36 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை மாசம் ரூ5,000 இஎம்ஐ கட்டி வாங்கலாமா? எப்படி சாத்தியம்?
தினமும் நீங்கள் அலுவலகத்திற்கு, கல்லூரிக்கு அல்லது வேறு ஏதாவது வேலை செய்யும் இடத்திற்கோ சென்று வருகிறீர்கள் என்றால் நீங்கள் தினமும் பஸ், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தை தான் அதிகம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த பொது போக்குவரத்தில் அதிகமான பிரச்சினைகள் இருக்கிறது. தூசு, நெரிசல், கூட்டம், பாதுகாப்பின்மை உள்ளிட்ட ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது.
இதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றால் சொந்தமாக ஒரு வாகனம் இருந்தால் நன்றாக இருக்கும் என உங்களுக்கு தோன்றும். அப்படியாக சிலர் பைக்கை வாங்குகிறார்கள். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பைக்கில் பயணம் செய்வது, அதே நேரம், அதிக தூரம், பைக்கில் பயணம் செய்வது எல்லாம் கொஞ்சம் ரிஸ்க்கான வேலை தான். இப்படியானவர்களுக்கு குறைந்த விலையில் ஒரு கார் இருந்தால் நன்றாக இருக்கும். இந்த கார் தான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தித் தரும்.

இதனால் கார் வாங்க வேண்டும் என சிலர் நினைத்தால் காரின் விலை அதிகமாக இருக்கும் மிக அதிகமாக செலவு செய்து காரை வாங்க வேண்டும். தற்போது பெட்ரோல் விலை எல்லாம் அதிகமாக இருக்கிறது. இதனால் கார் வாங்க வேண்டும் என நினைப்பதே தவறு என்று எல்லாம் யோசிப்பார்கள். ஆனால் உண்மையில் மார்க்கெட்டில் பார்த்தால் ஒரு பைக்கை பராமரிக்கும் செலவில் ஒரு காரை பராமரித்து விட முடியும்.
அது மட்டுமல்ல பைக் போலவே காரும் நல்ல மைலேஜ் தரும் இதை விட முக்கியமாக மிகக் குறைந்த விலையில் குறைவான இஎம்ஐ மூலம் இந்த காரை வாங்க முடியும். இப்படி எல்லாம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் தவற விட மாட்டீர்கள் அல்லவா?

அப்படியான ஒரு கார் உண்மையிலேயே மார்க்கெட்டில் இருக்கிறது. இந்த காரை நீங்கள் வாங்கி விட்டால் பொது போக்குவரத்தில் உள்ள நெருக்கடி கூட்டம் உள்ளிட்ட எந்தவித பிரச்சனையும் உங்களுக்கு தேவையில்லை. டிராபிக் குறித்த பயமில்லை. நீங்கள் நிம்மதியாக நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பயணம் செய்ய முடியும்.
அந்த கார் தான் மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஆல்டோ கே10 கார் இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலை கார் என்றால் இதுதான். இந்த கார் வெறும் குறைந்த விலை கார் மட்டும் அல்ல அதிக மைலேஜ் தரும் காராகவும் இருக்கிறது. மாருதி நிறுவனம் இந்த ஆல்டோ கே10 காரில் சிஎன்ஜி ஆப்ஷனையும் உட்பகுதியுள்ளது. இந்த காரில் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் விலை மிக குறைவாக இருந்தாலும் இதில் ஏராளமான அம்சங்கள் இருக்கிறது. சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்ற காராக இந்த கார் இருக்கும் மிகக் குறைவான செலவில் இந்த காரை பயன்படுத்த முடியும். இந்த காரில் தாராளமாக ஐந்து நபர்கள் வரை பயணம் செய்யலாம். சிறிய கார் என்பதால் குறைவான நபர்கள் தான் பயணம் செய்ய முடியும் என்ற விஷயம் எல்லாம் இந்த காரில் கிடையாது.
ஆல்டோ கே10 இன்ஜினை பொருத்தவரை 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிஎன்ஜி ஆப்ஷன் உடனும் விற்பனைக்கு வருகிறது. இந்த இன்ஜின் பெட்ரோல் இன்ஜினில் 65.71 பிஎச்பி பவரையும், சிஎன்ஜி வெர்ஷனில் 55.92 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஹை ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை பெட்ரோல் இன்ஜினில் இயங்கினால் லிட்டருக்கு 28கிலோமீட்டர் மைலேஜ் சிஎன்ஜியில் இயங்கும்போது ஒரு கிலோவிற்கு 36கிலோமீட்டர் மைலேஜ் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இந்த காரின் பராமரிப்பு செலவு என்பது மிக குறைவு தான். இந்த காரின் பின்பக்கம் உள்ள பூட் ஸ்பேஸ் 214 லிட்டர் அளவு இருக்கிறது.
ஆண்டிற்கு 5 முதல் 6 ஆயிரம் ரூபாய் மட்டும் பராமரிப்பிற்காக செலவு செய்தால் போதும். இப்படி கணக்கு செய்தால் மாதம் ரூபாய் 400 மட்டுமே இந்த காருக்கான பராமரிப்பு செலவாக இருக்கிறது. அதே நேரம் ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் மார்க்கெட்டில் குறைவாக தான் இருக்கிறது. இந்த காரை நீங்கள் வாங்கினால் கார் வாங்கியதற்கு பிறகு ஆகும். செலவு என்பது உங்களுக்கு குறைவாக தான் இருக்கும்.

இந்த காரின் விலையைப் பொறுத்தவரை ரூ3.99 லட்சம் முதல் ரூ5.96 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. நீங்கள் இதில் குறைந்த விலை காரை வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கும்போது ஆன்ரோடு விலையாக ரூபாய் 4.43 லட்சம் என்ற விலைக்கு வாங்க வேண்டும்.
இதை நீங்கள் ரூ1.32 லட்சம் முன்பனமாக கொடுத்து இந்த காரை வாங்கினால் பாக்கியுள்ள ரூ3.11 லட்சத்தை லோன் மூலம் வாங்க வேண்டும். இதற்கு 9 சதவீத வட்டி போட்டு 7 ஆண்டுகளுக்கு நீங்கள் திருப்பி செலுத்தினால் மாதம் ரூபாய் 5000 செலுத்தினால் போதுமானது.

ஆனால் இந்த லோன் பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை நீங்கள் நேரடியாக ஷோரூமிற்கு சென்று அங்கு உங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து ஒருமுறை ஷோரூமில் உள்ள வாகன லோன் வழங்கும் நபர்களிடம் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு எவ்வளவு லோன் கிடைக்கும் என்ற விவரம் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று கார் வாங்க நினைக்கும் பலர் முக்கியமான பிரச்சினையாக கருதுவது காருக்காக மாதம் மாதம் கட்ட வேண்டிய இஎம்ஐ மற்றும் காரின் பராமரிப்பு மற்றும் பெட்ரோல் செலவுகள் தான். இந்த மூன்று பிரச்சினையையும் சரி செய்யும் வகையில் குறைவான இஎம்ஐ நல்ல மைலேஜ் தரும். குறைவான பராமரிப்பு செலவு கொண்ட காராக இந்த கார் இருப்பதால் இந்த காரை நிச்சயம் நீங்கள் தேர்வு செய்து வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









