இந்த 3 காரும் அட்டர் ஃபிளாப்! வெறும் 312 கார் தான் வித்திருக்குது! என்ன கார் தெரியுமா
இந்தியாவில் மாநில நிறுவனம்தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயார் செய்து விற்பனை செய்யும் முதன்மையான நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் மாருதி நிறுவனம் மக்களுக்கு தேவையான பல்வேறு வாகனங்களை விற்பனை செய்தாலும், அந்நிறுவனத்தின் ஒரு சில வாகனங்களின் விற்பனை மிக மோசமான நிலையில் இருக்கிறது. இப்படியாக மாருதி நிறுவனத்தின் மூன்று கார்கள் கடந்த மாதம் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் பல்வேறு விதமான புதிய கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்களும் விருப்பத்திற்கு ஏற்ப கார்களை வாங்க முடியும் என்ற சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. மார்க்கெட்டில் விற்பனையாகும் ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு விதமான அம்சங்கள் உள்ளன.

இதில் அதிகமாக மக்களை கவர்ந்த நிறுவனமாக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. இந்த நிறுவனம்தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான காராக மாருதி நிறுவனத்தின் இருக்கிறது. இதுபோக நிறுவனத்தில் வேகன்ஆர், ஈக்கோ, டிசையர், கிராண்ட் விட்டாரா, உள்ளிட்ட சிறப்பாக விற்பனையாகும் கார்கள் இருக்கின்றன.
மேலே பட்டியலில் உள்ள கார்கள் எல்லாம் மாதம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. அதே நேரத்தில் மாருதி நிறுவனத்தின் சில கார்கள் ஷோரூமில் தூங்கிக் கொண்டிருக்கிறது. 1000 என்ன 700 வாடிக்கையாளர்களைக் கூட இந்த வாகனங்கள் கவரவில்லை. இதனால் இதன் விற்பனை மந்தமாக இருக்கிறது.

மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ ஆகிய கார்கள் தான் இவ்வளவு குறைவான விற்பனையை பெற்றுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் சியாஸ் 662 கார்களையும், ஜிம்னி 599 கார்களையும், இன்விக்டோ 312 கார்களும் விற்பனையாகி உள்ளன. மாருதி நிறுவனத்தில் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாவது ஆச்சரியமான விஷயமாகும். இந்த மூன்று கார்களும் சேர்த்து 1573 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது.
இதில் இன்விக்டோ கார்தான் இருப்பதிலேயே குறைவான விற்பனையாக 312 என்ற விற்பனையை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எக்ஸ்-பிரெஸ்ஸோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மாதம் மட்டும் 1708 வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதில் மாருதி நிறுவனத்தின் இன்விக்டோ காரை பொருத்தவரை டொயோட்டா நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகி வரும் இன்னோவா காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காராகும்.

டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கும் நிலையில், அதை அடிப்படையாகக் கொண்டு மாருதி நிறுவனம் உருவாக்கிய கார் மிக குறைவான விற்பனையை பெற்று வருவது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இதன் விலை தான் என பலர் கூறுகிறார்கள். இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 25.21 லட்சம் முதல் ரூபாய் 28.92 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
மாருதி இன்விக்டோ காரின் இன்ஜினை பொறுத்த வரை 2.0 லிட்டர் டிஎன்ஜிஏ இன்ஜின் எலெக்ட்ரிக் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது இ-சிவிடி கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 183 எச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9.5 நொடியில் பிக்கப் செய்து விடுகிறது.
இந்த காரின் சிறப்பு அம்சமே இதன் மைலேஜ் தான். இந்த கார் இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 23.24 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இந்த கார் டொயோட்டா இன்னோவா காருக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது. இந்த காரில் 7 பேர் வரை பயணம் செய்ய முடியும். இந்த காரில் ஏகப்பட்ட தொழில்நுட்பம்சங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன. மார்க்கெட்டில் உள்ள போட்டி நிறுவனங்களின் தயாரிப்பு இணையாகவே இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனம் இந்த இன்விக்டோ காரை அதிக விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதால் இந்த விலையில் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையே குறைவாக இருக்கிறது. மேலும் அவர்கள் பெரும்பாலும் பிரபலமான கார்களை விரும்புகிறார்கள். இன்விட்டோ போன்ற கார்களை அவர்கள் விரும்பாததால் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கார் விற்பனையாகி உள்ளது.


Click it and Unblock the Notifications









