16 காரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த மாருதி கார்! இதுல அப்படி என்ன இருக்குது?

மாருதி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில், அந்நிறுவனம் விற்பனை செய்யும் கார்களிலேயே யாரும் எதிர்பாராத வகையில் அதிக எண்ணிக்கையில் குறிப்பிட்ட ஒரு கார் விற்பனையாகி உள்ளது. இதுவரை இந்த கார் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் விற்பனையானது இல்லை. இது மாருதி நிறுவனத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிகமான விற்பனையான காராக மாறி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்திடம் ஏராளமான கார்கள் தற்போது தயாரிப்பில் இருக்கின்றன. இந்த கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமான கார்களாக இருக்கின்றன. இதனால் இதன் விற்பனை அதிகமாக இருக்கிறது.

maruti car sales list

இந்நிலையில் மாருதி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டு வரும் நிலையில், இந்த மாதம் வெளியிட்டுள்ள விற்பனை விபரங்களில் முதலிடம் பிடித்துள்ள கார் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் தான். மாருதி நிறுவனத்தில் ஏகப்பட்ட கார்கள் விற்பனையாகி வரும் நிலையில் இந்த கார் தான் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தை பிடிப்பது இதுதான் முதல் முறையும் கூட.

மாருதி நிறுவனம் தற்போது 17 கார்களை மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்த இதில் 16 கார்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் பிரெஸ்ஸா கார் தான் இருக்கிறது. இனி ஒவ்வொரு கார்களின் விற்பனை விபரங்களை பற்றி பார்ப்போம். கடந்த ஆகஸ்ட் மாதம் 19,190 கார்கள் விற்பனையாகி உள்ளன. இரண்டாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. இது 18,580 கார்கள் விற்பனையாகியுள்ளன.

maruti car sales list

3வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் இருக்கிறது, 16,450 கார்கள் விற்பனையாகியுள்ளன. 4வது இடத்தில் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது 12,844 கார்கள் விற்பனையாகியுள்ளன. 5வது இடத்தில் பலேனோ கார் இருக்கிறது 12,485 கார்கள் விற்பனைக்கு உள்ளன. 6வது இடத்தில் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது, இது 12,387 கார்கள் விற்பனையாகியுள்ளன.

7வது இடத்தில் ஈக்கோ கார் இருக்கிறது, இது 10,985 கர்கள் விற்பனையாகியுள்ளன. 8வது இடத்தில் டிசையர் கார் இருக்கிறது, 10,627 கார்கள் விற்பனையாகியுள்ளன. 9வது இடத்தில் கிராண்ட் விட்டாரா கார் இருக்கிறது, 9021 கார்கள் விற்பனையாகி உள்ளன. 10வது இடத்தில் ஆல்டோ கே10 இருக்கிறது, இது 8,546 காரர்கள் விற்பனையாகி உள்ளன.

maruti car sales list

11 வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் செலிரியோ கார் இருக்கிறது, 3181 கார்கள் விற்பனையாகியுள்ளன. 12வது இடத்தில் எக்ஸ்எல் 6 கார் இருக்கிறது, 2,740 கார்கள் விற்பனையாகி உள்ளன. 13வது இடத்தில் இக்னீஸ் கார் இருக்கிறது, 2464 கார்கள் விற்பனையாகியுள்ளன. 14வது இடத்தில் எஸ்-பிரெஸ்ஸோ கார் இருக்கிறது. 2102 கார்கள் விற்பனையாகியுள்ளன.

பதினைந்தாவது இடத்தில் சியாஸ் கார் இருக்கிறது, மொத்தம் 707 கார்கள் விற்பனையாகி உள்ளன. 16-வது இடத்தில் ஜிம்மி கார் இருக்கிறது. 592 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடைசி இடத்தில் இன்விக்டோ கார் இருக்கிறது, வெறும் 174 கார்கள் தான் விற்பனை ஆகி உள்ளது. இதுதான் மாருதி நிறுவனத்தின் கடந்த ஆகஸ்ட் மாத கார் விற்பனை விபரங்கள் இதில் பிரெஸ்ஸா காரின் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

முதலிடத்தை பிடித்த பிரெஸ்ஸா காரை பொருத்தவரை கே சிரீஸ் 1.5லி டூயல் ஜெட் டபிள்யூடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 9 இன்ச் ஸ்மார்ட் பிளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகிய அம்சங்கள் உள்ளன. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார் இது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனம் அதிக எண்ணிக்கையில் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் விலை குறைவாகவும் அதே நேரத்தில் மக்களுக்கு பிடித்த மாதிரியாகவும் இருப்பதால் அதிக நபர்கள் இதை வாங்குகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, September 6, 2024, 7:00 [IST]
English summary
Maruti car sales list august 2024 brezza tops chart
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X