ஆயிரம் பேர் கூட இந்த காரை வாங்கல! மாருதிக்கு இப்படி ஒரு நிலைமையா? வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் மாருதி. இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் கார்கள் எல்லாம் மார்கெட்டில் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த தகவல் எல்லாம் நமக்கு தெரியும். ஆனால் இந்நிறுவனம் விற்பனை செய்யும் ஒரு காரை ஆயிரம் பேர் கூட வாங்கவில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படியான ஒரு கார் இருக்கிறது. அதைப்பற்றி தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் மாருதி என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். நம்பர்1 இடத்தில் மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் தான் இருக்கிறது. அதிக மக்கள் மாருதி நிறுவனத்தின் கார்களையே வாங்க விரும்புகிறார்கள். இருந்தாலும் கடந்த ஜூலை மாதம் மாருதி நிறுவனத்தின் விற்பனையில் ஓரளவு சரிவு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது இந்நிலையில் மாருதி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு கார் மிக மோசமான விற்பனையை சந்தித்துள்ளது. வெறும் ஆயிரம் கார்களை கூட வாங்காத நிலை தற்போது மாருதி நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இது என்னமோ நமது ஜூலை மாதம் தான் மிக மோசமான விற்பனையை சந்தித்துள்ளது என நீங்கள் நினைக்க வேண்டாம். கடந்த சில மாதங்களாக இந்த காரின் விற்பனை சரிவை தான் சந்தித்து வருகிறது.
மாருதி நிறுவனம் மிட் சைஸ் செக்மெண்டில் தனது சியாஸ் என்ற ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்துவிட்டது. இருந்தாலும், மாருதி நிறுவனத்தின் இந்த செடான் காருக்கு ஓரளவு மதிப்பு இருந்ததால் தொடர்ந்து இந்த காரை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் முழுவதும் வெறும் 603 கார்களை மட்டுமே மாருதி நிறுவனத்தால் விற்பனை செய்யும் முடிந்தது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 1348 கார்களை நிறுவனம் விற்பனை செய்திருந்தது. தற்போது சுமார் 55 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிவை சந்தித்துள்ளது. இது மாருதி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிதியாண்டு அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இந்த சியாஸ் காரின் விற்பனை என்பது மொத்தமே 2772 கார்கள் தான் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-24ம் நிதியாண்டில் மொத்தம் 5101 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது விற்பனை இணைக்க கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாகவே இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலையில் இருக்கிறது.

2024ம் ஆண்டு துவங்கியது முதல் இந்த காரின் விற்பனை மோசமாக இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 363 கார்களும், பிப்ரவரி மாதம் 481 கார்களும், மார்ச் மாதம் 590 கார்களும், ஏப்ரல் மாதம் 867 கார்களும், மே மாதம் 730 கார்களும், ஜூன் மாதம் 572 கார்களும், விற்பனையாகி இருந்த நிலையில் ஜூலை மாதம் வரும் 603 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது.
இப்படியாக கடந்த 7 மாதங்களில் மாருதி நிறுவனம் மொத்தம் 4,206 சியாஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை சரிந்து வருவது இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை வளர்ச்சி அதிகரித்தது தான் செடான் கார்களின் விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. செடான் காரின் வாடிக்கையாளர்கள் தான் எஸ்யூவி ரக காரர்களை தற்போது வாங்கி வருகிறார்கள்.
பிப்ரவரி மாதம் தான் அதன் பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் மூன்று டூயல் டோன் கலர் ஆப்ஷன்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ரூபாய் 11.14 லட்சம் முதல் ரூபாய் 12.34 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.
மாருதி சியாஸ் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103 பிஎஸ் பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
இந்த காரின் ஹைலைட்டே இந்த காரின் மைலேஜ் தான். இந்த கார் 20.04 கிலோ மீட்டர் மைலேஜை ஆட்டோமேட்டிக் வெர்ஷனிலும், 20.65 கிலோமீட்டர் மைலேஜை மேனுவல் வெர்ஷனிலும் கொடுக்கும் திறன் கொண்ட வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரை இன்னும் பலர் வாங்கி வருகிறார்கள். இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் மிட்-சைஸ் செக்மெண்டில் இந்த ஒரே காரை தான் விற்பனை செய்து வருகிறது. இந்த செக்மெண்டில் வேறு எந்த கார்களும் மாருதி நிறுவனத்திடம் இல்லாததால் இந்த செக்மென்டை விட்டு விலகிவிடக்கூடாது என்பதற்காக இந்த காரை விற்பனை செய்து வருகிறது. இருந்தாலும் இந்த காரின் விற்பனை கணிசமான அளவு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









