மாருதி டிசையரின் இந்த வேரியன்ட் காரைதான் மக்கள் விரும்பி வாங்குறாங்க ஏன் தெரியுமா?
மாருதி நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்த டிசையர் காரில் குறிப்பிட்ட ஒரு வேரியன்ட் மட்டும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதாக தற்போது நமக்கு தகவல் கிடைத்துள்ளது. அது எந்த வேரியன்ட் எதற்காக மக்கள் அந்த குறிப்பிட்ட வேரியன்டை வாங்கி வருகிறார்கள்? இதன் மூலம் மக்களுக்கு என்னென்ன விஷயங்கள் எல்லாம் கிடைக்கிறது? என்ற விரிவான விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
மாருதி நிறுவனம் தனது நான்காம் தலைமுறை புதிய டிசையர் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த காரின் விற்பனை பரபரப்பாக நடந்து வருகிறது. பலர் இந்த காரை புக் செய்து வாங்கி வருகிறார்கள். இதற்காக பலர் மாருதி ஷோரூம்க்கு மக்கள் படை எடுத்து வருகிறார்கள். ரூபாய் 6.79 லட்சம் முதல் ரூபாய் 10.14 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.

இந்த புதிய டிசையர் காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் இசட் 12 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உள்ள மாடலில் இருந்த இன்ஜின் மாற்றப்பட்டு இந்த இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் ஏழு விதமான கலர் ஆப்ஷன்களிலும், எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ, மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.
இதில் மாருதி நிறுவனத்தில் அதிகமாக விஎக்ஸ்ஐ வேரியன்டிற்கு தான் புக்கிங் குவிந்து நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த வேரியண்டில் தான் பல முக்கியமான அம்சங்கள் இருப்பதாகவும் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் இருப்பதாகவும் கருதுகிறார்கள். அதே நேரத்தில் விலை குறைவாக இருப்பதால் மக்கள் பலர் இந்த வேரியண்டை தான் புக் செய்கிறார்கள் என நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

புதிதாக வந்துள்ள மாருதி டிசையர் பல்வேறு அம்சங்கள் எதுவும் இல்லை. அதேநேரம் விஎக்ஸ்ஐ வேரியண்டில் மக்கள் விரும்பும் ஆப்ஷன்கள் பல இருக்கின்றன. அதே நேரம் இது இசட்எக்ஸ்ஐ அல்லது இசட்எக்ஸ்ஐ + போல விலை அதிகமாகவும் இல்லை என்பதால் மக்கள் விஎக்ஸ்ஐ வேரியன்ட் தான் கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான வாகனமாக கருதுகிறார்கள்.
அப்படி அந்த விஎக்ஸ்ஐ வேரியண்டில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது என்ற விபரங்களை பார்ப்போம். இந்த காரின் முன் பக்கத்தில் குரோம் எலெமெண்ட் உடன் கூடிய கிரில் பகுதி வழங்கப்பட்டுள்ளது. ஓஆர்விஎம் பகுதியும் பாடி கலரிலேயே வழங்கப்பட்டுள்ளது. அதில் டர்ன் இண்டிகேட்டரும் வழங்கப்பட்டுள்ள டோர் ஹேண்டில் பகுதியில் பாடி கலரிலேயே வழங்கப்பட்டுள்ளன. வீல்கள் எல்லாம் ஸ்டீல் வீல்களாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரில் 7 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் ஓடிஏ அப்டேட்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டேரிங் இடையே பல்வேறு கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்திற்காக தனி ஏசி வென்ட்களும் வழங்கப்பட்டுள்ளது. டிரைவர் சீட் உயரம் அட்ஜஸ்ட் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசை சீட்டில் உள்ளவர்களுக்காக டைப் சி யூஎஸ்பி சார்ஜிங் போர்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
மாருதி டிசையர் காரை பொறுத்தவரை பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு ஏர்பேக்குகள் முன்பக்கமாகவும், பக்கவாட்டு பகுதி மற்றும் கர்ட்டன் ஏற்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரில் இன்ஜின் இம்மொபிலைசர், பின்பக்க டீஃபாகர், அதிவேக வார்னிங் அலர்ட், 3 பாயிண்ட் பெல்ட் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் இபி உடன் கூடிய ஏபிஎஸ் பின்பக்க பாக்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கார் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு செக்மென்ட்களில் உள்ள வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு விதமான வேலைகளை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினாலும், குறிப்பிட்ட சில வேலைகள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகவும், அப்படியாக டிசையர் காரின் விஎக்ஸ்ஐ வேரியன்ட் தான் சிறப்பாக விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









