34 கிமீ போகும் காருக்கு இஎம்ஐ இவ்வளவு கம்மியா? லோன் வாங்கி இந்த காரை வாங்குனா செம லாபம் போலயே!

மாருதி நிறுவனம் சமீபத்தில் தனது அப்டேட் செய்யப்பட்ட டிசையர் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது ரூபாய் 6.79 லட்சம் என்ற விலையில் இந்த கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த காரை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த அறிமுகம் பலரை இந்த காரை நோக்கி ஈர்க்க துவங்கியுள்ளது. இந்த காரை நீங்கள் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் எவ்வளவு லோன் போட்டு எவ்வளவு இஎம்ஐ கட்டி காரை இருக்க முடியும் என விரிவாக காரணம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இந்திய மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக விற்பனையில் இருக்கும் காராக இருக்கிறது. இந்த காரை அப்டேட் செய்து தற்போது உள்ள புதிய டிரெண்டிங்கிற்கு ஏற்ப இதன் வடிவமைப்பை மாற்றி புதிய அம்சங்களை உட்பகுத்தி இந்த காரை மாருதி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 6.79 லட்சம் என்ற விலையில் இந்த கார் அறிமுகமாகியுள்ளது. பேஸ் வேரியண்டான எல்எக்ஸ்ஐ எம்டி பெட்ரோல் வேரியன்ட் ரூபாய் 6.79 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.

dzire emi and down payment

நீங்கள் இந்த காரின் பேஸ் வேரியன்டை வாங்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் முழுமையாக பணம் செலுத்தி வாங்க முடியாமல் லோன் மூலம் தான் இந்த காரை வாங்க விரும்புவார்கள். நீங்கள் எந்த வங்கி அல்லது பைனான்ஸ் நிறுவனம் மூலம் லோன் பெற்றாலும் உங்கள் வாகன மதிப்பிலிருந்து 80 சதவீதத்திற்கு மட்டுமே லோன் வழங்கப்படும். பாக்கியுள்ள 20% நீங்கள் முன் பணமாக செலுத்த வேண்டும்.

முன்பணமாக செலுத்துவது, லோன் வழங்குவது எல்லாம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் அவர் கடன் வாங்கும் திறன் எவ்வளவு இருக்கிறது என்பதை பொறுத்து மாறுபடுகிறது. குறைந்தபட்சமாக ரூபாய் 79 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரூபாய் 6 லட்சத்தை கடனாக பெற்று ஒருவர் இந்த காரை வாங்குகிறார்கள் என்றால் அவருக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டியது இருக்கும் என்பதை பார்ப்போம். இந்த 6.79 லட்சம் என்பது போக இன்சூரன்ஸ் ஆர்டிஓ உள்ளிட்ட மற்ற செலவுகளும் இருக்கிறது என்பதை முதலில் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

dzire emi and down payment

முதலில் 6 லட்சத்திற்கு 8% வட்டி விகிதத்தில் ஒருவர் கடன் வாங்கும் பட்சத்தில் 3 ஆண்டுகளை அவர் கடனை திருப்பி செலுத்துவதாக இருந்தால் ரூபாய் 18,802 ஐயும் நான்காண்டுகளில் கடனை திருப்பி செலுத்துவதாக இருந்தால் ரூபாய் 14648-யும் ஐந்தாண்டுகளில் கடமை திருப்பி செலுத்துவதாக இருந்தால் ரூபாய் 12,166 ஐயும் 6 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்துவதாக இருந்தால் ரூபாய் 10,520ம் ஏழு ஆண்டுகளில் கடனை திரும்பி செலுத்துவதாக இருந்தால் ரூபாய் 9352 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

இதுவே அவர் இதே காரை 8.5% வட்டி வீதத்தில் கடன் மூலம் வாங்குவதாக இருந்தால் மூன்று ஆண்டுகளில் ரூபாய் 18,941 நான்காண்டுகள் ரூபாய் 14,789 ஐயும் ஐந்தாண்டுகளில் ரூபாய் 12,310ம் 6 ஆண்டுகளில் ரூ10,667ஐயும் 7 ஆண்டுகளில் ரூபாய் 9502ஐம் அவர்கள் இஎம்ஐயாக செலுத்த வேண்டும். பெரும்பாலும் இந்த வட்டி விகிதத்திலேயே வாகனங்கள் லோன் மூலம் வழங்கப்படுகின்றன.

dzire emi and down payment

ரூபாய் 6 லட்சம் கடனை அவர் 9 சதவீத வட்டி வீதத்தில் வாங்கினார் என்றால் 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்துவதாக இருந்தால் ரூபாய் 19,080ஐம் நான்காண்டுகளில் திருப்பி செலுத்துவதாக இருந்தால் ரூபாய் 14,931ஐயும், 5 ஆண்டுகளில் ரூபாய் 12,455தையும், ஆறாண்டுகளில் ரூபாய் 10,815ஐயும், 7 ஆண்டுகளில் 9,653 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

இதே கடனை அவர் 9.5 சதவீத வட்டி விகிதத்தில் பெறுவதாக இருந்தால் மூன்று ஆண்டுகளில் திரும்ப செலுத்துவதற்கு ரூபாய் 19220ஐயும் நான்காண்டுகளை திரும்ப செலுத்துவதற்கு ரூபாய் 15,074 ஐந்தாண்டுகள் திரும்ப செலுத்துவதற்கு ரூபாய் 12,601ஐயும் 6 ஆண்டுகளில் திரும்ப செலுத்துவதற்கு ரூபாய் 10,965ஐயும் 7 ஆண்டுகளில் திரும்ப செலுத்துவதற்கு ரூபாய் 9806ஐயும் அவர்கள் இஎம்ஐ யாக செலுத்த வேண்டும்.

இதே கடனை அதிகபட்சமாக 10% வட்டி விகிதத்தில் ஒருவர் திரும்ப செலுத்துகிறார் என்றால் அவர் மூன்று ஆண்டுகளில் 19,360ஐயும் நான்காண்டுகளில் திரும்ப செலுத்த ரூபாய் 15,218-யும் ஐந்து ஆண்டுகளில் திரும்ப சென்ற ரூபாய் 12,748-யும் 6 ஆண்டுகளில் திரும்ப செலுத்த ரூபாய் 11,116ம் 7 ஆண்டுகளில் திரும்ப செலுத்த ரூபாய் 9,961 இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் தனது டிசையர் காரை அப்டேட் செய்து வெளியிடப் போகிறது என்ற தகவல் வந்தவுடனே பலர் இந்த காரை வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக தான் இந்த இஎம்ஐ கணக்கீடுகளை வழங்கி உள்ளோம். இதை வைத்து அவர்கள் வாங்கும் கடனை கொடுத்து எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே கணக்கீடு செய்து வாகனம் வாங்க திட்டமிடலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 12:55 [IST]
English summary
Maruti dzire emi down payment loan monthly calculator
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X