வெறும் ரூ5,000 தான் இஎம்ஐ, புது பைக் வாங்குற செலவுல 33 கிமீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்கி போடலாம்!
இந்தியா முழுவதும் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த வெப்பத்தில் பைக்கில் போபவர்களுக்கு தான் உண்மையான தீப்பிடிக்கும் ரைடு என்றால் என்ன என்று தெரியும். பைக் ஓட்டிகள் எல்லாம் இந்த கோடை வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். எப்பொழுது தான் இந்த கோடைக்கு ஒரு முடிவு வரும் என யோசித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கான ஒரு டிப்ஸ் தான் இங்கே வழங்குகிறோம்.
கடும் வெப்பம் மிகுந்த கோடை மட்டுமல்ல, கொடும் குளிர் நிறைந்த பனிக்காலம் ஆனாலும் சரி, அல்லது அதிக மழை பெய்யும் காலம் ஆனாலும் சரி வாகனங்களில் பயணிப்பவர்களில் டூவீலரில் பயணிப்பவர்களுக்கு தான் மிகப்பெரிய பாதிப்பு இருக்கிறது. டூவீலரில் எந்தவிதமான பாதுகாப்பும் கிடையாது. நேரடியாக வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் குளிரடித்தாலும் அது டூவீலரில் அமர்ந்திருக்கும் பயணிகளை பாதிக்கும்.

இப்படியாக டூவீலரில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் பலர் தன் வாழ்வில் எப்படியாவது கார் வாங்கி விட வேண்டும் கார் வாங்கி விட்டால் இந்த தொல்லை எல்லாம் இனி இல்லை என்ற நினைப்பில் இருப்பார்கள். அப்படியான நினைப்பில் நீங்கள் இருந்தால் இதுதான் சரியான நேரம் நீங்கள் குறைந்த விலையில் உங்கள் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு காரை தாராளமாக தேர்வு செய்யலாம்.
இப்பொழுது நாங்கள் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற தரமான கார் ஒன்றை எப்படி வாங்குவது என்ற விபரத்தையும் அதை நீங்கள் எப்படி கணக்கிட வேண்டும் என்ற விபரத்தையும் தான் இங்கே கூறப் போகிறோம். மாருதி நிறுவனம் விற்பனை செய்யும் ஆல்டோ கே10 இந்தியாவிலேயே குறைந்த விலையில் விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் ரூபாய் 4.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க நினைத்தால் இந்த கார் ஒரு நல்ல வாய்ப்பு தான். இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்களும் உள்ளன. கோடை வெயில், பனிக்கால குளிர், மழைக்கால ஈரம் என அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்க இந்த கார் நிச்சயம் உதவும். நீங்கள் கையில் வைத்திருக்கும் பைக்கை விற்றுவிட்டு மாத தவணை முறையில் இந்த காரை தாராளமாக வாங்கலாம்.
இந்த காரின் மாதத் தவணை முறை கிட்டத்தட்ட ஒரு புதிய பைக் வாங்கினால் எவ்வளவு மாத தவணை செலுத்த வேண்டுமோ அதே அளவிற்காக இருக்கிறது. நீங்கள் இந்த காரை ரூ1.35 லட்சம் முன்பணம் கொடுத்து வாங்கி பாக்கி பணத்தை லோன் மூலம் எடுத்து அதற்கு இஎம்ஐயாக மாத தவணை செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு மாதம் ரூபாய் 5000 மட்டுமே மாத தவணை வரும்.

கிட்டத்தட்ட புதிதாக ஒரு பைக் வாங்கினால் நீங்கள் மாதம் எவ்வளவு செலுத்த வேண்டுமோ அதை செலுத்தினால் போதும். ஆனால் கார் வாங்கும் போது அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் வரை நீங்கள் லோனை திருப்பி செலுத்தும் காலம் எடுத்துக் கொள்ளலாம். ஏழு ஆண்டுகள் திருப்பி செலுத்தும் போது பட்சத்தில் குறைவான மாதத்தவணை வரும். இதே நாள் நீங்கள் பைக் வாங்கும் செலவிலேயே கிட்டத்தட்ட காரை வாங்கிவிடலாம்.
மாருதி ஆல்டோ கே10 காரைப் பொறுத்தவரை மொத்தம் நான்கு விதமான வேறுயன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி ஸ்டாண்டர்ட், எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இதில் விஎக்ஸ்ஐ வேரியண்டில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த காரின் டாப் மாடல் வெளியே ரூ6.65 லட்சம் தான் இதில் அனைத்து அம்சங்களும் வழங்கப்படுகின்றன.
இதில் உள்ள இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 66 பிஎச்பி பவரையும் 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜை பொறுத்தவரை 24 கிலோமீட்டர் முதல் 33 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கோடை காலத்தில் நீங்கள் உங்கள் பைக்கை விற்றுவிட்டு உங்களுக்கு சொந்தமாக கார் வாங்க வேண்டும் நினைத்தால் இந்த கார் உங்களுக்கு நல்ல சாய்ஸாக இருக்கும். விலையும் குறைவு அதே நேரத்தில் உங்களுக்கு வெயில், மழை, குளிர் என்ற எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் நீங்கள் பயணம் செய்யலாம் நல்ல மைலேஜ் கிடைக்கும் உடனடியாக இந்த காரை வாங்குவதற்கான ஏற்பாடை செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









