இன்னும் செம்ம ஒர்த்தான காராக மாறிய மாருதி பலினோ! தீபாவளிக்கு பட்டாசு வாங்குறத விட்டுட்டு இந்த காரை வாங்கலாம்!

இந்தியர்களின் பிரியமான மற்றும் நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக பலினோ (Baleno) இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் பக்கமே கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் தற்போது சிறப்பு பதிப்பு ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. விழாக்காலத்தை முன்னிட்டே பலினோ-வில் சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. பலினோ ரீகல் எடிசன் (Baleno Regal Edition) எனும் பெயரிலேயே அந்த பதிப்பு நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்த சிறப்பு பதிப்பானது இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே நாட்டில் விற்பனையில் கிடைக்கும் என மாருதி சுஸுகி அறிவித்து உள்ளது. ஆல்ஃபா (Alpha), ஜீட்டா (Zeta), டெல்டா (Delta) மற்றும் சிக்மா (Sigma) ஆகிய வேரியண்டுகளில் பலினோ ரீகல் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

Maruti baleno regal edition launched

இதுமட்டுமில்லைங்க ஆட்டோமேட்டிக் மற்றும் சிஎன்ஜி இந்த இரண்டு ஆப்ஷன்களிலும் மாருதி சுஸுகி பலினோ ரீகல் விற்பனைக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், சிஎன்ஜி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை விரும்பும் வாடிக்கையாளர்களாலும் இந்த பதிப்பை வாங்கிக் கொள்ள முடியும். தொடர்ந்து, வழக்கமான பலினோ பதிப்பைக் காட்டிலும் இந்த சிறப்பு பதிப்பு பலினோ அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியிருக்கும் வகையிலும் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், இன்னும் அதிக பிரீமியமான காராக பலினோ மாறியிருக்கின்றது. மிக முக்கியமாக பலினோ ரீகலை தனித்துவமானதாக தென்பட செய்வதற்காக அதன் கிரில்லை இன்னும் அழகானதாக மாருதி மாற்றியிருக்கின்றது. இதுதவிர, முன் மற்றும் பின் பக்கத்தில் உடலின்கீழ் பகுதிக்கான ஸ்பாய்ளர்கள் வழங்கப்பட்டு இருக்கும்.

தொடர்ந்து, கூடுதல் அலங்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பனி மின் விளக்கு, பக்கவாட்டு பகுதியில் மோல்டிங்குகள், புதிய இருக்கைக் கவர்கள் உள்ளிட்டவையும் சிறப்பு பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த காரின் இன்டீரியரும் புதியதாக தென்படும் வகையில் மாற்றப்பட்டு இருக்கின்றது. அனைத்து கால சூழலுக்கும் ஏற்ற 3டி மேட்டுகள் போன்ற அம்சங்களே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதைத்தொடர்ந்து, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, கலர் ஹெட்-அப் திரை, எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிர்ரர் மற்றும் ஸ்மார்ட் ப்ளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் பலினோ ரீகல் எடிசனில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த திரை 22.86 செமீ அளவுடையது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, நெக்ஸா பாதுகாப்பு கவசமும் இந்த பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆறு ஏர் பேக்குகள், இஎஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்டவற்றைக் கொண்டதே இந்த பாதுகாப்பு கவசம் ஆகும்.

தொடர்ந்து, சுஸுகி கன்னெக்ட் எனப்படும் ஸ்மார்ட் அம்சமும் இந்த பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக 40க்கும் மேற்பட்ட சிறப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 1197 சிசி, 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது அதிகபட்சமாக 88.5 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் திறன் கொண்டது. பலினோவின் வழக்கமான ஆல்ஃபா வேரியண்டைக் காட்டிலும் இந்த சிறப்பு ஆல்ஃபா ரூ. 45,829 அதிக விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதேபோல், பலினோ ரீகல் எடிசன் ஜீட்டா வேரியண்ட் ரூ. 50,428-க்கும், டெல்டா வேரியண்ட் ரூ. 49,990-க்கும் மற்றும் சிக்மா வேரியண்ட் ரூ. 60,200 கூடுதல் விலைக்கும் விற்பனைக்குக் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலினோ இருக்கின்றது. இந்த காரின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டே தற்போது அதில் சிறப்பு பதிப்பு களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு வழக்கமான பதிப்புகுக்கு கிடைப்பதைப் போலவே மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 11:11 [IST]
English summary
Maruti baleno regal edition launched in india with accessories valued at rs 60199
மேலும்... #maruti suzuki #diwali #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+