இப்பதான் வந்துச்சு அதுக்குள்ள 2 லட்சம் பேர் வாங்கிட்டாங்களா? அப்படி இந்த கார்ல என்ன இருக்குது?

மாருதி நிறுவனம் பலேனோ என்ற காரை அடிப்படையாகக் கொண்டு எஸ்யூவி காராக ஃபிராங்க்ஸ் என்ற காரை கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய சாதனை மைல் கல்லை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

மாருதி நிறுவனம் பலேனோ என்ற காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இது ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காராக விற்பனை செய்து வந்தது. இதற்கு இடையில் இந்திய மார்க்கெட்டில் எஸ்யூவி கார்களுக்கு மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கார்களை அதிகம் விற்பனை செய்ய துவங்கி விட்டார்கள்.

Maruti Fronx 2 lakh milestone

எஸ்யூவி செக்மெண்டில் பலமான அடியை எடுத்து வைப்பதற்காக பலேனோ காரை அடிப்படையாகக் கொண்ட புதிய எஸ்யூவி கார் ஒன்றை உருவாக்கியது. அந்த காருக்கு ஃபிராங்க்ஸ் என பெயர் வைத்தது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இந்த கார் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விற்பனைக்கு வந்தது. இந்த கார் விற்பனைக்கு வந்தது முதல் சிறப்பான வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான ஃபிராங்க்ஸ் கார்கள் தயாராகி விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மாருதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த கார் விற்பனைக்கு வந்த முதல் 10 மாதத்திலேயே ஒரு லட்சம் கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டன. இதில் 17 மாதத்திற்கு பிறகு தற்போது இது 2 லட்சம் என்ற இலக்கை தாண்டி உள்ளது.

Maruti Fronx 2 lakh milestone

இந்த மாருதி ஃபிராங்க்ஸ் கார் 2024-ம் நிதியாண்டில் முதல் மாதமான 2023 ஏப்ரல் மாதமே அறிமுகப்படுத்தப்பட்டதால் இந்த ஓராண்டு சிறப்பாக விற்பனையாகி அந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 1,34,735 கார்கள் விற்பனையாகி இருந்தன. இது சராசரியாக மாதம் 11,228 கார்கள் என்ற விற்பனைக்கு நிகராகும் .

அதன் பிறகு தற்போது ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 59,967 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இந்த விற்பனையை பார்க்கும் போது மாதம் 11,993 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 400 வாகனங்கள் அதிகமாகும். அதாவது 15 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Maruti Fronx 2 lakh milestone

இந்த 2025ம் நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையை வைத்து டாப் 20 யூனிட்டிலிட்டி வாகனங்களின் பட்டியலை பார்க்கும்போது இந்த காருக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தம் 5298 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கையில் தான் 2 லட்சம் என்ற மைல் கல்லை எட்டியுள்ளது.

மாருதி நிறுவனம் நெக்ஸா பிராண்டின் மூலம் விற்பனை செய்யும் எஸ்யூவி கார்களிலேயே மிக விரைவாக 2 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டிப் பிடித்த முதல் கார் இதுதான். இதற்கு முன்னர் மாருதி கிராண்டு விட்டாரா கார் இந்த எண்ணிக்கை எட்டி பிடிக்கும் போது இதைவிட கூடுதலாக 5 மாதங்கள் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மாருதி நிறுவனம் தற்போது மார்க்கெட்டில் மொத்தம் 7 யூட்டிலிட்டி வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. அதில் நான்கு யுட்டிலிட்டி வாகனங்கள் விற்பனைக்கு சரீவை சந்தித்துள்ளன. மூன்று வாகனங்கள் மட்டுமே விற்பனையில் வளர்ச்சியை சந்தித்துள்ளன. அதில் இந்த ஃபிராங்க்ஸ் காரும் ஒன்றாகும். இதுபோக மாருதி பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா ஆகிய கார்களும் விற்பனையில் வளர்ச்சியை சந்தித்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதாக இருக்கிறது. இந்த கார் தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகி வருகிறது. மார்க்கெட்டில் கடும் போட்டி நடக்கும் எஸ்யூவி கார் செக்மெண்டில் இந்த கார் தொடர்ந்து நல்ல விற்பனையில் இருப்பது மாருதி நிறுவனத்திற்கு ஒரு நற்பெயரை பெற்று தந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 20, 2024, 15:58 [IST]
English summary
Maruti fronx 2 lakh milestone sales details
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X