5 பேர் போகலாம்! 20 கி.மீ மைலேஜ் தரும் இந்த கார் இந்தியாவிலேயே அதிகமா வித்திருக்குது!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாருதி நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான காராக மாறி உள்ளது. இப்படி திடீரென மக்கள் இந்த காரை வாங்குவதற்கான காரணம் என்ன? அப்படி இந்த காரில் என்ன அம்சங்கள் எல்லாம் இருக்கின்றன என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

செப்டம்பர் மாதம் பிறந்த நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளன. அதன்படி மாருதி நிறுவனம் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில், இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காராக மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் தான் இருக்கிறது. கடந்த மாதம் ஒட்டு மொத்தம் 19,190 கார்கள் விற்பனையாகி உள்ளன.

maruti brezza sales

பொதுவாக இந்திய மார்க்கெட்டில் சிறிய ரக கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும். ஆனால் தற்போது சிறிய கார்களின் எண்ணிக்கை குறித்து மக்கள் பலர் எஸ்யூவி ரக கார்களை நோக்கி தங்கள் பார்வையை திருப்பி விட்டார்கள். அதனால் தற்போது அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி ரக காரர்கள் தான் விற்பனையாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே எஸ்யூவி கார்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களில் முதலிடத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாருதி நிறுவனத்தின் பிரசா கார் தான் இந்த இடத்தை பிடித்துள்ளது இப்படி மக்கள் விரும்பி வாங்கும் அளவுக்கு மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா காரில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? ஏன் இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள் என்ற தெளிவான விவரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

maruti brezza sales

மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா காரின் இன்ஜினை பொறுத்தவரை கே சிரீஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட் டபிள்யூடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பிடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 103 எச்பி பவரையும் 137 என்எம் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் உள்ள அம்சங்கள் மக்களை அதிகம் ஏற்றுவது முக்கியமாக இந்த காரில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா பல்வேறு விதமான தகவல்களை தரும் உயர் தொழில்நுட்ப கேமராவாக இருக்கிறது. இந்த கேமரா காருக்குள் இருக்கும் 9 இன்ச் ஸ்மார்ட் ப்ரோ டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவும் மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

maruti brezza sales

மாருதி மற்றும் டொயோட்டா இரண்டு நிறுவனங்களும் சேர்ந்துதான் இந்த சிஸ்டத்தை வடிவமைத்துள்ளார்கள். இது ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேவை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரீனில் காரில் உள்ள கேமராவில் மூலம் காரை சுற்றி இருக்கும் அனைத்து விஷயங்களையும் பார்க்க முடியும்.

மேலும் இந்த காரில் ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் இருக்கிறது. வயர் இல்லாமலேயே உங்கள் செல்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த காரில் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்குவதற்கு இந்த காரின் மைலேஜ் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா காரின் மைலேஜ் பொறுத்தவரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆகிய இரண்டு கியர் ஆப்ஷன்களுக்கும் தனித்தனியான மைலேஜ் கிடைக்கிறது. அதன்படி மேனுவல் கியர் ஆப்ஷனில் 20.15 கிலோமீட்டர் மைலேஜ் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் 19.80 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராக இருக்கிறது. இதனால் குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிட்டு அதற்காக காரை வாங்கும் மக்கள் பலர் இந்த காரை விரும்பி தேர்வு செய்கிறார்கள். இதன் மைலேஜ் அதிகமாக இருப்பதால் இந்த காரின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகமாக விற்பனையான காராக இது மாறி இருப்பதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2024, 19:40 [IST]
English summary
Maruti brezza sales top selling car in august 2024 full details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X