மேட் இன் இந்தியா காருக்கு வெளிநாடுகளில் செம டிமாண்ட்! 30 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்த மாருதி!
மாருதி நிறுவனம் இந்தியாவில் தயாரித்து மொத்தம் 30 லட்சம் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனை மைல் கல்லை படைத்துள்ளது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த புதிய மைல்கல் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் இதுதான். இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது ஏற்றுமதியிலும் புதிய சாதனை மேல் கல்லை படைத்துள்ளது. இந்தியாவிலிருந்து அதிக வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகவும் இந்த நிறுவனம் தான் மாறி உள்ளது.

இந்நிறுவனம் இதுவரை 30 லட்சம் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனை மைல்கல்லை எட்டியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது இந்த மைல்கல் மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
1986 ஆம் ஆண்டு தனது முதல் ஏற்றுமதியை துவங்கியது முதல் முறையாக 500 கார்களை ஹங்கேரி நாட்டிற்கு நிறுவனம் ஏற்றுமதி செய்தது. தொடர்ந்து அந்நிறுவனம் இந்திய கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்தோம். தொடர்ந்து பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி ஏற்றுமதியை அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 2012-13ம் நிதியாண்டில் இந்நிறுவனம் முதல் 10 லட்சம் கார்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து முதல் மைல் கல்லை பதித்தது.
இரண்டாவது 10 லட்சம் கார்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியாக அடுத்து எட்டு ஆண்டுகள் வரை எடுத்துக் கொண்டது. அதன்படி 2020ம் தேதி ஆண்டில் தான் இரண்டாவது 10 லட்சம் கார்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகின. ஆனால் கடைசி 10 லட்சம் கார்கள் மிக விரைவாகவே ஏற்றுமதியாகிவிட்டது. மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்து தற்போது மொத்தம் 30 லட்சம் கார்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக இந்நிறுவனம் 1053 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிலையில் முப்பது லட்சம் மைட் கல்லை நிறுவனம் கடந்துள்ளது தற்போது செலிரியோ, ஃபிராங்க்ஸ், பலேனோ, சியாஸ், டிசையர் மற்றும் எக்ஸ்பிரஸ்ஸோ ஆகிய கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளிநாடுகளிலும் இந்திய தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பது நமக்கு தெரியவந்துள்ளது.
மாருதி நிறுவனம் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. முக்கியமாக தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, சிலி உள்ளிட்ட நாடுகளுக்கும் சுஸூகி பேட்ஜில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் வாகனங்களை விற்பனை செய்து வரும் நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களையும் இந்நிறுவனம் வெளிநாட்டில் விற்பனை செய்து வருகிறது.
மாருதி நிறுவனம் தற்போது கிராண்ட் விட்டாரா மற்றும் ஜிம்மி ஆகிய கார்களையும் தனது ஏற்றுமதி கார்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த புதிய கார்கள் தற்போது புதிதாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் ஃபிரான்ஸ் என்ற கிராஸ் ஓவர் எஸ்யூவி கார் சுஸூகி நிறுவனத்தின் தலைமை இடமான ஜப்பான் இருக்கும் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஏற்றுமதி என்பது சுமார் மூன்று மடங்கு வளர்ந்துள்ளது. சர்வதேச அளவில் நிறுவனம் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் அதிக அளவிலான விற்பனை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிறுவனம் 2030ம் ஆண்டு அரையாண்டில் 7.5 லட்சம் வாகனங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸூகி நிறுவனம் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகள் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில் இந்தியாவின் மையமாகக் கொண்டு நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது இந்தியாவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தி தரும். இந்த மைல்கள் சாதனைக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்.


Click it and Unblock the Notifications








