இது மட்டும் வந்துச்சுன்னா குழந்தைங்க இனி டிசையர் கார்ல போகனும்னு அடம்பிடிப்பாங்க! என்ன வரப்போகுது தெரியுமா?
மாருதி நிறுவனம் விரைவில் வெளியிடப் போகும் நான்காம் தலைமுறை டிசையர் காரில் சன்ரூஃப் என்ற அம்சம் நிச்சயமாக இடம்பெறும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த கார் குறித்து மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுகுறித்து வெளியான இந்த அறிவிப்பு மக்களை குஷி படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் தனக்கென ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடித்த கார் மாருதி டிசையர் இன்றளவும் இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. மிக நீண்ட ஆண்டுகளாக சிறப்பான விற்பனையில் இருக்கும் காராக இந்த கார் இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 16 ஆயிரம் டிசையர் கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் என்னதான் செடான் கார்கள் மீதான மோகம் குறைந்தாலும் மாருதி டிசையர் கார் மீதான மோகம் இன்னும் குறையவில்லை. அந்த காரை வாங்கும் மக்கள் தொடர்ந்து அந்த காரை தான் வாங்கி வருகின்றனர். தற்போது மாருதி டிசையர் காரில் 3ம் தலைமுறை கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் தற்போது வரை எந்தவிதமான பிரச்சினையும் இல்லை முழுமையாக திருப்திகரமான வாகனமாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில் மாருதி நிறுவனம் காலத்திற்கு ஏற்றார் போல் இந்த காரில் புதிய அம்சங்களை எல்லாம் கொண்டு வர வேண்டும், அதன் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என முடிவு செய்து இதை நான்காம் தலைமுறை காரை தற்போது தயார் செய்துள்ளது. இந்த கார் எப்பொழுது வேண்டுமானாலும் மாருதி நிறுவனம் அறிமுகத்திற்கு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக அப்டேட் செய்யப்படும் காரில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. புதிய காரில் வரப்போகும் அப்டேட்கள் பற்றி மக்கள் பேசி வரும் நிலையில் நமக்கு ஒரு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி புதிதாக வரப்போகும் 4ம் தலைமுறை டிசையர் காரில் நிச்சயம் சிங்கிள் பேன் சென்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கார்களை 95 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு சன்ரூஃப் என்ற வசதி தேவையே இல்லை. இந்தியாவில் பல வாடிக்கையாளர்கள் இந்த வசதியை விரும்பி கேட்கின்றனர். அதன் காரணமாகவே மாருதி நிறுவனம் இந்த வசதியை தனது டிசையர் காரில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. காரில் வரும் பல்வேறு மாற்றங்களில் இந்த மாற்றமும் மிக முக்கியமான மாற்றமாக இருக்கிறது.

4ம் தலைமுறை டிசையர் கார் என்பது புதிதாக மாற்றப்பட உள்ள மாருதி ஸ்விப்ட் காரில் செய்யப்படும் மாற்றங்கள் போலவே இதிலும் மாற்றங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் சன்ரூஃப் அம்சம் இருந்தாலும் அது டாப் வேரியன்ட் மாடலில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற காரிலிருந்து இந்த காரில் சற்று வித்தியாசமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான கார்களில் முன்பக்க சீட்டில் இருப்பவர்கள் மட்டுமே சன் ரூஃப் பயன்படுத்த முடியும்படி முன்பக்கம் சென்று வழங்கி இருப்பார்கள். ஆனால் இந்த காரில் பின்பக்க சீட்டில் இருப்பவர்களும் சன்ரூஃபை பயன்படுத்த முடியும் என்பதாக நடுவில் சன்ரூஃப் பொருத்த திட்டமிட்டுள்ளதாக நமக்கு தெரியவந்துள்ளது.
இந்த டிசையர் காரில் சன்ரூஃப் அமையும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் மற்ற கார்களிலும் சன்ரூஃப் அமைய வாய்ப்புள்ளது. முக்கியமாக பலேனோ, ஃபிராங்க்ஸ் மற்றும் ஜிம்னி ஆகிய கார்களிலும் சன்ரூஃப் வாய்ப்புகள் உள்ளது. சியாஸ் காரில் சன்ரூஃப் அமைய வாய்ப்பில்லை. அந்த கார் தனது வாழ்நாளை இழந்து வருகிறது. எந்தவித அப்டேட்டும் இல்லாமல் நீண்ட நாட்கள் இந்த கார் விற்பனையில் இருப்பதால் விரைவில் இந்த கார் விற்பனையிலிருந்து நிறுத்தப்படும் என்று தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் சன்ரூஃப்பை தனது காரில் அறிமுகப்படுத்துவதன் மூலம் சென்று கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் முயற்சியை செய்துள்ளது. இந்தியாவில் சன்ரூஃப் என்பது பெரும்பாலும் தேவையில்லாத ஒரு அம்சமாகவே இருக்கிறது. இருந்தாலும் இந்திய மக்களுக்கு இது விருப்பமான அம்சமாக இருப்பதால் இந்த வசதி கொண்ட கார்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு இருக்கிறது. இதை புரிந்து கொண்டு மாருதி நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications









