33 கிமீ மைலேஜ் தரும் இந்த காரை தீபாவளிக்கு வாங்கலாம்! இன்னும் எத்தனை கார்கள் அதிக மைலேஜ் தருது தெரியுமா?

இந்திய ஆட்டோமொபைல் துறையில் தற்போது மாருதி நிறுவனத்திற்கு அதிக மைலேஜ் தரும் கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயர் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரும் கிடைத்துள்ளது. தற்போது பண்டிகை காலத்தில் பலர் மாருதி நிறுவனத்தின் கால்களை வாங்க தயாராக இருக்கும் நிலையில் இது குறித்த சில முக்கிய தகவல்களை காணலாம்.

இந்தியாவில் பண்டிகை காலங்களில் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இப்படியாக பல ஆண்டுகளாக திட்டமிட்டு புதிதாக வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த நல்ல நாட்கள் இதுதான் வாகனம் வாங்குவார்கள் இப்படியாக மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு தற்போது ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் குவிவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

maruti cars mileage details

இப்படியாக கார் வாங்குவதற்கு இருக்கும் ஒரே யோசனை கார் வாங்கிய பிறகு செலவுகள் குறித்த யோசனை தான். கார் வாங்கிய பிறகு இரண்டு விதமான செலவுகள் இருக்கும். காருக்கான எரிபொருள் செலவு மற்றொன்று காருக்கான பராமரிப்பு செலவு எரிபொருள் செலவும், பராமரிப்பு செலவும் குறைவாக இருக்கும் வாகனங்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

இப்படியாக மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் அதிக மைலேஜ் மற்றும் குறைவான பராமரிப்பு செலவில் இயங்கும் வாகனங்களாக உள்ளன. அதன்படி சில வாகனங்களின் மைலேஜ் விபரங்களை முதலில் பார்ப்போம். மாருதி பெட்ரோல் காரில் மாருதி செலிரியோ கார் 26.68 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அடுத்ததாக மாருதி ஸ்விப்ட் கார் 25.75 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது.

maruti cars mileage details

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ 25.30 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது மாருதி வேகன் ஆர் கார் 25.19 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது. மாருதி ஆல்டோ கே10 கார் 24.90 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது. மாருதி பலேனோ கார் 22.94 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. இது டொயோட்டா கிளான்ஸா காருக்கும் பகிரப்பட்ட தொழில்நுட்பமாக இருக்கிறது.

அடுத்ததாக மாருதி டிசையர் காரை பொறுத்தவரை 22.61 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மாருதி ஃபிராங்ஸ் கார் 21.8 கிலோமீட்டர் மைலேஜ் மாருதி கிராண்ட் விட்டாரா கார் 21.11 கிலோமீட்டர் மைலேஜையும், மாருதி எக்ஸெல் 6 கார் 20.97 கிலோமீட்டர் மைலேஜையும், மாருதி சுஸூகி இக்னீஷ் கார் 20.89 கிலோமீட்டர் மைலேஜையும், மாருதி சியாஸ் 20.65 கிலோமீட்டர் மைலேஜையும், மாருதி எர்டிகா 20.51 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்குகிறது.

maruti cars mileage details

மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் 19.89 கிலோமீட்டர் மைலேஜையும் மாருதி நிறுவனத்தின் ஈக்கோ கார் 19.71 கிலோமீட்டர் மைலேஜையும் மாருதி நிறுவனத்தின் ஜிம்னி கார் 14.94 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இவையெல்லாம் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் கார்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக அதிக மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்கள் மாருதி நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி மாருதி நிறுவனத்தின் செலிரியோ கார் 34.43 கிலோமீட்டர் மைலேஜையும், ஆல்டோ கே 10 கார் 33.85 கிலோமீட்டர் மைலேஜையும், வேகன் ஆர் கார் 33.47 கிலோமீட்டர் மைலேஜையும், ஸ்விஃப்ட் கார் 32.85 கிலோமீட்டர் மைலேஜையும், எஸ்-பிரெஸ்ஸோ கார் 32.23 கிலோமீட்டர் மைலேஜையும், டிசையர் கார் 31.12 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது.

பலேனோ கார் 30.61 கிலோமீட்டர் மைலேஜையும், ஃபிராங்க்ஸ் கார் 28.51 கிலோமீட்டர் மைலேஜையும், ஈக்கோ கார் 26.78 கிலோமீட்டர் மைலேஜையும், கிராண்ட் விட்டாரா 26.6 கிலோ மீட்டர் மைலேஜையும், மாருதி எக்ஸ்எல்6 கார் 26.32 கிலோமீட்டர் மைலேஜையும், மாருதி எர்டிகா கார் 26.11 கிலோமீட்டர் மைலேஜையும், மாருதி எர்டிகா கார் 25.59 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது.

இதுபோக ஹைபிரிட் மாடல் கார்கள் வேறு மாருதி நிறுவனத்தின் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி கிராண்ட் விட்டாரா கார் 27.97 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. மாருதி நிறுவனத்தின் இக்விக்டோ கார் 23.24 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்த தீபாவளி நேரத்தில் அதிகமான விற்பனையை செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த அதிக மைலேஜ் கார்கள் மாருதி நிறுவனத்தின் விற்பனைக்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இதனால் இந்த பண்டிகையை மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் கொண்டாட வாடிக்கையாளர்கள் தயாராகி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2024, 16:33 [IST]
English summary
Maruti cars mileage details petrol cng hybrid figures
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X