33 கிமீ மைலேஜ் தரும் இந்த காரை இந்தியாவை விட வெளிநாட்டுல தான் எல்லாரும் கேட்டு வாங்குறாங்க! ஏன் தெரியுமா?
இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகி வரும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஆல்டோ கே10 காருக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஓராண்டில் இந்த காரின் ஏற்றுமதி என்பது 1000 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அளவுக்கு எப்படி இந்த காரின் வளர்ச்சி ஏற்பட்டது? இதில் அப்படி என்ன அம்சங்கள் இருக்கிறது என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே விற்பனையாகி வரும் குறைந்த விலை காரும் இதுதான் விற்பனை இந்தியாவில் சிறப்பாக இருந்து வருகிறது. முதல் தலைமுறை கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் இந்த காரை தான் விரும்பி வாங்கி வருகிறார்கள். சிறிய குடும்பத்திற்கு சிறிய பயன்பாட்டிற்காக இந்த கார் ஏற்றதாக இருக்கிறது.

ஆல்டோ கே10 காரின் கடந்த செப்டம்பர் மாத விற்பனையை பொருத்தவரை மொத்தம் 8655 கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. இந்தியாவில் மட்டும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு என்ன சொல்லிவிட முடியாது. கடந்த செப்டம்பர் மாதம் வெளிநாடுகளிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.
செப்டம்பர் மாதம் மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே10 காரை மட்டும் 442 கார்களை கடந்த செப்டம்பர் மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 43 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது 927.91% அளவுக்கு இந்த ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரே ஆண்டில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் உள்ள அம்சங்கள் தான்.

மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே10 காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தி உள்ளது. இது 67 எச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்த காரில் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
சிஎன்ஜி எரிபொருளில் இந்த கார் இயங்கும் போது இது அதிகபட்சமாக 57 பிஎச்பி பவரும் 82 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோல் மேனுவல் வேரியண்டில் 27.39 கிலோமீட்டர் மைலேஜ், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 27.90 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இருப்பதிலேயே அதிக மைலேஜ் சிஎன்ஜி வேரியன்டில் தான் கிடைக்கிறது.

மாருதி நிறுவனம் இந்த ஆட்டோ கே10 கார் 33.85 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் வகையில் உருவாக்கியுள்ளது. இதனால் இந்த காரை வாங்குபவர்களுக்கு இது ஒரு குறைந்த பெட்ரோல் செலவு கொண்டு இயங்கும் காராக இருக்கிறது. இதன் காரணமாகவே பல வாடிக்கையாளர்கள் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.
இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை இந்த காருக்குள்ளே 7 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்டேரிங் வீல் கண்ட்ரோல் பட்டன்கள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக பவர் அட்ஜஸ்டபிள் ஒஆர்விஎம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இரண்டு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக ஏபிஎஸ், பிரேக்கிங், பின்பக்க பார்க்கிங் சென்சார், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மார்க்கெட்டில் உள்ள ரெனால்ட் க்விட் காருடன் இந்த கார் போட்டியை போட்டு விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூ3.99 லட்சம் முதல் ரூபாய் 5.96 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறைந்த விலை கார்களுக்காக ஒரு காலத்தில் மவுசு இருந்தது. தற்போது அந்த மவுசு குறைந்து எஸ்யூவி கார்கள் மீது மக்கள் அதிகம் இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த கார்களுக்கு என சிறிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் வெளிநாடுகளில் இந்த கார்கான மவுசு அதிகரித்துள்ளது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









