25கிமீ மைலேஜ் தரும் காரை இன்னும் அதிக பாதுகாப்பானதாக மாற்றிய மாருதி! என்ன இந்த அம்சத்தை அதுல தந்திருக்காங்களா!
மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சிஎன்ஜி (CNG) கார் மாடல்களில் பிரெஸ்ஸா சிஎன்ஜி (Brezza CNG)-யும் ஒன்றாகும். நாட்டின் அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி கார் மாடல்களிலும் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. இந்த கார் மாடலையே தற்போது அதிகம் பாதுகாப்பு தரும் கார் மாடலாக மாற்றியிருக்கின்றது மாருதி சுஸுகி.
இரண்டு பாதுகாப்பு அம்சங்களை பிரெஸ்ஸா சிஎன்ஜியின் அனைத்து தேர்வுகளிலும் கட்டாயமாக்கி இருக்கின்றது மாருதி சுஸுகி. எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம் (Electronic Stability Program) மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் (Hill Hold Assist) ஆகிய அம்சங்களையே பிரெஸ்ஸா சிஎன்ஜி-யின் அனைத்து வேரியண்டுகளிலும் மாருதி சுஸுகி கட்டாயமாக்கி இருக்கின்றது.

பிரெஸ்ஸா சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ (LXi), விஎக்ஸ்ஐ (VXi) மற்றும் (ZXi) ஆகியே வேரியண்டுகளிலேயே பிரெஸ்ஸா சிஎன்ஜி தேர்வு வழங்கப்படுகின்றது. இந்த அனைத்து தேர்வுகளிலும் பயணிகளின் பாதுகாப்பிற்காக இஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். முன்னதாக இந்த அம்சங்கள் பெட்ரோல் கார் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இரண்டு பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதை தவிர வேறு எந்த மாற்றத்தையும் பிரெஸ்ஸா சிஎன்ஜியில் மாருதி சுஸுகி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி ரூ. 9.29 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 17.38 கிமீ தொடங்கி 19.89 கிமீ வரையில் மைலேஜ் தரும்.
அதேவேளையில், இதன் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 25.51 கிமீ மைலேஜையும் வழங்கும். பிரெஸ்ஸா பெட்ரோல் 8.33 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடலே இதுவாகும். அந்தவகையில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹெட்-அப் திரை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஆர்கேமிஸ் ஸ்மார்ட் ப்ளே ப்ரோ பிளஸ் சரவுண்ட் சென்ஸ் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், சுஸுகியின் அடுத்த தலைமுறை கார் இணைப்பு அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜியில் அடுத்த தலைமுறை கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 64.6 கிலோவாட் பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 121.5 என்எம் டார்க்கை 4,200 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும்.
கியர்பாக்ஸைப் பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே சிஎன்ஜி பிரெஸ்ஸாவில் வழங்கப்படுகின்றது. இந்தியர்கள் பலரின் பிரியமான காம்பேக்ட் எஸ்யூவி ரக காராக பிரெஸ்ஸா இருக்கின்றது. இதன் பக்கம் இன்னும் கூடுதலாக வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது சிஎன்ஜி வெர்ஷனை அதிக பாதுகாப்பானதாக மாற்றி இருக்கின்றது.
இதனால், வரும் நாட்களில் இந்த கார் மாடலின் விற்பனை எண்ணிக்கை இன்னும் பலமடங்காக அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி கொடிக் கட்டிப் பறந்துக் கொண்டிருக்கின்றது.பிரெஸ்ஸா சிஎன்ஜி உடன் சேர்த்து நிறுவனம் 14 சிஎன்ஜி கார் மாடல்களை தனது பிராண்டின்கீழ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே இந்தியாவில் அதிக அளவில் சிஎன்ஜி கார்கள் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பஜாஜ் நிறுவனம்கூட அதன் முதல் சிஎன்ஜி பைக்கை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் ஜுன் மாதத்தில் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








