போட்டியாளர்கள் முன்னேறவே கூடாதுனு நினைக்குதோ மாருதி! டாடா-மஹிந்திரா கார்களை கதிகலங்க வைக்க வந்த ஸ்பெஷல் கார்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் (அதிகம் விற்பனையாகும்) கார் மாடல்களில் ஒன்றாக பிரெஸ்ஸா (Brezza) இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் பக்கமே கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது அந்த கார் மாடலில் சிறப்பு பதிப்பு ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அந்த சிறப்பு பதிப்பு பிரெஸ்ஸா அர்பனோ எடிசன் (Brezza Urbano Edition) என்கிற பெயரில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

வழக்கமான பிரெஸ்ஸாவைக் காட்டிலும் கூடுதல் அலங்கரிப்பைக் கொண்டதாகவே இந்த பிரெஸ்ஸா தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இதன் விலையும் சற்று அதிகமாக உள்ளது. ரூ. 8.49 லட்சம் என்கிற விலையிலேயே பிரெஸ்ஸா அர்பனோ எடிசன் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Maruti brezza urbano edition

இந்த விலையிலேயே பலதரப்பட்ட சிறப்பம்சங்களையும், கவர்ச்சிகரமான அணிகலன்களையும் இந்த சிறப்பு பதிப்பில் மாருதி சுஸுகி நிறுவனம் கூடுதலாக வாரி வழங்கி இருக்கின்றது. ஆகையால், வழக்கமான பதிப்பிற்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மிக சிறப்பான டிமாண்ட் பிரெஸ்ஸா அர்பனோ எடிசனுக்கும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

பிரெஸ்ஸாவில் கிடைக்கும் பல்வேறு சிறப்பம்சங்களில் பெட்ரோல், சிஎன்ஜி ஆப்ஷன்களும் அடங்கும். இதே ஆப்ஷன்களை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா அர்பனோ எடிசனிலும் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. பிரெஸ்ஸாவின் தொடக்க நிலை தேர்வான எல்எக்ஸ்ஐ மற்றும் நடு நிலை தேர்வான விஎக்ஸ்ஐ ஆகியவற்றிலேயே அர்பனோ எடிசன் விற்பனைக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Brezza urbano edition details

இப்போதைய நிலவரப்படி பிரெஸ்ஸா இந்தியாவில் நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எல்எக்ஸ்ஐ (LXi), விஎக்ஸ்ஐ (VXi), இசட்எக்ஸ்ஐ (ZXi) மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் (ZXi+) ஆகியவையே அவை ஆகும். கடைசி இரண்டு தேர்வுகளும் உயர்நிலை வேரியண்டுகள் என்பதால் சிறப்பம்சங்கள் விஷயத்தில் மற்ற இரண்டைக் காட்டிலும் பலமடங்கு முன்னேறியவையாகக் காட்சியளிக்கின்றன.

இந்த ஏற்றத் தாழ்வையே பிரெஸ்ஸா அர்பனோ எடிசன் வாயிலாக மாருதி சுஸுகி தற்போது சமநிலைப்படுத்தி இருக்கின்றது. அர்பனோ எடிசன் வாயிலாக எல்எக்ஸ்ஐ வேரியண்டில் ரியர் பார்க்கிங் கேமிரா, தொடுதிரை, ஸ்பீக்கர்கள், முன் பக்கத்தில் பனி மின் விளக்கு, பனி மின் விளக்கு கார்னிஷ், முன் மற்றும் பின் பக்கங்களில் ஸ்கிட் பிளேட், முன் பக்கத்தில் குரோம் கார்னிஷ், பாடி சைடு மோல்டிங் மற்றும் வீல் ஆர்ச் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

Maruti brezza

Image Source இவை அனைத்தையும் தனியாக வாங்கச் சென்றால் ரூ. 52,370-ஐ தொட்டுவிடும். ஆனால், இவை அனைத்தையும் ஓர் பேக்கேஜாக ரூ. 42 ஆயிரத்திற்கு தற்போது வழங்க மாருதி சுஸுகி முன் வந்திருக்கின்றது. இதேபோல், அர்பனோ எடிசன் விஎக்ஸ்ஐ வேரியண்டிலும் பலதரப்பட்ட அம்சங்களை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், ரியர் பார்க்கிங் கேமிரா, பனி மின் விளக்கு, ஸ்பெஷல் டேஷ்போர்டுக்கான அலங்கார கூறுகள், பாடி சைடு மோல்டிங், வீல் ஆர்ச், மெட்டல் ஸ்டில் குவார்டுகள், ரெஜிஸ்ட்ரேஷன் பிளேட் ஃப்ரேம் மற்றும் 3டி ஃப்ளூர் மேட் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த அம்சங்களை தனியாக வாங்க வேண்டுமானால் ரூ. 26,149 வரை ஆகும்.

இதையே அர்பனோ எடிசன் வாயிலாக ரூ. 18,500க்கே விற்பனைச் செய்ய மாருதி சுஸுகி முன் வந்திருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் அதன் குட்டியான ஹேட்ச்பேக் கார் மாடல்களின் விற்பனை அதிகப்படுத்தும் நோக்கில் சென்ற மாதத்தின் தொடக்கத்தில் டிரீம் சீரிஸ் (Dream Series) எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இதை குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் அது அறிவித்தது. இந்த நிலையில் சமீபத்திலேயே ஜூலை மாத இறுதி வரை இந்த சிறப்பு பதிப்பு நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் என அது அறிவித்து இருக்கின்றது. நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் டிரீம் சீரிஸ் பதிப்புகளுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதன் விளைவாகவே இந்த கால நீட்டிப்பை அறிவித்தது.

ஆல்டோ கே10 (Alto K10), எஸ்-பிரஸ்ஸோ ( S-Presso) மற்றும் செலிரியோ (Celerio) ஆகிய மாடல்களிலேயே டிரீம் சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பிரெஸ்ஸாவின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இதில் அர்பனோ எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 8.34 லட்சம் தொடங்கி ரூ. 14.14 லட்சம் வரையிலான விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) மற்றும் மிக முக்கியமாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக பிரெஸ்ஸா விற்பனையில் இருக்கின்றது. இந்த போட்டியை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே அர்பனோ எடிசனையும் மாருதி சுஸுகி தற்போது களமிறக்கி இருக்கின்றது. குறிப்பாக, இதன் வருகை மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் டாடா நெக்ஸான்-க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 5, 2024, 14:46 [IST]
English summary
Maruti brezza urbano edition price and features details
மேலும்... #maruti suzuki #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X