டாடா எல்லாம் ஓரம் போ! மாருதி இ-விட்டாரா இவி கார் வந்தாச்சு விலை இவ்வளவு தானா?
மாருதி நிறுவனம் இத்தாலியில் சுஸூகி பிராண்டின் மூலம் தனது புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்ட இவிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் கான்செப்ட் காரின் அடிப்படையில் இ-விட்டாரா என்ற காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் விரைவில் இந்தியாவில் தயாரிப்பை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் காருக்கான மோகம் அதிகரித்துள்ள நிலையில் மாருதி நிறுவனம் தனது பங்கிற்கு தனது முதல் எலெக்ட்ரிக் காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் புதிய எலெக்ட்ரிக் தயாரிப்பு அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன உலகில் தனது காலடித்தடத்தை பதிக்க தயாராகி வருகிறது.

ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரன் டிவிஎஸ் என்ற காரின் கான்செப்ட் வெர்ஷனை காட்சிப்படுத்தியது. இந்த கார் விரைவில் புரொடக்ஷன் வெர்ஷனாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இத்தாலியில் நடந்து வரும் கண்காட்சியில் சுஸூகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காராக இந்த காரை தழுவிய இ-விட்டாரா காரை காட்சிப்படுத்தியுள்ளது.
மேலும் சுஸூகி நிறுவனம் இந்த காரின் தயாரிப்பை 2025ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தயாரிக்க துவங்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இந்த கார் இந்தியாவில் மாருதி சுஸூகி பிராண்டில் வெளியாகும் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி இ-விட்டாரா காரை பொருத்தவரை நிறுவனத்தின் புதிய ஹார்ட்ரெக்ட்-இ பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் காராகும். இந்த கார் குறைந்த எடை கொண்ட வாகனத்தை தயாரிக்கும் சிறப்பான பிளாட்ஃபார்மாக இருக்கிறது. இதனால் இந்த பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் கார்கள் எல்லாம் அதிக ரேஞ்ச் தரும் கார்களாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்த காருக்கு உட்பகுதியில் அதிக பேட்டரி வசதிக்காக ப்ளோர் பகுதி பெரிதாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் இரண்டு ஸ்கிரீன்கள், அடாஸ் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மற்ற பெட்ரோல் கார்கள் போலவே சிறப்பான தொழிற்நுட்ப அம்சங்கள் கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த காரில் எலெக்ட்ரிக் 4 வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆல்கிரிப் இ என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இதற்காக இரண்டு தனித்தனியான எலெக்ட்ரிக் ஆக்ஸில்களில் முன்பக்கமும் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் கண்ட்ரோல் மற்றும் ஹேண்டிலின் சிறப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் பிரேக் மற்றும் தேவையான நேரங்களில் டார்க்கை அதிகப்படுத்தி தரும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் உள்ள பேட்டரி ஆப்ஷன்களை பொறுத்தவரை 49 கிலோ வாட் ஹவர் மற்றும் 61 கிலோ வாட் ஹவர் என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன் உடன் சர்வதேச மார்க்கெட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எந்த பேட்டரி ஆப்ஷன் வரப்போகிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதன் ரேஞ்ஜை பொறுத்தவரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் இந்த கார் ரேஞ்சை கொண்டுள்ளது.
இந்த காரில் உள்ள 49 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷனில் டூவீலர் சிஸ்டம் மட்டுமே இருக்கிறது. இது 142 பிஎச்பி பவரையும் 189 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 61 கிலோ டவர் பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை 4 வீல் டிரைவ் ஆப்ஷன் இருக்கிறது. இது 172 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களம் இறக்க தயாராகி வரும் நிலையில் இந்த காருக்கு ஏற்கனவே பெயர் பெற்ற விட்டாரா காரின் பெயரை வைத்துள்ளது. பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் ஆனால் நிச்சயம் போட்டி நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









