230 கி.மீ ரேஞ்சில் வருது கம்மி விலை மாருதி இவி கார்! பார்க்க வேகன் ஆர் மாதிரி இருக்குதே!

மாருதி நிறுவனம் டாடா நிறுவனத்தின் டியாகோ இவி காருக்கு போட்டியாக ஹேட்ச் பேக் செக்மெண்டில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை களம் இறக்க தயாராகி வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி இ டபிள்யூ எக்ஸ் கான்செப்ட் காரில் இந்தியாவில் மாருதி பிராண்டில் புதிய கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மக்கள் மத்தியில் அதிகமாகி கொண்டே இருக்கிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது டாடா நிறுவனம் தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன.

maruti ewx electric hatchback

இந்தியாவில் மற்ற நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தி வரும் நிலையில் மாருதி நிறுவனம் இந்த ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு துவக்கத்திற்குள் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுஸூகி நிறுவனம் டோக்கியோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடபிள்யூ எக்ஸ் என்ற கான்செப்ட் காரை காட்சிப்படுத்தி இருந்தது.

இந்த காரை மாருதி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் மார்க்கெட்டில் உள்ள டியாகோ இவி சிட்ரோன் ஆகிய கார்களுக்கு போட்டியாகவும் எம்ஜி கோமெட் இவி காருக்கு போட்டியாகவும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

maruti ewx electric hatchback

மாருதி நிறுவனம் இவிஎக்ஸ் காரை முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தாலும் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறது. மாருதி நிறுவனத்திற்கு குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான டிரெண்டாக இருக்கும் நிலையில் எலெக்ட்ரிக் செக்மெண்டிலும் குறைந்த விலை காரை அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கார் விற்பனைக்கு வருமா வராதா என்ற தகவல் இதுவரை எதுவும் தெரியவில்லை. அந்த கார் வந்தாலும் வராவிட்டாலும் சுஸூகி நிறுவனம் ஜப்பான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்திய இவி எக்ஸ் கார் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முற்றிலுமாக இந்தியாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர நிர்வணம் திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

maruti ewx electric hatchback

சுஸூகி நிறுவனம் இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர புதிய பிளாட்ஃபார்ம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அந்த பிளாட்பார்ம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உடன் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் அது தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி இடபிள்யூ எக்ஸ் என்ற கார் இந்தியாவில் 2026-27 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இவிஎக்ஸ் என்ற கார் தற்போது ஒய்ஒய்8 என்ற கோடு பெயரில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இது 5சீட்டர் கொண்ட காராக உருவாக்கப்படுகிறது. இந்த கார் விற்பனைக்கு வரும்போது ரூ15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, டாடா கர்வ், மஹிந்திரா எக்ஸ்யூவிஇ.8 ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இந்த கார் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

maruti ewx electric hatchback

இந்நிலையில் இடபிள்யூ எக்ஸ் கார் இந்தியாவில் களமிறங்க வாய்ப்புள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. 2030 ஆம் ஆண்டிற்கும் மாருதி நிறுவனம் 6 எலெக்ட்ரிக் காரர்களை இந்தியாவில் களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அதில் இவிஎக்ஸ், இடபுள்யூ எக்ஸ் கார் போக இன்னும் நான்கு கார்கள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸூகி நிறுவனம் இந்த இடபுள்யூ எக்ஸ் காரை முதன்முதலாக ஜப்பான் மோட்டார் ஷோவில் தான் காட்சிப்படுத்தியது. அப்போது இந்த கார் மீது மக்களுக்கு ஒரு கண் இருந்தது. இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என பேசினார்கள். தற்போது இந்த கார் இந்தியாவிற்கு வர உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த கார் 230 கிலோமீட்டர் வரை ஜெயித்து தரும் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 11, 2024, 19:53 [IST]
English summary
Maruti ewx electric hatchback development to rival tiago ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X