில்லை.

maruti 800 with scissor doors

மாருதி 800 காரில் வழங்கப்பட்ட கதவுகளை சிஸர் போன்று மேல்நோக்கி திறக்கும் வகையில் மாற்றியுள்ளனர். இத்துடன், மேலும் சில மாடிஃபிகேஷன்களையும் இந்த காரில் கொண்டுவந்துள்ளனர். அதன்படி, காரின் ஃபெண்டர்கள் பெரியதாக்கப்பட்டு இருப்பதுடன், காரின் மேற்கூரையில் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மியூசிக் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த மாடிஃபை 800 காரை நெருக்கமாகவும், அதில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களையும் காணலாம். இந்த மாருதி 800 காரின் முன்பக்கத்தில் அதிக வெளிச்சத்திற்காக எல்இடி புரோஜெக்டர் பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. காற்று சுத்திகரிப்பானுக்காக, காரின் முன்பக்க வலதுப்பக்கத்தில் பெரிய துளை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம்.

maruti 800 with scissor doors

இந்த துளையை உருவாக்கி இருப்பதற்கு முக்கிய காரணம், இந்த மாடிஃபை 800 காரின் என்ஜின் சிஸ்டத்தில் ஒரிஜினல் கே&என் ஏர் ஃபில்டர் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த காரின் 800சிசி என்ஜினின் ஆற்றலை 10% அதிகரிக்கும் என வீடியோவில் கூறியுள்ளனர். அதாவது, மாருதி 800 காரில் வழக்கமாக 38 பிஎச்பி வரையிலான என்ஜின் ஆற்றலை மட்டுமே பெற முடியும். ஆனால், இந்த காரில் 40- 41 பிஎச்பி ஆற்றலை பெறலாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, காருக்கு நல்ல ஸ்டெபிளிட்டியை கொடுக்க பொனெட்டிற்கு அடியில் நீல நிறத்தில் ஒரு கம்பி கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம். மேலும், காரை அகலமாக காட்டுவதற்காக வேறு சில மாடிஃபிகேஷன்களையும் செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, வழக்கமான 12-இன்ச் சக்கரங்களுக்கு பதிலாக, பளபளப்பான கருப்பு நிறத்தில் 13 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மாருதி 800 காரில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருப்பினும், நம்மை கவர்வது இதன் கத்திரிக்கோல் வடிவ கதவுகள் ஆகும். ஹைட்ராலிக் அழுத்தம் மூலமாக இந்த கதவுகள் செயல்படக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளன. அளவில் சிறிய காரான மாருதி 800-இல் இவ்வாறான கதவுகளை பார்க்கும்போது, வண்டு பூச்சி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 11:57 [IST]
English summary
Maruti 800 car with lambo scissor doors craziest car modification
மேலும்... #car modification #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X