33.8 கிமீ மைலேஜ் கொடுத்தாலும் இதெல்லாம் இருந்தாதான் இந்த கார் விக்கும்! இனி மைலேஜை யாரும் பார்க்க மாட்டாங்க!
மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே10 கார் நீண்ட ஆண்டுகளாக இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காராக இருக்கிறது. முக்கியமாக என்ட்ரி-லெவல் செக்மெண்டில் அதிக அளவிலான மக்களை கவர்ந்த காராக இந்த கார் தான் இருக்கிறது. இதனால் இந்த காரின் விற்பனை நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த செக்மெண்டிலேயே கார்களின் விற்பனை மிக குறைவாக இருக்கிறது. முக்கியமாக மார்க்கெட்டில் உள்ள மற்ற கார்களுக்கு போட்டியாக இந்த கார்களில் சில விஷயங்கள் இல்லை என்பதால் மக்கள் விரும்பவில்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் கார்களில் மாருதி ஆல்டோ கே10 காருக்கு நல்ல வரவேற்பு காலத்தில் இருந்தாலும், தற்போது அந்த கார் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக இந்த காரின் லுக் மற்றும் இந்த காரில் உள்ள அம்சங்கள் மீது எல்லாம் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில், தற்போது ஆட்டோமொபைல் பிரியர்கள் பலர் ஆல்டோ கார் புதிய அவதாரத்தில் மாற்றினால் நிச்சயம் இது இந்தியாவில் இன்னொரு ரவுண்ட் வரும்.

இப்படியாக அந்த கார் மாற்றப்படும் போது அதன் டிசைன் அமைப்பு சற்று மாற்றப்பட வேண்டும் என்ற பேச்சு நிலவி வருகிறது. தற்போது உள்ள வடிவமைப்பு இதற்கு முந்தைய டிசைனிலிருந்து ஓரளவு மாற்றம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்து வரப்போகும் வடிவமைப்பு இந்த கார் செல்லும்போது வித்தியாசமாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த காரில் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி லைட் செட்டப்புகள் எல்லாம் இருக்க வேண்டும் என்ற பேச்சு இருக்கிறது.
அடுத்ததாக காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை தற்போது ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு புதிய அம்சங்கள் எல்லாம் கார்களில் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இதனால் இந்த ஆல்டோ கே 10 காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இப்படியான அம்சங்கள் அந்த கார்களிலும் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சுலபமான ரைடிங் அனுபவமும், பயணிகளுக்கு நல்ல சொகுசான ரைடிங் அனுபவமும் கிடைக்கும்.

ஒரு காலத்தில் இந்திய வாடிக்கையாளர்கள் பலர் விலை குறைவான கார்களை எதிர்பார்த்தார்கள். அதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல அடிப்படை வசதிகளை கூட வாகனங்களில் இருந்து நீக்கி குறைந்த விலைக்கு வாகனங்களை விற்பனை செய்தன. ஆனால் இன்று மக்கள் சில புதிய வசதிகளுக்காக கொஞ்சம் கூடுதல் பணத்தை கூட செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். இதை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பாதுகாப்பான கார் மீது நல்ல மோகம் இருக்கிறது. எந்த காராக இருந்தாலும் அதில் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருந்தால் மட்டுமே இந்திய வாடிக்கையாளர்கள் அந்த காரை வாங்குகிறார்கள். இதனால் தற்போது மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே 10 காரில் வழங்கி வரும் முன்பக்க இரண்டு ஏர்பேக் அம்சத்தை அப்டேட் செய்து அதிக பாதுகாப்பு அம்சம் கொண்ட காராக இந்த காரை மாற்ற வேண்டும்.

மாருதி நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமான ஹுண்டாய் நிறுவனம் கூட தனங்களது அனைத்து கார்களிலும் 6 ஏர் பேக்குகள் கட்டாயம் இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டு விட்டது. மாருதி ஆல்டோ கே 10 காரை பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா அல்லது ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவற்றை கட்டாயமாக தங்கள் கார்களில் உட்படுத்த வேண்டும்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை என்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய முகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். விலை சற்று அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, எலெக்ட்ரிக் வாகனங்களால் அவர்களுக்கு பல்வேறு விதமான பயன்கள் கிடைப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக மாருதி நிறுவனம் தனது ஆட்டோ கே10 காரில் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி அதை விற்பனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் மத்தியில் இது ஒரு நல்ல வரவேற்பை பெறும். மேலும் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் ஆப்ஷனாக இந்த ஒரு காரும் பார்க்கப்படும் என்பதால் இந்த கார் நிச்சயம் எலெக்ட்ரிக் வெர்ஷனில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
மாருதி நிறுவனம் தற்போது இந்த காரை பெட்ரோல் மற்றும் விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் கே சிரீஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் வெர்ஷினில் 24.90 கிலோமீட்டர் மைலேஜ், சிஎன்ஜி வெர்ஷனில் 33.85 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயாரிக்க வேண்டும் என்றால் மாருதி நிறுவனம் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையும் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியாவில் சிறிய ரக கார்களுக்கு மவுசு குறைந்து வருகிறது. அந்த ரக கார்களின் விற்பனை குறைந்து வரும் நிலையில் இப்படியான அப்டேட்களை சிறிதாக கார்களில் கொண்டு வருவதன் மூலம் அந்த செக்மெண்டில் விற்பனையை அதிகரிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்யலாம். நிச்சயம் இது பெரிய அளவில் பலனை அளிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









