லட்சம் லட்சமா கொட்டி பிஎம்டபிள்யூ கார வாங்குறதுக்கு பதிலா எர்டிகாவ வாங்கி இப்படி மாத்திடலாம்! அழகுல மின்னுது!

பிஎம்டபிள்யூ (BMW) கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) தயாரிப்பு ஒன்று மாற்றப்பட்டு இருக்கின்றது. சொகுசு வசதிகளுக்கும், நவீன கால தொழில்நுட்ப அம்சங்களுக்கும் பெயர்போனதாக பிஎம்டபிள்யூவின் கார் மாடல்கள் உள்ளன. இதற்கே டஃப் கொடுக்கும் வகையிலேயே நாம் தற்போது பார்க்க இருக்கும் மாருதி கார் மாற்றப்பட்டு இருக்கின்றது. மாருதி சுஸுகியின் பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றான எர்டிகா (Ertiga)-வே கார் மாடிஃபிகேஷன் (Car Modification) செயலின் வாயிலாக சொகுசு கார்களுக்கு இணையானதாக மாற்றப்பட்டு இருக்கின்றது.

எர்டிகாவின் இருக்கைகள் தொடங்கி டேஷ்போர்டு வரை அனைத்தும் புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த மாற்றத்தால் தற்போது சாலையில் நடமாட்டத்தில் இருக்கும் மற்ற எர்டிகா கார்களிடம் இருந்து இந்த எர்டிகா சற்றே தனித்துவமான கார் மாடலாக மாறி இருக்கின்றது. இந்தியர்களின் பிரியமான எம்பிவி (MPV) கார் மாடல்களில் எர்டிகாவும் ஒன்றாகும்.

Maruti ertiga converted

இந்த கார் மாடலை அதன் உரிமையாளர் ஒருவர் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்ததாக மாற்றி இருப்பது மற்ற எர்டிகா கார் உரிமையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த காரை இவ்ளோ ரம்மியமானதாக மாற்ற முடியுமா என்பதே பலரின் கேள்வியாக மாறி இருக்கின்றது.

எர்டிகாவின் உட்பக்கம் மட்டுமே மாற்றப்பட்டு இருக்கின்றது. பிஎம்டபிள்யூ சொகுசு கார்களை முன்னிலைப்படுத்தி இந்த காரில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மிக முக்கியமாக காரின் கேபினுக்கு தனித்துவமான நிறம் கொடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பீஜ் மற்றும் கருப்பு நிறத்தில் இருந்த அந்த காரின் உட்பக்கத்திற்கு பழுப்பு மற்றும் ஷாம்பெயின் கோல்டு நிறம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிறம் எர்டிகாவின் உட்பக்கத்தை வேற லெவல் அழகிற்கு கொண்டு சென்றிருக்கின்றது. இதேபோல் முன்னதாக கடினமான பிளாஸ்டிக் பேனல்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த டச் பாயிண்டுகள், தற்போது பிரீமியம் லெதர்க்கு மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது. டேஷ்போர்டு, ஹார்ன் பேட், டோர் பேட்கள், கியர் லீவர் மற்றும் முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் என அனைத்திலும் லெதர் போர்த்தப்பட்டு உள்ளது.

இதுதவிர, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைச் சுற்றியும், ஏ, பி மற்றும் சி தூண்களிலும் லெதர் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், எர்டிகாவின் இருக்கைகளும் மாற்றப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, 7டி மேட்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து, கார்பன் ஃபைபரால் இந்த காரின் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. வழக்கமான பிளாஸ்டிக் பாகங்களுக்கு பதிலாக ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் கூறுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. கதவு பேனல்கள், கண்ட்ரோல் பேனல்கள் மற்றும் டாஷ்போர்டின் மர உறுப்பு ஆகியவை இருந்த இடங்களிலேயே அவை இடம் பெற்றிருக்கின்றன.

வழக்கமான காராக இல்லாமல் தங்களுடைய எர்டிகா தனித்துவமான இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இவ்வாறு புதுப்பித்திருக்கின்றனர். மேலும், கொஞ்சம் வித்தியாசமாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை இருக்கும் வகையில் அவர்கள் மாற்றி இருக்கின்றனர். விக் ஆட்டோ அக்ஸசெரீஸ் (Vig Auto Accessories) எனும் கார் மாடஃபிகேஷன் ஒர்க்ஷாப் வாயிலாகவே அவர்கள் மாற்றி இருக்கின்றனர்.

காரின் லுக்கை மாற்றியதோடு கூடுதலாக சில நவீன கால அம்சங்களையும் இந்த காரில் அவர்கள் சேர்த்திருக்கின்றனர். அந்தவகையில், 4 ஸ்பீக்கர்கள் கொண்ட சோனி இஎஸ் சவுண்டு சிஸ்டம், வயர்லெஸ் இணைப்புடன் கூடிய ஆஃப்டர்மார்க்கெட் ஆண்ட்ராய்டு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன், கூடுதல் வசதிக்காக 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா போன்ற கருவிகளும் எர்டிகாவில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாற்றத்திற்காக எவ்வளவு ரூபாய் வரை செலவு செய்யப்பட்டது என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த மாற்றத்தால் எர்டிகா-வின் உட்பக்கம் மிகவும் ரம்மியமானதாக மாறியிருக்கின்றது. மேலும், அதன் மதிப்பும் பலமடங்கு கூடியிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் உண்மை தோற்றத்த மழுங்கடிக்கச் செய்யும் வகையில் செய்யப்படும் கார் மாடிஃபிகேஷனுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இந்த மாடிஃபிகேஷன் செயலானது காரின் உட்பக்கத்தை மெருகேற்றும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான மாற்றங்களால் அந்த குறிப்பிட்ட காரின் தரம் மேம்படுவதோடு, மதிப்பையும் அதிகரிக்கச் செய்ய முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 28, 2024, 11:22 [IST]
English summary
Maruti ertigas transformation into a luxury experience inspired by bmw
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+