மாருதி ஈகோ காரை மின்சார காரா மாற்ற முடியுமா? புது இ-காரை வாங்கி காசை வீணாக்காதீங்க.. லட்ச கணக்குல சேமிக்கலாம்!

இந்தியாவில் இப்போது புதிதாக ஓர் எலெக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ. 7 லட்சமாவது செலவு செய்ய வேண்டி உள்ளது. இத்தகைய பெரும் தொகையை செலவிட்டால் மட்டுமே எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) கார் மாடலை வாங்க முடியும். இதுவே இந்தியாவின் விலை குறைவான மின்சார கார் மாடல் ஆகும். 'அப்படி என்றால் இந்தியாவில் இந்த அளவு பெரிய தொகையை செலவிடாமல் எலெக்ட்ரிக் காரை வாங்கவே முடியாதா' என நீங்கள் கேட்கலாம், இந்த கேள்விக்கான எங்களின் பதில் 'முடியும்' என்பதே ஆகும்.

இந்த பதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இதை நம்பிதான் ஆக வேண்டும். வாகன மாடிஃபிகேஷன் வாயிலாகவே இது சாத்தியமாகி இருக்கின்றது. அதாவது, பழைய பெட்ரோல், டீசல் கார்களை குறைவான செலவில் மின்சார வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு சான்றாக மாருதி ஈகோ (Maruti Eeco) தற்போது எலெக்ட்ரிக் காராக மாற்றப்பட்டு இருக்கின்றது.

Maruti eeco ev conversion kit

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் நார்த்வே மோட்டார்ஸ் (Northway Motors). இந்த நிறுவனமே ஈகோவிற்கு மின்சார கார் அவதாரம் கொடுத்திருக்கின்றது. ஐசிஇ வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றக் கூடிய ஓர் நிறுவனமே நார்த்வே மோட்டார்ஸ் ஆகும். இந்த நிறுவனம் தற்போது மாருதி ஈகோ காரை மின்சார வாகனமாக மாற்றுவதற்கான எலெக்ட்ரிக் கிட்-டையே உருவாக்கி இருக்கின்றது.

அதாவது, ஈகோ கார் மாடலை மின்சார காராக மாற்றுவதற்கான கருவிகளை நார்த்வே மோட்டார்ஸ் தயார் செய்திருக்கின்றது. மின்சார வாகனமாக மாறியிருக்கும் ஈகோ ஓர் முழு சார்ஜில் 220 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அதிகபட்ச ரேஞ்ச் திறனுக்ககா ஈகோ காரில் 22 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், அதிகபட்சமாக 24 பிஎஸ் மற்றும் 100 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது ஓர் கடினமாக உழைக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் என கூறப்படுகின்றது. ஆகையால், வழக்கமான ஈகோ காரை போலவே இதையும் நல்லா வெளுத்து வாங்க முடியும் என தெரிகின்றது.

இவ்வாறு முழுமையாக எலெக்ட்ரிக் காராக அவதாரம் எடுப்பதற்காக ஈகோ தன்னுடைய முக்கிய பாகங்கள் பலவற்றை இழந்திருக்கின்றது. அந்தவகையில், எரிபொருளில் இயங்கக் கூடிய எஞ்சின், கியர்பாக்ஸ், எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் பல வெளியேற்றப்பட்டு இருக்கின்றன. மின்சார காராக ஈகோ மாறியிருப்பதால் இந்த பாகங்கள் அனைத்தும் தேவையற்றதாக மாறிவிட்டன.

இதன் அடிப்படையிலேயே ஐசிஇ எஞ்சின் மற்றும் அதற்கு தேவையான பாகங்கள் அனைத்தும் ஈகோவில் இருந்து அகற்றப்பட்டு உள்ளன. இதற்கு பின்னரே இந்த காரை மின்சார காராக மாற்றும் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி நார்த்வே மோட்டார்ஸ் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான செலவிலேயே ஈகோ காரை மின்சார காராக மாற்றி இருக்கின்றது.

அதேவேளையில், இவர்கள் இப்போது புதிய ஈகோ காரையே மின்சார காராக மாற்றி தரும் பணியில் களமிறங்கி இருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. ரூ. 9.99 லட்சமே இதற்கு வசூலிக்கப்படுகின்றது. இன்சூரன்ஸ், வரி மற்றும் ஆர்டிஓ கட்டணம் என அனைத்தும் இதில் அடங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, பழைய ஈகோ காரையும் இவர்கள் மின்சார காராக மாற்றும் பணியில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பணியைத் தொடங்கினால் பல லட்ச ரூபாயை இதன் வாயிலாக மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மின்சார வாகனமாக மாற்றப்பட்ட ஈகோ-வை சாலையில் வைத்து பயன்படுத்தும்போது எந்த சட்ட சிக்கலும் வராது என தெரிகின்றது. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்ய 2 மணி நேரங்களே போதும் என நார்த்வே மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், நார்த்வே மோட்டார்ஸ் விரைவிலேயே மஹாராஷ்டிரா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2024, 19:39 [IST]
English summary
Maruti eeco electric retrofit by northway motors provides a range of 220 km
மேலும்... #car modification #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+