நவம்பர் 11ம் தேதியை உங்க காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க! மாருதியின் அதிக மைலேஜ் கார் வருது!
மாருதி நிறுவனம் தனது டிசையர் காரை பல்வேறு விதமான அப்டேட் செய்து புதிய வடிவமைப்புடன் புதிய உட்புற கட்டமைப்புடன் தயார் செய்துள்ளது. இந்த காரின் அறிமுகம் குறித்த தேதி அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவே எதிர்பார்த்த இந்த கார் குறித்த அப்டேட்டிற்கு தற்போது பலர் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில், இந்த அறிமுக தேதி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் தனது டிசையர் காரை மறுவடிவமைப்பு செய்துள்ளது. புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரில் இருந்து பல்வேறு அம்சங்களையும் உட்புற கட்டமைப்பையும் எடுத்து இந்த காரை அப்டேட் செய்துள்ளது. இதனால் இந்த காரின் கேபின் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும் புதிதாக உள்ள காரின் வடிவமைப்பு பல இந்த காரிலும் இடம் பெற உள்ளன.

புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள மாருதி டிசையர் கார் பிரீமியம் அம்சங்களையும் பல மாடலான ஸ்டைலிங்கை கொண்ட வாகனமாக இருக்கிறது. இந்த காரின் உட்புறத்தில் 9 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரில் மேம்படுத்தப்பட்ட செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் பொருத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரிய அளவிலான டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது பெரியதாக இருக்கிறது. இதில் அதிகமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த காரில் மக்கள் அதிகம் விரும்பும் எலெக்ட்ரிக் சன் ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள இன்ஜினும் புதுமையான இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த 2025 மாருதி சுஸூகி டிசையர் காரில் உட்புற கட்டமைப்பு டூயல் டோன் டேஷ்போர்டு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ஃபோர்க் கொண்ட ஸ்டெயரிங் வீல் கண்ட்ரோல்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட், க்ரூஸ் கண்ட்ரோல், உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த காரின் பெர்பார்மென்ஸ் பொருத்தவரை 1.2 லிட்டர் 3-சிலிண்டர் இஸட்12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இந்த காரில் பொருத்தப்பட்டிருந்த 1.2 லிட்டர் -க்கு பதிலாக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82 பிஎஸ் பவரையும் 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

இந்த இன்ஜின் சிஎன்ஜி மூலமும் இயக்கப்படும் ஆப்ஷனை கொண்டுள்ளது. சிஎன்ஜி பொருத்தப்பட்ட வெரியன்ட் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள ஹோண்டா அமேஸ், டாடா டிகோர் மற்றும் ஹுண்டாய் ஆரா ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விற்பனையில் இருக்கும் டிசையர் காரை விட புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள கார் சிறந்த லுக்கிலும் கிளீனான வடிவமைப்பிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த காரின் முன் பக்க கிரில் பகுதி மறுபடியும் செய்யப்பட்டுள்ளது. இதுபோக புதிய பம்பர்கள் புதிய லைட்டிங் செட்டப் மற்றும் டிஆர்எல் ஆகியவை பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அலாய் வீல்கள் இந்த காரில் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் செடான் காராக இருக்கிறது. இதற்கிடையில் ஹோண்டா நிறுவனமும் தனது அமேஸ் காரை அப்டேட் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த செக்மெண்டில் தற்போது புதிதாக சூடு பிடித்துள்ளது என கூறலாம். இந்நிலையில் மாருதி நிறுவனத்தின் டிசைனர் கார் வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் டிசையர் காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த கார் தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற காலாக இருக்கும் என மக்கள் பலர் கருத்துவதால் இந்த காரின் விற்பனையும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், மாருதி டிசையர் கார் அப்டேட் செய்யப்பட்டு வெளியான பிறகு இதன் விற்பனை சூடு பிடிக்கும்.


Click it and Unblock the Notifications









