26 கிமீ மைலேஜ், ஒரே நேரத்துல 7 பேர் போகலாம்! இந்த காரை நீங்க கையில காசு வச்சிருந்தாலும் உடனே வாங்க முடியாது!

மாருதி நிறுவனத்தின் 7 சீட்டர் காரான எர்டிகா காரை வாங்க சமீபத்தில் ஏகப்பட்ட மக்கள் முன்வந்துள்ளார்கள். குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார் என்பதால் இந்த காரை வாங்க தற்போது டிமாண்ட் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த காருக்கு புக்கிங் குவிந்துள்ளது. இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த காருக்கான புதிய காத்திருப்புக் கால அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த காரை வாங்க 20 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்தின் கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவு டிமாண்ட் இருக்கும். இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மாருதி நிறுவனத்தின் அனைத்து கார்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரசித்தி பெற்ற அதிக விற்பனையாகும் கார்களாக இருக்கின்றன. இந்நிலையில் மாருதி நிறுவனத்தின் ertiga கார் 7 சீட்டர் கொண்ட காராகும். இது ஒரு எம்பிவி செக்மென்ட் கார்.

maruti ertiga waiting period

எம்பிவி ரக கார்களிலேயே அதிகமாக விற்பனையாகும் காராக இந்த கார் தான் இருக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரின் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் கூட மொத்தம் 15,902 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து இந்த கார் விற்பனையில் மிகப்பெரிய மைல்கல்லை மாருதி நிறுவனம் எட்டியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருவதால் இந்த காருக்கான புக்கிங் குவிந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பை விட அதிக அளவில் புக்கிங் குவிந்து வருவதால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த காரை புக்கிங் செய்ய வரும் வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்க 20 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

maruti ertiga waiting period

மாருதி எர்டிகா காரின் பெட்ரோல், மேனுவல் கியர் காரைக்கு 6 முதல் 8 வாரங்கள் வரையிலும், சிஎன்ஜி காருக்கு 16-20 வாரங்கள் வரையிலும் காத்திருப்பு காலம் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக சிஎன்ஜி கார்களின் விற்பனை அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு முக்கியமான காரணம். பெட்ரோல் விலை அதிகரிப்பால் பலர் சிஎன்ஜி கார்களை வாங்கி வருகிறார்கள். மாருதி எர்டிகா காரிலும் சிஎன்ஜி காருக்கு அதிகமான புக்கிங் குறிக்கிறது.

மாருதி எர்டிகா காரை பொறுத்தவரை மொத்தம் நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனையாகி வருகிறது. எல்எக்ஸ்ஐ, விஎஸ்ஐ,இசட்எக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ+ ஆகிய வேரியன்ட் விற்பனையாகி வருகிறது. இதில் சிஎன்ஜி பொருத்தப்பட்ட வேரியன்ட்கள் என்றால் விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ஆகிய வேரியன்ட்களில் மட்டுமே சிஎன்ஜி பொருத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

maruti ertiga waiting period

இதன் விலையை பொறுத்த வரை ரூபாய் 8.69 லட்சம் முதல் ரூபாய் 13 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் மைலேஜ் தான் இந்த காரை மக்கள் அதிகம் விரும்புவதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. மைலேஜ் பற்றி தெரிந்து கொள்ள நாம் இந்த காரின் இன்ஜின் மற்றும் தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மாருதி நிறுவனம் இதை எர்டிகா காரில் 1.5 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 103 பிஎஸ் பவரையும் 136.8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ்உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதுபோக இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இந்த கார் சிஎன்ஜி வேரியண்டிலும் விற்பனைக்கு வருகிறது .சிஎன்ஜியில் இதே இன்ஜின் 88பிஎஸ் பவரையும், 121.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாம் முன்னரே சொன்னதுபடி இந்த காரின் மைலேஜ் தான் இந்த காரின் விற்பனைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. பெட்ரோல் மேனுவல் கார் லிட்டருக்கு 20.51 கிலோமீட்டர் மைலேஜை வழங்கி வருகிறது. அதேநேரம் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரை பொறுத்தவரை 20.3 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கி வருகிறது. இருப்பதிலேயே அதிகமாக சிஎன்ஜி வேரியண்ட் தான் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.11 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் எர்டிகா காருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கார் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார் என்பதால் பலர் இந்த காரை வாங்கி வருகிறார்கள். சமீப காலமாக குடும்பத்துடன் பயணிக்கின்ற கார்களின் விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2024, 7:00 [IST]
English summary
Maruti ertiga waiting period july 2024 check details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X