ஒரே கார்ல மொத்த குடும்பமும் போகலாம்! மாருதி இவி எம்பிவி காரின் ரேஞ்ச் என்ன தெரியுமா?

மாருதி நிறுவனம் விரைவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரான இவிஎக்ஸ் என்ற காரின் அடிப்படையில் 7 சீட்டர் கொண்ட எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன செக்மெண்ட்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனமாக இருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்யூவி செக்மெண்டில் மாருதி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று பேசப்பட்ட நிலை தற்போது மாறி எஸ்யூவி செக்மெண்டிலும் மாருதி நிறுவனத்தின் வாகனங்கள் தான் அதிகமாக விற்பனையாகி வருகின்றன.

Maruti Electric MPV 7 Seater

இந்நிலையில் எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டாடா நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. மாருதி நிறுவனம் இதுவரை ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு கொண்டு வர வில்லை.

இருந்தாலும் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்டிலும் தனது காலடித்தடத்தை பதிப்பதற்கான மாருதி நிறுவனம் இவிஎக்ஸ் என்ற காரை தயாரித்து விரைவில் அதை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இவிஎஸ் காரை அடிப்படையாகக் கொண்ட எம்பிவி கார் ஒன்றையும் விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.

Maruti Electric MPV 7 Seater

மாருதி நிறுவனம் தற்போது இந்தியாவில் 17 கார்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த 17 என்ற எண்ணிக்கையை 28 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதில் பெட்ரோல் கார்கள், சிஎன்ஜி கார்கள், மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் கார்கள், பிளக்ஸ் ஃப்யூயல் கார்கள் ஹைபிரிட் கார்களும் உள்ளடங்கும். இந்நிறுவனம் எலயக்ட்ரிக் காரில் எம்பிவி காரை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இது குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகின.

தற்போது பெட்ரோல் கார்களின் எம்பிவி செக்மெண்டில் மாருதி நிறுவனம் தான் எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 ஆகிய கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி அந்த செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் எலெக்ட்ரிக் கார் பிரிவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக மாருதி எலெக்ட்ரிக் எம்பிவி காரை தயாரித்து வருகிறது. இந்த காருக்கு தற்போது ஒய்எம்சி என கோடு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Maruti Electric MPV 7 Seater

இந்த ஒய்எம்சி காரில் மாருதி நிறுவனம் இவிஎக்ஸ் என்ற முதல் எஸ்யூவி இவி காரில் உள்ள அதே பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவை பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 2026-ம் ஆண்டு இரண்டாம் பாதியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த கார் தான் மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எம்பிவி ரக காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனம் தற்போது தயாரித்து வரும் இவிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் காரை டொயோட்டா நிறுவனத்துடன் சேர்ந்து இதை தயாரிக்கிறது. இந்த கார் தயாரிக்கப்படும் பிளாட்பார்மில் பல்வேறு விதமான பாடி ஸ்டைல் கொண்ட கார்களை தயாரிக்க முடியும். தற்போது மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட தயாராகிவிட்ட நிலையில், இந்த ஆண்டு பண்டிகை காலத்தை குறி வைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

மாருதி நிறுவனம் மூன்று வரிசை சீட்டர் கொண்ட கார்களில் இன்னும் நிறைய ஆப்ஷன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே எர்டிகா, எக்ஸ்எல்6, இன்விக்டோ ஆகிய கார்கள் விற்பனையாகி வரும் நிலையில், தற்போது கூடுதலாக கிராண்ட் விட்டாரா காரின் 7 சீட்டர் வெர்ஷன் மற்றும் சுஸூகி ஸ்பேஷியா காரை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஹைபிரிட்டி எம்பிவி காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இவிஎக்ஸ் என்ற எஸ்யூவி காரில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி 40 கிலோ வாட் ஹவர் மற்றும் 60 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே ஆப்ஷன் அதன் எம்பிவி காரிலும் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கொண்டு வந்தால் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் காரின் பேட்டரி உருவாக்கப்பட்ட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த மார்க்கெட்டை விட்டு விடக்கூடாது என்பதற்காக மாருதி நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முன்வந்துள்ளது. இருந்தாலும் மாருதி நிறுவனம் ஹைபிரிட் கார்களை தான் அதிகம் விரும்புகின்றன. இந்த காரின் வருகை எப்படியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Note: Images are for representative purpose

More from DriveSpark

Article Published On: Monday, April 8, 2024, 10:55 [IST]
English summary
Maruti electric mpv 7 seater based on evx suv know range details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X