ராணுவ கேன்டீனில் பிரெஸ்ஸாவ இவ்ளோ கம்மி விலையில வாங்க முடியுமா? 100, 200 இல்ல.. லட்சத்துக்கும் அதிகமா கம்மி!
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza)-வும் ஒன்றாகும். இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு ஆப்ஷன்களில் இந்த கார் மாடல் இப்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதன் பெட்ரோல் தேர்வு ரூ. 8.34 லட்சத்தில் இருந்து ரூ. 14.14 லட்சம் வரையிலான விலையிலும், சிஎன்ஜி தேர்வு ரூ. 9.29 லட்சம் தொடங்கி ரூ. 12.25 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.

இதே பிரெஸ்ஸா ராணுவ வீரர்களுக்கான கேன்டீனில் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைப்பதாகக் கூறப்படுகின்றது. அப்படி எந்த அளவிற்கு அது குறைவான விலையில் ராணுவ கேன்டீனில் விற்கப்படுகின்றது என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ராணுவத்தினர்களுக்கான கேன்டீனில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ரூ. 7.52 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜிஎஸ்டி மற்றும் டிசிஎஸ் சேர்க்கப்பட்ட விலை இதுவாகும். அதாவது, நாம் எக்ஸ்-ஷோரூமில் வாங்குவதைக் காட்டிலும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை ராணுவ வீரர்கள் 81,834 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் ஆன்-ரோடு விலை ரூ. 9.84 லட்சம் ஆகும். எப்படி பார்த்தாலும் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக ராணுவ வீரர்களால் இந்த காரை வாங்கும்போது மிச்சப்படுத்திக் கொள்ள முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது. முன்னதாக பார்த்த பிரெஸ்ஸா எல்எக்ஸ்ஐ (LXI) பெட்ரோல்-மேனுவல் தேர்வின் ராணுவ கேன்டீன் விலை ஆகும்.
இன்னும் இந்த கார் மாடலின் ஒன்பது விதமான தேர்வுகள் ராணுவ கேன்டீனில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அந்தவகையில், விஎக்ஸ்ஐ (vXI) பெட்ரோல் - மேனுவல் ரூ. 8.73 லட்சத்திற்கும், இசட்எக்ஸ்ஐ (ZXI) மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் - மேனுவல் ரூ. 10.10 லட்சத்திற்கும், இசட்எக்ஸ்ஐ பிளஸ் (LXI) மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் - மேனுவல் ரூ. 11.42 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது.
விஎக்ஸ்ஐ (LXI) மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் ரூ. 9.95 லட்சத்திற்கும், இசட்எக்ஸ்ஐ (LXI) மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் ரூ. 11.43 லட்சத்திற்கும், இசட்எக்ஸ்ஐ பிளஸ் (LXI) மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் ரூ. 12.74 லட்சத்திற்கும் ராணுவ வீரர்களுக்கு கேன்டீனில் விற்கப்படுகின்றது.
இதேபோல், எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி மேனுவல் ரூ. 7.31 லட்சத்திற்கும், விஎக்ஸ்ஐ சிஎன்ஜி மேனுவல் ரூ. 8.36 லட்சத்திற்கும், இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி மேனுவல் ரூ. 9.41 லட்சத்திற்கும் அவர்களுக்கு விற்கப்படுகின்றது. இதன் வாயிலாக நம்மைவிட ரூ. 81,834 முதல் ரூ. 2,68,296 வரை குறைவான விலையில் ராணுவ வீரர்கள் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வருகின்றது.
இருப்பதிலேயே அதிக மைலேஜை தரக் கூடிய பிரெஸ்ஸாவின் சிஎன்ஜி ஆப்ஷன் இருக்கின்றது. இது ஒரு கிலோ கிராமிற்கு 25.51 கிமீ வரையில் மைலேஜ் தரும். இதன் பெட்ரோல் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 17.38 கிமீ முதல் 19.89 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி இந்த கார் மாடலுக்கு 20 ஆயிரம் ஆர்டர்கள் பெண்டிங் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த அளவிற்கே இந்தியர்கள் மத்தியில் பிரெஸ்ஸாவிற்கு டிமாண்ட் நிலவிக் காொண்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகியே சிஎன்ஜி கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இதனால்தான் இந்த நிறுவனம் சிஎன்ஜி கார்களை அதிக அளவில் விற்பனைக்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு போட்டியாக டாடா மோட்டார்ஸும், ஹூண்டாயும் சிஎன்ஜி கார்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








