மாருதி சுஸுகி தயாரிச்ச காரா இது! ஆடி காருக்கே டஃப் கொடுக்கும் போலையே.. நம்ப முடியலையா இதோ வீடியோவ பாருங்க!
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகி டிசையர் செடான் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது புதிய தலைமுறை வெர்ஷன் ஆகும். யாரும் நம்ப முடியாத பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய கார் மாடலாக புதிய டிசையர் உள்ளது. மிக முக்கியமாக ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை இந்த கார் மாடல் பெற்றிருப்பது ஆச்சரியத்தின் உச்சமாகும். இதுவரை வேறு எந்த மாருதி சுஸுகி காரும் இந்த அளவு அதிக பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, பல்வேறு பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய காராகவும் இதனை மாருதி தயார் செய்திருக்கின்றது.
அந்தவகையில், 360டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, சிங்கிள்-பேன் எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ-ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்ட 9அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய பல்வேறு அம்சங்களைத் தாங்கிய டிசையர் காரையே சமீபத்தில் ஓட்டி பார்த்தோம். இதன் ரைடு ரிவியூ விபரங்களையே இங்கே வீடியோவாக வழங்கி இருக்கின்றோம். அந்த வீடியோவை கீழே காணலாம்.
புதிய மாருதி சுஸுகி டிசையர் கார் மாடல் ரூ. 6.79 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மைலேஜ் தருவதிலும் இந்த காரை அசத்தலான வாகனமாக மாருதி சுஸுகி தயார் செய்திருக்கின்றது. பெட்ரோல் மற்றும் பெட்ரோல் + சிஎன்ஜி என்கிற தேர்வில் இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும்.

இதில், இரண்டு வெர்ஷனிலும் புதிய இசட்12இ வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 24.79 கிமீ முதல் 25.71 கிமீ வரையில் மைலேஜை வழங்கும். அதேவேளையில், சிஎன்ஜி ஒரு கிலோவிற்கே அதிகபட்சமாக 33.73 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இது அராய் சான்றளித்த மைலேஜ் விபரம் ஆகும்.


Click it and Unblock the Notifications








