இந்த காரை ஒரு குட்டி வீடாவே யூஸ் பண்ணலாம் போல! புது டிசையர் கன்ஃபார்ம் ஆகிடுச்சு!

மாருதி நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்த அறிமுகப்படுத்திய நிலையில், அடுத்த கட்டமாக தனது மாருதி டிசையர் காரை அப்டேட் செய்த அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி 2025 மாருதி சுஸூகி டிசையர் கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு விதமான அப்டேட்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் செடான் கார்களின் விற்பனையை கணிசமான அளவு குறைந்து வருகிறது. எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகரித்து வருவதால் மக்கள் எஸ்யூவி கார்களை அதிகம் வாங்க விரும்புகிறார்கள். இருந்தாலும், தொடர்ந்து செடான் காரிலேயே அதிகமாக விற்பனையாகி வரும் காராக இந்த மாதிரி நிறுவனத்தின் டிசையர் கார் தான் இருக்கிறது. இந்நிலையில் மாருதி நிறுவனம் கடந்து டிசையர் காரை அப்டேட் செய்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டு வருகிறது.

Maruti Dzire Launch

அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரப்போகும் மாருதி டிசையர் காரில் காம்பேக்ட் செடான் செக்மெண்டிலேயே முதல்முறையாக சன் ரூஃப் அம்சம் பொருத்தப்படும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது இதன் முன் பக்கம் ஸ்பிளிட் கிரில் வடிவமைப்புக்கு வழங்கப்படும் என தெரிகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்லைட் செட்டப் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரின் ஹெட்லைட் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ள பம்பர் மற்றும் ஏர் இன்டேக் பகுதிகளும் புதிய ஸ்விஃப்ட் காரில் உள்ள வடிவமைப்பு போலவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த காரில் டூயல் ஸ்போக் அலாய் வீல்கள் கருப்பு நிற பினிஷ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த காரின் பக்கவாட்டை பொருத்தவரை தற்போது விற்பனையாகி வரும் அதே மாடல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Maruti Dzire Launch

புதிய டிசைன் காரின் பின்பக்கம் சில அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த காரில் எல்இடி டெயில் லைட் புதுப்பிக்கப்பட்ட பம்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் உட்புறம் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக டேஷ்போர்டு, சென்ட்ரல் கண்சோல் உள்ளிட்ட பகுதிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ள காரில் உள்ள அம்சங்களின் பட்டியலும் பெரிதாக இருக்கிறது.

இந்த காரின் உட்பகுதியில் ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இது போக வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது போக கூடுதலாக ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் மல்டிபிள் ஏர் பேக் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Maruti Dzire Launch

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை புதிய இசட் சீரிஸ் 1.2 லிட்டர் நேச்சுரலி இன்ஸ்பயர்டு 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎச்பி பவரையும், 108 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

இந்த மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும்போது ஏற்கனவே மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக காரெல்லாம் களமிறங்கும் போது செடான் செக்மெண்ட் மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவுக்கு புரட்சி ஏற்பட்டு விற்பனை அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

ஹோண்டா நிறுவனம் தற்போது 3ம் தலைமுறை அமேஸ் காரை தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் தனது டிசையர் காரை அப்டேட் செய்து திட்டமிட்டுள்ளது. மார்க்கெட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. செக்மென்ட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் செக்மென்ட் மிகப்பெரிய அளவில் விற்பனை சரீவை சந்தித்து வந்தாலும், டிசையர் காரின் விற்பனை அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் இந்த காருக்கு தனி மவுசு இருக்கிறது. இந்நிலையில் இந்த காரை நிறுவனம் அப்டேட் செய்வதன் மூலம் இதன் விற்பனையை மேலும் அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் செக்மெண்ட் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 26, 2024, 13:13 [IST]
English summary
Maruti dzire launch new model what to expect
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X